Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
அக்டோபர் 24-க்குள் இந்த மாதிரியான கனவுகள் வந்துச்சுன்னா.. உங்கள தேடி பணம் வரப் போகுதுன்னு அர்த்தம்..
Navratri 2023: இந்த ஆண்டின் நவராத்திரியானது அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் மிகவும் சிறப்பாக பூஜை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.
மேலும் நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வணங்கும் போது, துர்கா தேவி தனது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. இதனால் துர்கா தேவியை மகிழ்விக்க ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் பலகாரங்கள் செய்து படைத்து வழிபடுவது வழக்கம்.

இப்படிப்பட்ட நவராத்திரி நாட்களில் காணும் சில கனவுகள் மிகவும் மங்களகரமானது என்பது தெரியுமா? அதுவும் அந்த கனவுகள் துர்கா தேவியின் அருள் கிடைத்துள்ளதைக் குறிக்கிறது. அதோடு இது ஒருவருக்கு வரவுள்ள நல்ல செய்திகளையும், பண வரவையும் குறிக்கிறது. இப்போது எந்த கனவுகள் நவராத்திரி நாட்களில் வருவது மங்களகரமானது என்பதைக் காண்போம்.
சிங்கத்தின் மீது துர்கா தேவி இருப்பது
நவராத்திரி நாட்களில் நீங்கள் உங்கள் கனவில் சிங்கத்தின் மீது துர்கா தேவி சவாரி செய்வதைக் கண்டால், அது மிகவும் மங்களகரமான அறிகுறியாகும். இம்மாதிரியான கனவு வந்தால், பாதியில் நிறுத்தப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு நீண்ட நாட்களாக உங்களை தொந்தரவு செய்து வந்த எதிரிகளை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.
குங்குமமும்.. சிவப்பு வளையலும்..
கனவு சாஸ்திரத்தின் படி, பொதுவாக ஒருவரது கனவில் வளையலும், குங்குமமும் வருவது நல்ல அறிகுறி. அதுவும் நவராத்திரி நாட்களில் இம்மாதிரியான கனவு வந்தால், அது உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப் போகிறது என்பதையும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதையும் குறிக்கிறது.
யானையை காண்பது
பொதுவாக யானை கனவில் வருவது நல்லது. அதுவும் நவராத்திரி காலத்தில் கனவில் யானை வந்தால் அல்லது யானையின் மீது துர்கா தேவி சவாரி செய்வது போன்று வந்தால், அது நல்ல அறிகுறியாகும். இம்மாதிரியான கனவு காண்பரின் பெரிய திட்டம் ஒன்று வெற்றிகரமாக முடியவுள்ளதைக் குறிக்கிறது. மேலும் தடைபட்ட வேலைகளும் வெற்றிகரமாக முடியும்.
பால் அல்லது இனிப்புக்களை காண்பது
நவராத்திரி நாட்களில் உங்களின் கனவில் பாலையோ அல்லது இனிப்பு பலகாரங்களையோ கண்டால், அது உங்களுக்கு நடக்கவுள்ள நல்ல விஷயங்களைத் தான் குறிக்கிறது. அதுவும் இந்த கனவு சமூகத்தில் உங்கள் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கப் போவதைக் குறிக்கிறது. மேலும் உங்களின் பெரிய ஆசைகளும் நிறைவேறப் போவதையும் உணர்த்துகிறது.
துர்க்கையின் சிலை
கனவில் தெய்வங்களைக் காண்பது நல்ல சகுனமாகும். அதுவும் நவராத்திரி நாட்களில் துர்க்கை அம்மனை கண்டால், துர்கா தேவியின் பரிபூர்ண அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம். உங்களின் பூஜையால் துர்கா தேவி மகிழ்ச்சியாக இருப்பதை இந்த கனவு குறிக்கிறது. அதோடு நிறைய பணத்தை சம்பாதிக்கப் போகிறீர்கள் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் போவதையும் இந்த கனவு குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications