Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
20,000 அடி ஆழத்தில் பசிபிக் கடலில் கிடைத்த மர்ம முட்டைகள்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
நம் உலகம் நாம் நினைப்பதை விடவும் மிகவும் வித்தியாசமானது மற்றும் மர்மங்கள் நிறைந்தது. ஆராய்ச்சியாளர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் உலகம் பற்றிய கண்ணோட்டத்தையும், புரிதலையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் 20000 அடிக்கும் அதிகமான ஆழத்தில் கடல் தரையில் மர்மமான ஜெட் கருப்பு முட்டைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மர்மமான முட்டைகளை விட அவற்றுக்குள் என்ன இருந்தது என்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் அது அத்தகைய ஆழத்தில் இருக்கும் முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் மாற்றியுள்ளது.

இந்த மர்ம முட்டைகள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டன?
ஊடக அறிக்கைகளின்படி, ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் கடல் தளத்தை ஆராய்ந்தபோது, பசிபிக் பெருங்கடலில் 6,200 மீட்டர் (சுமார் 20,341 அடி) ஆழத்தில் இந்த முட்டைகளை கண்டுபிடித்து உள்ளது.
பார்ப்பதற்கு அச்சுறுத்தும் தோற்றமுடைய மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும் இந்த முட்டைகள், கடல் தளத்தின் ஆழமான பகுதியான 'அபிசோபெலஜிக் மண்டலம்' என்று அழைக்கப்படும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கடல் ஆராய்ச்சியாளரான யசுனோரி கானோ, முட்டைகளை மேற்பரப்புக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய முடிவு செய்தார், ஆனால் எதிர்பாராத விதமாக பல முட்டைகள் உடைந்திருந்ததாலும் மற்றும் மோசமாக சேதமடைந்திருந்ததாலும் அவற்றில் நான்கு முட்டைகளை மட்டுமே மீட்க முடிந்தது.
கருப்பு முட்டைகளுக்குள் என்ன இருந்தது?
கானோ இந்த மர்மமான கருப்பு முட்டைகளை ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் முதுகெலும்பில்லாத உயிரினங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பினார், அவர்கள் இவை உண்மையில் தட்டையான புழுக்களைக் கொண்ட சிறிய சிறிய கூடுகளாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். பயாலஜி லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட முட்டைகள் குறித்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியரான கெய்ச்சி ககுய், இதுபோன்ற தனது அனுபவத்தில் இதுபோன்ற "தட்டையான புழு கூடுகளைப் பார்த்ததில்லை" என்று கூறினார்.
முட்டையை வெட்டி திறந்தபோது, அதன் உள்ளே பால் போன்ற வெள்ளை நிற திரவப் பொருள் ஒன்று முட்டையிலிருந்து கசிந்ததாக கூறப்படுகிறது. உள்ளே, ஒரு ஓட்டில் சிறிய வெள்ளை உடல்கள் பொதிந்திருப்பதைக் கண்டறிந்தனர், மேலும் அது பிளாட்டிஹெல்மின்த்ஸ் கொண்ட ஒரு கூடு என்பதை உணர்ந்தனர், இது பொதுவாக தட்டையான புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இவ்வளவு ஆழத்தில் தட்டையான புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும். முன்னதாக, 5,200 மீட்டர் ஆழத்தில் தட்டையான புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சமீபத்திய கண்டுபிடிப்பு, கடல்களுக்கு அடியிலும் தட்டையான புழுக்கள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்க முடியும் என்பதற்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது.
ஆய்வின்படி, முட்டைககளின் டிஎன்ஏ பகுப்பாய்வு, இந்த தட்டையான புழுக்கள் பிளாட்டிஹெல்மின்த் என்ற ஃபைலத்தின் கீழ் கண்டுபிடிக்கப்படாத இனங்கள் என்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும் இந்த தட்டையான புழுக்கள் ஆழமற்ற நீரில் வாழும் உயிரினங்களிலிருந்து அதிக வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
