Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
ஒரு வருடத்திற்கு பின் கன்னி செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
Mercury Will Make Badra Rajyoga: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இதன் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இத்தகைய புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு ஒரு வருடத்திற்கு பின் செல்கிறார். இதனால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

பத்ரா ராஜயோகமானது ஒருவருக்கு அனைத்துவிதமான சுகங்களையும் தரக்கூடியது. இந்த யோகம் உருவாவதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தால் பல காரியங்கள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
இப்படிப்பட்ட பத்ரா ராஜயோகம் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் உருவாகவுள்ளது. இப்போது இந்த ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நிறைய பணத்தை செலவிடக்கூடும். வியாபாரம் சிறப்பாகவும், லாபகரமாகவும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் ஆர்டர்கள் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் கையில் பணம் அதிகம் சேரும். புதிய வேலைகளை இக்காலத்தில் தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications