Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
ஒரு வருடத்திற்கு பின் கன்னி செல்லும் புதனால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்..
Mercury Make Badra Rajyoga On October 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ராசிகளின் அதிபதியாக உள்ளன. அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
கிரகங்களிலேயே புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இந்த புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஒரு வருடத்திற்கு பின் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு அக்டோபர் 01 ஆம் தேதி நுழையவுள்ளார். புதன் கன்னி ராசிக்கு செல்வதால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். சொல்லபோனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகிறது மற்றும் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பத்ரா ராஜயோகத்தால் புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அரசியல், ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இந்த யோகத்தால் பெரிய ஜாக்பாட் அடிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும். இக்காலத்தில் பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பத்ரா ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். மிகுந்த ஆற்றலுடன் இருப்பீர்கள்.
பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். புதிய வேலையைத் தொடங்கினால் அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள். வணிகர்கள் சிலருக்கு பண ஆதாயத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பத்ரா ராஜயோகமானது நற்பலனை வழங்குவதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் அக்டோபர் முதல் மேம்படும். இதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலர் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications