Latest Updates
-
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
இதுவரை 20,000 பேர் காணாமல் போன மர்மம் நிறைந்த 'அலாஸ்கா முக்கோணம்'.. இங்க போன யாரும் திரும்ப வந்ததே இல்லையாம்..
Alaska Triangle: உலகில் மர்மங்கள் நிறைந்த இடங்கள் நிறைய உள்ளன. அதில் மிகவும் பிரபலமான ஒரு இடம் தான் பெர்முடா முக்கோணம். இந்த பகுதியை கடப்பவர்கள் மாயமாய் மறைந்துவிடுவார்கள். இதுவரை இந்த பகுதியை கடந்த முயன்ற பலர் மாயமாய் மறைந்துள்ளனர்.
ஆனால் இந்த பெர்முடா முக்கோணத்தைப் போன்றே மற்றொரு மர்மம் நிறைந்த ஒரு பகுதி பூமியில் உள்ளது. இது தான் அலாஸ்கா முக்கோணம். இது வடக்கு கடலோர நகரமான உட்கியாக்விக்கு அருகில் உள்ளது. இந்த அலாஸ்கா முக்கோணத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

அலாஸ்கா முக்கோணம் 1970-களின் முன்பிருந்தே உள்ளது. அப்போது இந்த முக்கோண பகுதியில் 20,000-க்கு மேற்பட்டோர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். இதனால் தான் இந்த பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ளதென IFL சயின்ஸ் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து எடுத்த புள்ளிவிவரப்படி, அலாஸ்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியான 2,250 பேர் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அலாஸ்கா முக்கோணத்தில் மிகவும் பிரபலமான இருவரும் காணாமல் போயுள்ளனர். அதில் 2 அரசியல்வாதிகள், அமெரிக்க ஹவுஸ் மெஜாரிட்டி தலைவர் தாமஸ் ஹேல் போக்ஸ் மீற்றும் அலாஸ்கா காங்கிரஸை சேர்ந்த நிக் பெகிச் ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் பெகிச்சின் உதவியாளர் ரஸ்ஸல் பிரவுன் மற்றும் பைலட் டான் ஜோன்ஸ் ஆகியோருடன் இந்த பகுதியில் அக்டோபர் 16, 1972 அன்று விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்துடன் சேர்ந்து காணாமல் போனார்கள். எவ்வளவு தேடியும் இவர்கள் உயிருடனோ அல்லது அவர்களின் சடலங்களோ கிடைக்கவில்லை. இருப்பினும், இதுவரை காணாமல் போனவர்களின் சிலரது எச்சங்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் பின் 25 வயதுடைய கேரி ஃபிராங்க் சோதர்டன், 1970-களில் இந்த பகுதியில் வேட்டையாடும் போது காணாமல் போனார். எவ்வளவு தேடியும் இவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இவரது மண்டை ஓடு இரணடு தசாப்தங்களுக்கு பின் வடகிழக்கு அலாஸ்காவில் உள்ள போர்குபைன் ஆற்றல் கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டை ஓட்டை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், இது சோதர்டனுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர் கரடியால் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அலாஸ்கா முக்கோணத்தில் மர்மமாக காணாமல் போக எது காரணமாக இருக்கலாம்?
அலாஸ்கா முக்கோணத்தில் அசாதாரண காந்த செயல்பாடு இருப்பதாக சில கோட்பாடுகள் கூறுகின்றன. இன்னும் சிலர் இந்த பகுதியில் வேற்று கிரகவாசிகள் அதிகம் வசித்து வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஆயினும், அலாஸ்கா முக்கோணம் ஒரு அடர்ந்த மற்றும் பெரிய அளவிலான ஒரு வனப்பகுதி. இங்கு நிறைய கொடிய மிருகங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த காரணத்தினாலும், இந்த பகுதிக்கு செல்பவர்கள் மாயமாய் மறைவதோடு, கண்டுபிடிக்க முடியாமல் போகவும் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
