Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
15,000 பேரை கொன்ற ஹிட்லரின் மிருகத்தனமான மருத்துவ சோதனைகள்... இனிமே கனவில் கூட இப்படியெல்லாம் நடக்ககூடாது!
ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியின் போது, நாஜி கட்சியின் மருத்துவ முகாம்களில் அருவருப்பான மருத்துவ பரிசோதனைகளை செய்தன. ஜெர்மன் மருத்துவர்களின் நெறிமுறைகள் தனிநபரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில் இருந்து சமூகத்தின் கூட்டு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கி நகர்ந்தது, அதற்காக தங்கள் கைதிகள் மற்றும் போர்வீரர்கள் மீது வலிமிகுந்த பயங்கரமான சோதனைகளை செய்தார்கள்.

வரம்பற்ற நிதி மற்றும் அளவற்ற சுதந்திரத்தால் மயக்கமடைந்த மோசமான மனநிலையால், நாஜி விஞ்ஞானிகள் சம்மதமே வாங்காமல் பல மனிதர்களின் மீது, முதன்மையாக வதை முகாம்களில் அனைத்து வகையான சித்திரவதை சோதனைகளையும் நடத்தினர். இதன் விளைவாக 15,000 க்கும் அதிகமான மக்கள் இறந்தனர், மேலும் 400,000 பேர் மலட்டுத்தன்மை அல்லது பல்வேறு ஊனங்களால் பாதிக்கப்பட்டார்கள்.
மருத்துவ வரலாற்றில் இந்த கொடூரமான அத்தியாயத்தின் இறுதி முடிவு நியூரம்பர்க் கோட் ஆகும், இது ஜெர்மனியின் நியூரம்பர்க்கில் "டாக்டர்கள் சோதனை"க்குப் பிறகு, மனித பரிசோதனைகள் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வகுக்கப்பட்ட பத்து விதிகளின் தொகுப்பாகும்.
இந்த விதிகளில் பட்டியலிடப்பட்ட கொள்கைகளில் பங்கேற்பாளர்களின் தன்னார்வ சம்மதத்தைப் பெறுதல், அனைத்து தேவையற்ற வலிகளையும் தவிர்ப்பது மற்றும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பரிசோதனையை முடிக்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.
நாஜி முகாம்களில் நடத்தப்பட்ட கொடூரமான மருத்துவ பரிசோதனைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தடைசெய்யப்பட்டு இருந்தாலும், அவை மீண்டும் நடக்காமல் இருக்க அவற்றை நாம் மறந்துவிடக் கூடாது. வரலாற்றையே நடுங்க செய்த நாஜி முகாம்களில் நடத்தப்பட்ட கொடூர மருத்துவ பரிசோதனைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கட்டாய மருத்துவ பரிசோதனைகள்
நாஜி மருத்துவர்கள், நோய்த்தொற்றைத் தணிக்க மற்றும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் பல்வேறு சேர்மங்களின் செயல்திறனைப் பரிசோதிப்பதற்காக மயக்க மருந்து வழங்காமல், சோதனையில் பங்கேற்பவர்களுக்கு போர்க்களம் போன்ற காயங்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவார்கள். பெரும்பாலும், அவர்கள் காயங்களுக்கு பாக்டீரியாவைப் பயன்படுத்துவார்கள் அல்லது காயங்களை தரையில் தேய்ப்பார்கள். இந்த சோதனையிலிருந்து தப்பிய ஒருவர் கூறுகையில்,
" அவர்கள் 10 சென்டிமீட்டர் நீளமும் 2 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரு வெட்டுக்காயத்தை ஏற்படுத்தினர், என் கையின் உள்ளங்கைக்கு மேலே. மயக்கமருந்து இல்லாமல் எனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை, நோய்த்தொற்றை உண்டாக்குவதற்கு சுத்திகரிப்பு செய்யப்படாத கருவிகளைக் கொண்டு வேண்டுமென்றே செய்யப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் வெவ்வேறு மருந்து கிரீம்கள் மற்றும் திரவங்களுடன் கட்டுகளை கட்டினர். ஒவ்வொரு நாளும் அவர்கள் வெட்டுக்களைப் பரிசோதித்தார்கள், ஒவ்வொரு முறையும் வெட்டு குணமடையும்போது, அவர்கள் அதை மீண்டும் திறந்து மீண்டும் காயத்தை ஏற்படுத்தினார்கள்" என்று கூறினார்.
