நரபலி முதல் நரமாமிசம் சாப்பிடுவது வரை உலகின் ஆபத்தான பழங்குடியினர்... இங்க போன உயிருக்கு உத்திரவாதம் இல்ல...

உலகம் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பிறகு மிகவும் சுருங்கி விட்டது. இந்த காலகட்டத்திலும் சில பழங்குடியினர் வெளி உலகத்துடன் தொடர்பைத் தவிர்க்கிறார்கள், மேலும் இப்போதும் கற்காலத்திலேயே வாழ்கிறார்கள்.

இப்போதும் 100 க்கும் மேற்பட்ட வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் உள்ளனர், மேலும் இதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். இந்த பழங்குடி சமூகங்கள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவை, தங்கள் நிலங்கள், கலாச்சாரங்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க தனிமைப்படுத்தப்படுவதை அவர்களும் விரும்புகிறார்கள்.

Most Dangerous Tribes in the World in Tamil

ஏனெனில் வெளிஉலகத்தின் தலையீடு தங்கள் கலாச்சரத்தை அழித்துவிடும் என்று அவர்கள் நினைக்கிரறார்கள். இவர்களின் இடத்திற்குள் நுழைபவர்களை தற்காப்புக்காக கொலை செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த பதிவில் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான பழங்குடியினர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சென்டினலிஸ்

சென்டினலீஸ்கள் தற்போது அறியப்பட்ட மிகவும் ஆக்ரோஷமான பழங்குடியினராக உள்ளனர். சென்டினலீஸ் என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் பழங்குடியின்ராவர். வெளிநாட்டவர்களுடனான அனைத்து தொடர்புகளையும் அவர்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். அவர்களின் தீவிற்கு சென்ற பாதிரியார் கொல்லப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

கரிப்ஸ்

இவர்கள் மனித இறைச்சியை உண்ணும் பழக்கம் கொண்ட பழங்குடியினர். கரீபியன் தீவுகளின் சில பகுதிகளில் நரமாமிசத்தை சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கும் மக்கள் இன்னும் வாழ்கின்றனர். இந்த பழங்குடியினர் நரமாமிசத்தை பின்பற்றுவதால், அவர்கள் கரிப்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். உலகில் நரமாமிசத்தை சாப்பிடும் முதல் குழு இவர்களே.

பின்னர், இது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவடைந்து, உலகின் மிகவும் ஆபத்தான பழங்குடியினரில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. கரிப்ஸ் என்பது கொலம்பஸ் வழங்கிய பெயர். கனிபா என்பது கரிபாவில் இருந்து திரித்த வார்த்தையாகும், இதற்கு மனிதர்களை சாப்பிடுபவர்கள் என்று அர்த்தம்.

ஆஸ்டெக்

ஆஸ்டெக்குகள் வரலாற்றில் இதுவரை அங்கீகரிக்கப்படாத மிகவும் வன்முறையான பழங்குடியினராவர். கொலம்பஸ் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்த பழங்குடியினர் அமெரிக்க கண்டத்தில் இருந்தனர். இந்த பழங்குடியினர் மனிதர்களை நரபலி கொடுக்கிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மனிதர்களின் இதயத்தை வெட்டி வெளியே எடுக்கிறார்கள், பின்னர் உடலை சமைக்கிறார்கள்.

அவர்கள் ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்திலும் இதைச் செய்கிறார்கள், இது அவர்கள் கடவுள்களாக ஒப்புக் கொள்ளும் சூரியனையும் சந்திரனையும் மகிழ்விக்கும் என்று நினைக்கிறார்கள். ஆஸ்டெக்குகள் உலகின் மிகவும் ஆபத்தான பழங்குடியினராக கருதப்படுகிறார்கள்.

அவா

உலகில் அழிந்து வரும் பழங்குடியினர்களில் ஒருவராக இவர்கள் கருதப்படுகிறார்கள். அவர்கள் அமேசான் காடுகளில் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் காட்டுத்தீ போன்றவற்றால் அவர்கள் இனம் தொடர்ந்து அழிந்து வருகிறது. இவர்கள் நாடோடிகளாக வேட்டையாடுபவர்கள் மற்றும் அற்புதமான உயிர்வாழும் திறன்களைக் கொண்டுள்ளனர்.

இந்த பழங்குடியின இளைஞர்களுக்கு தங்கள் கைகளால் வில் மற்றும் அம்புகளை எப்படி உருவாக்குவது, எப்படி வேட்டையாடுவது போன்றவற்றை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பப்புவான்

பப்புவா நியூ கினியாவில் 40க்கும் அதிகமான தொடர்பு இல்லாத பழங்குடியினர் இருக்கலாம். இந்த பழங்குடியினர் பெரும்பாலும் வேட்டையாடுபவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள், மேலும் சில சமயங்களில் மனிதர்களை வேட்டையாடுதல் மற்றும் நரமாமிசம் சாப்பிடுதல் போன்ற நடைமுறைகளுடன் தொடர்புடையவர்கள். வெளி உலகத்துடனான அவர்களின் தொடர்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அல்லது மிகவும் குறைவாக உள்ளது.

மாஷ்கோ பைரோ

மாஷ்கோ பைரோ பெரு-வில் உள்ள 15 தொடர்பில்லாத பழங்குடியினரில் ஒன்றாகும், இவர்கள் வெளி உலகத்துடனான தொடர்பை முற்றிலும் தவிர்க்கிறார்கள். அவர்கள் பாரம்பரியமாக உணவுக்காக ஆமை முட்டைகளை வேட்டையாடி சேகரிக்கின்றனர், அரசாங்க தணிக்கைகளின் படி அவர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 800 பேரே உள்ளனர்.

ஷுரி

தீவிர மரபுகள், ஆபத்தான குச்சி சண்டை சடங்குகள் மற்றும் வலிமிகுந்த உதடு பிளவுகள் ஷுரி பழங்குடியினரின் தனித்துவமாக இருக்கிறது. தென்மேற்கு எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஷூரி அல்லது சுராமா மக்கள் தற்போதும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை தொடர்கின்றனர். இந்த பழங்குடியினர் வெளியாட்கள் அவர்களின் வாழ்க்கை முறையை பார்க்க அனுமதித்திருந்தாலும், அவர்களை பார்க்கும் போது நிச்சயம் நமக்குள் பயம் ஏற்படும்.

யானோமாமி

வெனிசுலாவிற்கும் பிரேசிலுக்கும் இடையில் அமேசான் அடர்ந்த காட்டில் குடியேறிய யானோமாமி பழங்குடியினர் உலகெங்கிலும் உள்ள மிகவும் ஆபத்தான பழங்குடியினரில் ஒருவராக எளிதாக இருக்க முடியும். இந்த மக்கள் வெளி உலகத்துடனான தொடர்பு காரணமாக மதுபானம், நோய்கள் மற்றும் குழப்பங்களை எதிர்கொண்டாலும், அவர்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அயோரியா

பராகுவே மற்றும் பொலிவியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் அயோரியோ பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளாக நவீன நாகரிகத்துடனான எந்தவொரு தொடர்பையும் எதிர்த்தனர். அவர்கள் மூதாதையர் வேட்டையாடுபவர்களாக இருந்தார்கள், அவர்கள் காடழிப்பு காரணமாக நகரங்களை அடைய தேர்வு செய்தனர். இருப்பினும், காட்டில் இன்னும் உயிர் பிழைப்பவர்கள் வெளியாட்களால் அணுகப்பட்டால் ஆபத்தானவர்களாக இருக்கலாம்.


கொரோவாய்

கொரோவாய் பழங்குடியினர் தென்கிழக்கு மேற்கு பப்புவாவின் காடுகளில் நீதிக்கான வழிமுறையாக நரமாமிசத்தை கடைப்பிடிக்கும் பழங்குடியினராவர். கொரோவாய் மக்களிடையே விலங்கு பலி பொதுவானது மற்றும் அவர்களின் வாழ்க்கை மந்திரம் மற்றும் ஆவிகளை சுற்றி வருகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக அவர்கள் நவீன உலகத் தொடர்பை வரவேற்றிருந்தாலும், அவர்கள் இன்னும் உலகின் ஆபத்தான பழங்குடியினரில் ஒன்றாக உள்ளனர்.

Desktop Bottom Promotion