Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உங்க வீட்டில் நவராத்திரி கொலு வைக்க ஆசையா இருக்கா? அதை எப்படி வைக்கணும்-ன்னு பாருங்க...
Navratri 2023: கொலு என்பது நவராத்திரியின் போது சிறப்பாக செய்யப்படும் பூஜை ஆகும். இந்த கொலுவின் போது அழ அழகான வண்ணமயமான கொலு பொம்மைகளை படிகளில் வைத்து வழிபடுவது உண்டு. நவராத்திரி என்பது துர்கா தேவிக்காக கொண்டாடப்படும் ஒரு சிறப்பு திருவிழா ஆகும்.
சமஸ்கிருதத்தின் படி "நவ" என்றால் ஒன்பது "ராத்திரி" என்றால் இரவு என்று கூறப்படுகிறது. இந்த ஒன்பது இரவுகளில் மற்றும் பத்து பகல்களில் சக்தியின் ஒன்பது வடிவங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. தசரா என்பது விஜயதசமியின் கடைசி நாளை குறிக்கிறது. இந்த கொலு பண்டிகையன்று நமது புராணங்களில் வரும் கடவுள் பொம்மைகளை வரிசைப்படுத்தி வழிபட வேண்டும்.

இந்த நவராத்திரியின் ஒன்பது நாளை மூன்று பிரிவுகளாக பிரித்து முதல் மூன்று நாட்களை துர்கா தேவிக்காகவும், அடுத்த மூன்று நாட்களை லட்சுமி தேவிக்காகவும், கடைசி மூன்று நாட்களை சரஸ்வதி தேவிக்காகவும் வழிபட வேண்டும்.
கொலுவின் முக்கியத்துவம்
கொலு பல்வேறு புராணக் கதைகள், தசாவதாரம், ராமாயணம், மகாபாரதம், ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் போன்ற பல்வேறு பண்டைய நூல்களைக் காட்டுகிறது. இதன் மூலம் சிறுவர்கள் பண்டைய புராணங்கள் பற்றிய அறிவை பெறுகிறார்கள்.
இதன் மூலம் மதிப்புமிக்க கதைகள் குழந்தைகளுக்கு விவரிக்கப்படுகின்றன. நவராத்திரியின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரும் ஒன்றாக கூடி கொண்டாடுகின்றனர். இதன் மூலம் குடும்பத்தின் மகிழ்ச்சி செழிக்கிறது.
உங்கள் வீட்டில் கொலு வைக்க தேவையான பொருட்கள்:
* கொலு படிகள் மற்றும் கொலு பொம்மைகள்
* கொலு படியை மறைக்க வேஷ்டி அல்லது சேலை. வேஷ்டியை படிகளில் மாட்டுவதற்கு ஊக்குகள் (safety pins)
* இரண்டு குத்துவிளக்குகள்
* படிகளை அலங்கரிக்க அலங்கார விளக்குகள்
* கலச சொம்பு, தேங்காய், மஞ்சள் தூள், புதிய மாவிலை, அரிசி, ஏலக்காய், ரோஸ் வாட்டர்
* நவதானியங்கள், கடுகு அல்லது வெந்தயம் கொண்ட முளைப்பாரிகள்
கொலு வைப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* நவராத்திரி பூஜையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மன் நம் வீட்டுக்கு வருகை தருவதால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் சிலந்தி வலைகள் இல்லாமல் ஒட்டடையடித்து தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* நம்முடைய பூஜையறையை சுத்தம் செய்து அலங்கரித்து கொலுக்கு தேவையான பாத்திரங்களை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* கலச சொம்பை கழுவி தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பொதுவாக கொலு படியை வைக்க கிழக்கு திசை சரியாக இருக்கும். கொலு படியை நீங்கள் அமைத்து விட்ட பிறகு அதை நகர்த்த முடியாது.
* அனைத்து கொலு பொம்மைகளையும் சுத்தமான துணியில் துடைத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
* கதவுகள் மற்றும் ஜன்னல்களை அழகுபடுத்த எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் வையுங்கள்.
* கொலு படியை அலங்கரிக்க செயற்கை மலர் மாலைகள் மற்றும் பட்டுத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
முலைப்பாரியை எப்படி தயார் செய்வது?
நவதானியங்களை விதைத்து இந்த முலைப்பாரி செய்யப்படுகிறது. முலைப்பாரி ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை குறிக்கும் வகையில் செய்யப்படுகிறது. நல்ல அறுவடையை ஆசிர்வதிப்பதற்காக தெய்வங்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்த நவதானியங்கள், கடுகு மற்றும் வெந்தயம் போன்ற தானியங்களை ஒரு சிறிய மண் தொட்டியில் விதைக்கின்றனர். திருவிழா தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பு அவை துளிர் விடும். அதன் பிறகு அவற்றை கொலுவிற்கு முன்னால் வைக்க வேண்டும்.
கொலு மற்றும் கலசத்தை எப்பொழுது ஏற்பாடு செய்ய வேண்டும்?
* மஹாளய அமாவாசை அன்று மாலையில் கொலுப் படிகளில் கொலுப் பொம்மைகளை அமைக்க வேண்டும்.
* மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் காலையில் கொலு அருகில் கலசம் வைக்க வேண்டும். கலசம் வைத்த பிறகு நைவேத்தியம் படைத்து பூஜை செய்யப்பட வேண்டும்.
வீட்டில் கொலுவை எப்படி அமைக்க வேண்டும்?
3, 5, 7, 9 அல்லது 11 என்ற ஒற்றைப்படை எண் அடிப்படையில் கொலு படிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கொலு படிகள் உலோகமாகவோ அல்லது மரமாகவோ இருக்கலாம் அல்லது அட்டை பெட்டிகளை ஒன்று சேர்த்தோ அல்லது மேஜைகளை பயன்படுத்தியோ அமைக்கலாம். இப்பொழுது வேஷ்டி அல்லது பட்டுத் துணியைக் கொண்டு படிகளை அலங்கரித்து கொள்ளுங்கள். பிறகு அலங்கார விளக்குகள் கொண்டு அலங்கரியுங்கள்.
கொலு படிகளின் இரண்டு புறமும் குத்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். கொலு படிகளின் முன்பு கோலம் போடலாம் அல்லது கோலம் ஸ்டிக்கர்களை ஒட்டலாம்.
முதல் படியில் விநாயகர், லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி, விஷ்ணு, சிவன், முருகன் போன்ற உயர்ந்த கடவுள் சிலைகளை வைக்க வேண்டும்.
தசாவதாரம், அஷ்டலட்சுமி போன்ற அவதார தொகுப்புகளை இரண்டாம் மற்றும் மூன்றாம் படியில் வையுங்கள்.
நான்காவது படியில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்கராச்சாரியார், ராகவேந்திரர், சாய்பாபா, மகான்கள் மற்றும் சித்தர்கள் போன்ற ஞான ஆன்மாக்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஐந்தாவது படி சமூகத்திற்காக பங்களித்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், சிறந்த தலைவர்கள், தத்துவவாதிகள் போன்றவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஆறாவது மற்றும் ஏழாவது படிகளில் சாதாரண மனிதர்கள், கோயில் காட்சி, கிராமக் காட்சி, விவசாயம், திருமணக் காட்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாவது மற்றும் ஒன்பதாவது படிகளில் விலங்குகள், பறவைகள், ஊர்ந்து செல்லும் பூச்சிகள், மீன், தாவரங்கள் போன்றவற்றை வையுங்கள்.



Click it and Unblock the Notifications











