Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
புதன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!
Mercury Made Vipreet Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்கள் சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். இந்த யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் ஜூலை மாதம் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ரமாகி பின்னோக்கி பயணிக்கத் தொடங்கினார்.

இப்படி புதன் சிம்ம ராசியில் வக்ரமானதால் விபரீத ராஜயோகம் உருவானது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் புதனின் அருளால் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.
குறிப்பாக தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் மற்றும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் எதிலும் வெற்றி கிடைக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியுள்ளார். மேலும் விபரீத ராஜயோகமும் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைத்து, நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகி இருப்பதோடு, விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு இக்காலத்தல் சொத்து மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பதோடு, அவரும் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார். அதே வேளையில் சனியின் பார்வையும் குறைந்து வருவதால், பல வழிகளில் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகியிருப்பதோடு விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சனி மற்றும் ராகுவின் பார்வையின் வலிமையும் குறைந்து வருகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பங்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். தங்கம்-வெள்ளி வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications