Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
நவராத்திரி பற்றி கட்டாயம் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள்!
Navratri 2023: இந்தியாவில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி ஆகும். இந்த நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளில் இனிப்புகள், பரிசுகள் மற்றும் விருந்துகள் என பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது இரவுகளுக்கு அப்புறம் கொண்டாடப்படும் பண்டிகை தசரா ஆகும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆடைகள் வழங்கியும், பரிசுகள் வழங்கியும் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நவராத்திரி அன்று குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதைப்பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்கள்
நவராத்திரி வட மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நாட்டின் மேற்குப் பகுதியினர் இந்த பண்டிகையை தாண்டியா அல்லது கர்பாவுடன் கொண்டாடுகின்றனர். தெற்குப் பகுதியினர் இந்த பண்டிகையை பொம்மைக் கொலுவுடன் ஆரம்பிக்கின்றனர். வட இந்தியர்கள் இந்த பண்டிகையின் ஒன்பது நாட்களும் விரதம் இருக்கின்றனர்.
நவராத்திரி பற்றி குழந்தைகள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பல்வேறு சடங்குகள், சிறப்பு பூஜைகள் மற்றும் விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த திருவிழாவில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு வெவ்வேறு புராணக்கதைகள் குழந்தைகளுக்காக சொல்லப்படுகிறது.
ஆயுத பூஜை
ஆயுத பூஜை நவராத்திரியின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவியின் வழிபாட்டுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனைத்து வகையான கருவிகள், புத்தகங்கள், இசைக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு பூக்கள் மற்றும் மாலைகளை சூட்டி ஆராதனை காட்டி வழிபடுகின்றனர். பத்தாம் நாள் "விஜய தசமி" கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்பது விஷயங்கள்:
நவராத்திரி என்ற சொல் இரண்டு சமஸ்கிருத வார்த்தையின் கலையாகும். நவ என்பது ஒன்பது என்றும், ராத்திரி என்பது இரவையும் குறிக்கிறது. இந்த விழா நாடு முழுவதும் ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. ஒன்பது தேவிகள் அளவு கடந்த சக்தியைக் கொண்டுள்ளது. இந்த ஒன்பது தேவிகளில் ஷைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காலராத்திரி, மஹாகௌரி மற்றும் சித்திதாத்ரி போன்ற தெய்வங்கள் அடங்கும்.
நவராத்திரி வருடத்திற்கு ஐந்து முறை கொண்டாடப்படுகிறது. இருப்பினும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஷரத் நவராத்திரி எனப்படும் நவராத்திரி மிகவும் பிரபலமானது மற்றும் பரவலாக பின்பற்றப்படும் ஒன்றாகும்.
அரக்கன் மகிஷாசுரனை வீழ்த்திய துர்கா தேவியின் வெற்றியை கொண்டாடும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை அழிப்பதற்காக கடவுள்களால் படைக்கப்பட்டார். மகிஷாசுரனும், துர்கா தேவியும் ஒன்பது பகல் மற்றும் ஒன்பது இரவுகள் சண்டையிட்டனர். இறுதியில் பத்தாம் நாள் எருமைத்தலை அரக்கனான மகிஷாசுரனை துர்கா தேவி கொன்றார்.
எருமைத்தலை அரக்கனான மகிஷாசுரனை கொன்றது இன்னும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் வெற்றியின் நினைவாக விலங்குகள் பலியிடப்படுகின்றன.
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் மக்கள் அனைவரும் தங்கள் தொழில் மற்றும் வேலை சார்ந்த கருவிகளை வணங்குகின்றனர். தென்னிந்தியாவில் இந்த பூஜை ஆயுத பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வாகனங்கள், இயந்திரங்கள், கணினிகள், மென்பொருட்கள் எல்லாவற்றிற்கும் பொட்டு வைத்து வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி வரும் தேதிகள் இந்து சந்திர நாட்காட்டியின்படி அமைக்கப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரும் அஸ்வின் சந்திர மாதத்தின் முதல் நாளாகும். நவராத்திரி முடிந்த உடன் தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வட மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில், நவராத்திரி பிரபலமான நிகழ்வான ராம் லீலாவுடன் கொண்டாடப்படுகிறது. ராவணனின் பெரிய உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு தசரா முடிவடைகிறது. இது இராவணன் மீது ராமர் பெற்ற வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது.
புராணத்தின் படி, கடவுள்கள் துர்கா தேவிக்கு வருடத்திற்கு ஒரு முறை தனது தாயாரை தரிசிக்க ஒன்பது நாட்கள் அவகாசம் அளித்தனர். இந்த ஒன்பது நாட்கள் துர்கா தேவிக்கு தன் தாயாரை காணக்கூடிய வரம் கிடைத்தது. இந்த பண்டிகை தாயும் மகளும் ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications