Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
ஒரு வருடத்திற்கு பின் சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: இன்று முதல் இந்த 5 ராசிகளுக்கு சூப்பரா இருக்க போகுது..
Mercury Retrograde In Leo On 24 August 2023: நவகிரகங்களில் புதன் மங்களகரமான கிரகமாகும். இந்த புதன் வியாபாரம், புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் தனது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் இதுவரை சிம்ம ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி, புதன் சிம்ம ராசியில் வக்ரமாகி பயணிக்கிறார்.

பொதுவாக கிரகங்கள் வக்ரமானால் நல்லதா, கெட்டதா என்று பலரும் கேட்கலாம். சுப கிரகங்கள் வக்ரமானால், அதனால் நற்பலன்கள் கிடைக்கும். அதுவே அசுப கிரகங்கள் வக்ரமானால், கெடு பலன்கள் கிடைக்கும்.
புதன் சுப கிரகம் என்பதால், இதன் வக்ர காலத்தில் பல ராசிக்காரர்கள் தொழிலில் நற்பலன்களையும், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவார்கள். இப்போது சிம்ம ராசியில் வக்ரமாகியுள்ள புதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். சிறப்பான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அனைத்தையும் நல்ல புரிதலுடன் கையாள்வீர்கள். காதலிப்பவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் வர வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். முக்கியமாக நிதி பிரச்சனைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இன்னும் காத்திருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை சற்று குழப்பமாக இருக்கும். நிதி பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை தரும் ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு அல்லது புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனல் இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். வேலையை மாற்ற முயற்சிப்பவர்கள் சற்று காத்திருக்க வேண்டும். காதல் வாழ்க்கை ஏற்றஇறக்கமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கும் வெற்றி கிடைக்கும். நிதி நிலை மேம்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் மிகுந்த ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களும் அதிக லாபத்தைப் பெறலாம். முக்கியமாக இக்காலத்தில் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் வெளிநாட்டில் நல்ல வேலையைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலமானது இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. சிலர் குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திக்கலாம். தொழிலில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும். தந்தைவழி சொத்தால் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். புதிய பொறுப்புக்களைப் பெறக்கூடும். தொலைதூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் நேர்மறை முடிவுகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் பண இழப்பை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். கடின உழைப்பின் பலனைப் பெற காத்திருக்க வேண்டும். கணவன்-மனைவி இடையே சிறு மன அழுத்தம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிடலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் சிறப்பான சாதனைகளை புரிவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலை, இக்காலத்தில் வெற்றிகரமாக முக்கப்படும். தன்னம்பிக்கை அதிகம் நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் சருமம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் தொழிலில் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். நிதி ரீதியாக, இக்காலத்தில் நிறைய சேமிக்க முடியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது மற்றும் இந்த செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications