Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்க சின்ன விஷயங்களுக்கு கூட அழும் அழுமூஞ்சிகளாக இருப்பார்களாம்... ரொம்ப பலவீனமானவங்க இவங்க!
ஜோதிடம் பல நூற்றாண்டுகளாக மக்களை வசீகரிக்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது, இது கிரக நிலைகள் மூலம் ஆளுமைகளை வடிவமைக்கும் அண்ட சக்திகள் மூலம் நம்மை வழிநடத்துகிறது. அதன்படி ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் ஜோதிட சாஸ்திரம் தனித்துவமானதாக இருக்கிறது.
அழுகை என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு அடிப்படை உணர்வாகும். தாங்க முடியாத துக்கம், நீண்ட எதிர்பார்த்த வெற்றி மற்றும் சாதனை போன்ற தருணங்களில் அழுகை நிச்சயம் வரும். ஆனால் விதிவிலக்காக சிலர் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட எளிதில் கண்ணீர் சிந்துபவர்களாக இருப்பார்கள்.

அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கலாம். இந்த பதிவில் எதற்கெடுத்தாலும் அழும் அழுமூஞ்சி ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
நண்டை அடையாளமாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், உணர்ச்சிகரமான சந்திரனால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் வலுவான உள்ளுணர்வு இயல்புக்கு பெயர் பெற்ற, கடக ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக உணர்கிறார்கள் மற்றும் அனைத்து முடிவுகளையும் தங்கள் இதயங்களால் எடுக்கிறார்கள்.
அவர்களின் பச்சாதாப நிறைந்த ஆன்மா தனிப்பட்ட அனுபவங்களினாலோ அல்லது மற்றவர்களின் செயல்களினாலோ அவர்கள் அடிக்கடி அழுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய இரக்க குணம் அவர்களின் பலவீனமாக மற்றவர்களால் கருதப்படலாம்.
மீனம்
மீன்களால் குறிக்கப்படும் மீன ராசிக்காரர்கள், உள்ளுணர்வு மற்றும் கனவுகளின் கிரகமான நெப்டியூனால் ஆளப்படுகிறார்கள். இந்த இரக்கமுள்ள மனிதர்கள் மிகுந்த உணர்திறனுடன் உலகத்தை வழிநடத்துகிறார்கள், மகிழ்ச்சி மற்றும் துக்கம் இரண்டிலுமே கண்ணீர் சிந்துவதை அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மீன ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளுடன் ஒரு ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளார்கள், அதனாலேயே அவர்கள் எளிதில் கண்ணீர் சிந்துபவர்களாக இருக்கிறார்கள்.
விருச்சிகம்
தேளால் குறிப்பிடப்படும் விருச்சிக ராசிக்காரர்கள், மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் மர்மமான வெளித்தோற்றத்திற்குக் கீழ் தீவிர உணர்ச்சிகளின் குளம் உள்ளது.
விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும், ஆழ்ந்த அனுபவங்கள் அல்லது உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடுகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் கண்ணீர் சிந்துவார்கள்.
ரிஷபம்
வலிமையான காளையால் குறிக்கப்படும் ரிஷப ராசிக்காரர்கள் , காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். தங்களின் எதார்த்தமான இயல்புக்கு பெயர் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சி ஆழத்தால் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தலாம்.
கலை, இசை, அல்லது இதயப்பூர்வமான செயல்பாடுகள் ஆகியவற்றால் அவர்கள் அடிக்கடி அழுகிறார்கள். எளிதில் அழுவது மற்றும் உணர்ச்சிவசப்படுவது தங்களின் பலம் என்று ரிஷப ராசிக்காரர்கள் கருதுகிறார்கள்.
துலாம்
நியாயத்தராசால் குறிப்பிடப்படும் துலாம் ராசிக்காரர்கள், சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், நல்லிணக்கம் மற்றும் சமநிலைக்கான அவர்களின் அன்பை வலியுறுத்துகிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், மேலும் இந்த உயர்ந்த விழிப்புணர்வு அவர்கள் அடிக்கடி அழுவதற்கு வழிவகுக்கும். அவர்கள் தங்களுக்காக மட்டுமல்ல, அவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளுக்காகவும் அழுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுளள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