உறுப்பு மாற்று பரிசோதனைகள்
இந்த கொடூரமான பரிசோதனைகளில், Ravensbruck வதை முகாமில் உள்ள விஞ்ஞானிகள் கைதிகளின் மூட்டுகளை வெட்டினர் - மீண்டும், மயக்க மருந்து இல்லாமல், அந்த உறுப்புகளை மற்றவர்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய முடியுமா என்பதை சோதித்தார்கள. இதன்மூலம் காயம்பட்ட நாஜி வீரர்களை உடனடியாக குணப்படுத்தலாம் என்று நம்பினார்கள், ஆனால் இந்த சோதனைகள் தோல்வியடைந்தன.
உயர சோதனை
நாஜி எஸ்எஸ் மருத்துவர் சிக்மண்ட் ராஷர் உயிரைப் பறிக்கும் பரிசோதனைகளில் ஒன்றை செய்தார். அவரும் லுஃப்ட்வாஃபே மருத்துவ சேவையின் உறுப்பினர்களும் டச்சாவ் வதை முகாமில் உள்ள 200க்கும் மேற்பட்ட கைதிகள் மீது இதனை செய்தார். அவர் மனிதர்கள் மீது அதிக உயரத்தில் ஏற்படும் விளைவுகளை உருவகப்படுத்த, ஒவ்வொருவராக குறைந்த அழுத்த அறைக்குள் தங்கவைத்தார் மற்றும் அவர்கள் மீது உயர் அழுத்த சோதனைகளை செய்தார்.
எண்பது பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் உயர நோய் காரணமாக இறந்தனர், மீதமுள்ளவர்கள் கொல்லப்பட்டனர், அதனால் பிரேத பரிசோதனைகள் செய்ய முடிந்தது. உறுப்பில் அதிக உயரத்தின் உடனடி விளைவுகளை நேரடியாகக் கவனிப்பதற்காக, கைதிகள் உயிருடன் இருக்கும்போதே, ராஷர் கைதிகளின் மூளையைப் பிரித்ததாக சில வதந்திகள் கூறுகிறது.
கடல்நீர் சோதனை
நாஜி மருத்துவர் ஹான்ஸ் எப்பிங்கர் ஆறு முதல் பன்னிரெண்டு நாட்களுக்கு கடல்நீரை மட்டுமே குடித்து மனிதர்கள் உயிர்வாழ முடியுமா என்று பரிசோதனை செய்தார். தொண்ணூறு பேர் உணவு இல்லாமல், இந்த சோதனையைத் தாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆய்வின் முடிவில் நீரிழப்பு மற்றும் பட்டினியால் பெரும்பாலானவர்கள் கடுமையாக காயமடைந்தனர்.
கடல் நீரைக் குடித்து ஏன் மனிதர்களால் வாழ முடியாது? NOAA இன் கூற்றுப்படி, "மனித சிறுநீரகங்கள் உப்பு நீரை விட குறைவான உப்புத்தன்மை கொண்ட சிறுநீரை மட்டுமே உருவாக்க முடியும். எனவே, கடல்நீரைக் குடிப்பதன் மூலம் எடுக்கப்பட்ட அதிகப்படியான உப்பை அகற்ற, நீங்கள் குடித்ததை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் இறக்கிறீர்கள்" என்று ஆய்வு முடிவு கூறியது.
உறைபனி பரிசோதனைகள்
ராஷர் நாஜி இராணுவ வீரர்களை உறைய வைக்கும் குளிர்ந்த நீரில் அல்லது கடுமையான குளிர்காலக் குளிரில் உயிர்வாழ சிறந்த முறையைக் கண்டறிய விரும்பினர். இதனால், டச்சாவில் உள்ள சுமார் 300 கைதிகள் பல மணிநேரம் பனி நீரில் மூழ்கடிக்கப்பட்டனர் அல்லது சப்ஜெரோ குளிரில் நிர்வாணமாக விடப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் சுமார் 80 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற வியக்கத்தக்க குறைந்த வெப்பநிலையை அடைந்தவுடன், நாஜி மருத்துவர்கள் அவர்களை உயிர்ப்பிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தனர், சூடான தூக்கப் பைகள், வெதுவெதுப்பான குளியல், சூரிய விளக்குகள், உடலுறவு என பல வழிகளை முயற்சித்தனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்தனர்.



Click it and Unblock the Notifications
