Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
Navratri 2025 Day 1: நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி தேவியின் அருளை பெற என்ன செய்யணும் தெரியுமா?
Navratri 2025 Day 1 Maa Shailputri: மகாளய அமாவாசைக்கு பின் 9 நாட்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் அம்மனுக்கு உரிய விரதம் தான் நவராத்திரி விரதம். இந்த நவராத்திரியின் 9 நாட்களும் அம்மனின் 9 சக்திகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் வழிபடுவார்கள். அந்த வகையில் நவராத்திரியின் முதல் நாளில் துர்கா தேவியின் சைலபுத்ரி தேவிக்கு வழிபடப்படுகிறது.
சைலபுத்ரி என்பது துர்கையின் முதல் வடிவமாகும். சைலபுத்ரி என்றால் மலைகளின் மகள் என்று பொருள். புராணங்களின் படி, சைலபுத்ரியின் பின் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. அது என்னவெனில், தட்சன் என்ற ஒரு பெரிய மன்னன் இருந்தான். அவனுக்கு சதி என்ற மகள் இருந்தாள், அவள் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். சதி சிவபெருமானை மணக்க விரும்பினாள். ஆனால் தட்சன் அந்த திருமணத்தை ஏற்கவில்லை, ஏனெனில் சிவபெருமான் தனது மகளுக்கு ஏற்ற கணவன் என்று அவன் நம்பவில்லை.

இருப்பினும் சதி சிவபெருமானை மணந்து இமயமலையில் வசிக்க தொடங்கினார். தட்சனுக்கு சிவன் மீது பெரிய அளவில் வெறுப்பு இருந்தார். ஒருமுறை ஒரு முக்கியமான யாகத்திற்கு அனைத்து தேவர்கள் மற்றும் தெய்வங்களை தட்சனை அழைத்து, சிவனை அழைக்கவில்லை. சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை என்பதை அறிந்ததும் சதி மனம் உடைந்தாள். இதுக்குறித்து கேட்க சதி சிவனின் பேச்சை மீறி, யாகத்திற்குச் செல்ல முடிவு செய்தாள். அந்த யாகத்தில் சிவனையும் அவரது சீடர்களையும் விமர்சித்த தட்சன், தனது மகள் சதியையும் அவமதித்தான்.
அவமானத்தைத் தாங்க முடியாமல், சதி யாகத்தின் நெருப்பில் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டார். சதியின் மரணத்தை அறிந்ததும், சிவபெருமான் துக்கத்திலும் கோபத்திலும் மூழ்கினார். சதியின் மரணத்திற்குப் பிறகு, சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில், சதி இமயமலையின் மகளாக மறுபிறவி எடுத்து, சிவபெருமானுடன் மீண்டும் இணைந்தார்.
சைலபுத்ரியின் வடிவம்
சைலபுத்ரி ஒரு காளையின் மீது சவாரி செய்து, தலையில் பிறை, கையில் திரிசூலம், தாமரை போன்றவற்றை ஏந்தியவாறு இருப்பார். இவர் ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்கத்தையும் தீமையை நன்மை வென்றதையும் அடையாளப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
பூஜை நேரம்
நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி தேவிக்கு பூஜை செய்ய சிறந்த நேரம் காலை 06.15 மணி முதல் 7.15 மணி வரை மற்றும் மாலை 4.45 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். மேலும் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து எந்த நேரத்திலும் பூஜைகளை செய்யலாம்.
சைலபுத்ரி தேவியின் நிறம்
சைலபுத்ரி தேவிக்கான நிறம் வெள்ளை. இந்த வெள்ளை நிறம் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் அமைதியைக் குறிக்கிறது. திங்கட்கிழமை வெள்ளை நிற ஆடை அணிவது, சைலபுத்ரி அன்னையின் அருளைப் பெறுவதாகவும் , பக்தர்கள் உள் அமைதி, அமைதி மற்றும் பாதுகாப்பு உணர்வை உணர உதவுவதாகவும் நம்பப்படுகிறது.
சைலபுத்ரி தேவிக்கான மலர்
சைலபுத்ரி தேவிக்கு மிகவும் பிடித்தமான பூ, மல்லிகை. அதனால், நவராத்திரியின் முதல் நாள், சைலபுத்ரி தேவிக்கு மல்லிகை பூ கொண்டு அலங்காரம் செய்து, பூஜைகளை செய்து வழிபடுவது சிறந்தது.
சைலபுத்ரி தேவிக்கான பிரசாதம்
சைலபுத்ரி தேவிக்குரிய நிறம் வெள்ளை என்பதால் வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம், வெள்ளை மொச்சை, பால் பாயாசம் போன்ற வெள்ளை நிற இனிப்புகளை படைத்து வழிபடலாம்.
சைலபுத்ரி தேவிக்கான மந்திரம்
"ஓம் தேவி ஷைலபுத்ராய் நமஹ
ஓம் தேவி ஷெயில்புத்ராய் ஸ்வாஹா வந்தே வஞ்சித் லாபாய, சந்திரார்தாக்கிருதசேகரம் விருஷருதம்
சூலதாராம் சைலபுத்ரிம் யஷஸ்வினிம்"
நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி தேவியை நினைத்து பூஜைகள் செய்வதால், வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, வெற்றி பாதைக்கான வழி திறந்து, வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ்வீர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications