Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
புதன்-சூரியன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம்: ஜூன் 15 வரை இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்..!
Budhaditya Rajyoga On June 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2023 ஜூன் 07 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருகிறார். இதனால் புதன் பெயர்ச்சிக்கு பின் ரிஷப ராசியில் புதன் சூரிய சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும். யோகங்களில் புதாதித்ய ராஜயோகம் ஒரு மங்களகரமான யோகமாகும்.

இந்த யோகத்தால் பல ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, தொழிலில் நல்ல லாபத்தையும், வெற்றியையும் காணவுள்ளார்கள்.
2023 ஜூன் மாத புதாதித்ய ராஜயோகம்
நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஜூன் 07 ஆம் தேதி சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த ரிஷப ராசியில் சூரியன் பயணிப்பதால், ஜூன் 07 முதல் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது ஜூன் 15 வரை நீடித்திருக்கும். இப்போது புதாதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் முதலீடு செய்தால், நற்பலன் கிடைக்கும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலம் பொற்காலமாக இருக்கும். சொத்துக்களால் நன்மை கிடைக்கும். நிலத்தில் முதலீடு செய்தால், அது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நற்செய்திகள் தேடி வரும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பார்கள். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications