Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த 4 ராசி ஆண்கள் குறும்புத்தனத்தால அவங்க மனைவியை படாதபாடு படுத்துவர்களாம்... உங்க கணவர் ராசி இதுல இருக்கா?
திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனால் அந்த திருப்புமுனை எப்படிப்பட்டது என்பது ஒருவருக்கு அமையும் வாழ்க்கைத்துணையைப் பொறுத்தது. ஒருவர் எப்படிப்பட்ட கணவராக இருப்பார் என்பதை அவர்களின் ராசி தீர்மானிக்கக்கூடும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சில ராசிகள் பொதுவாக அவர்களின் உறவுகளில் விளையாட்டுத்தனமான எரிச்சலை ஏற்படுத்தும் நடத்தைகளை செய்து கொண்டே இருப்பார்கள். அது கேலியாக இருந்தாலும் அல்லது கிண்டலாக இருந்தாலும், சில ஆண்கள் தங்கள் உறவுகளில் குறும்புத்தனமான செயல்களின் மூலம் உறவை சுவாரஸ்யமாக வைத்திருக்கும் திறமையைக் கொண்டுள்ளனர். குறும்புத்தனமான செயல்களால் உறவை சுவாரஸ்யமாக்கும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
இந்த ராசி ஆண்கள் அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் விளையாட்டுத்தனமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். கணிக்க முடியாத நடத்தை மற்றும் குறும்புத்தனமான செயல்களால் தங்கள் துணையை எப்போதும் சுவாரஸ்யமாக வைத்திருக்கும் திறமை அவர்களுக்கு உள்ளது.
நகைச்சுவையான வார்த்தைகள் முதல் தன்னிச்சையான செயல்கள் வரை, மிதுன ராசி ஆண்கள் சூழ்நிலையை இலகுவாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள். இருப்பினும், அவர்களின் மனநிலையை விரைவாக மாற்றும் போக்கு சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும், குறிப்பாக அவர்களின் துணை சீரியஸாக பேசும்போது அவர்களின் குறும்பு எரிச்சலை ஏற்படுத்தும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமை குணம் கொண்டவர்கள், அவர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையான நடத்தை மற்றும் கவர்ச்சியான ஆளுமை அவர்களை தங்கள் மிகவும் விரும்பக்கூடியவர்களாக மாற்றுகிறது.
இருப்பினும், அவர்களின் விளையாட்டுத்தனமான கேலி சில சமயங்களில் எரிச்சலூட்டும் எல்லைக்கு சொல்லலாம், குறிப்பாக அவர்களின் துணையை சிறுமைப்படுத்தும் கேலிகளை செய்யும்போது. குறும்புத்தனம் இருந்து போதிலும், சிம்ம ராசிக்காரர்கள் நம்பமுடியாத அளவிற்கு விசுவாசமான துணையாக இருப்பார்கள், அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சிக்கு முக்கித்துவம் கொடுக்கிறார்கள்.
தனுசு
தனுசு ராசி ஆண்கள் எப்போதுமே சாகசக்காரர்களாக இருப்பார்கள், தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உற்சாகத்தையும் சிலிர்ப்பையும் தேடுவார்கள். அவர்களின் தன்னிச்சையான இயல்பு மற்றும் சாகசத்தின் மீதான காதல் சில நேரங்களில் அவர்களின் உறவுகளில் விளையாட்டுத்தனமான குறும்புகளாகவும், செயல்களாகவும் வெளிப்படலாம்.
அவர்களின் துணை அவர்களுடைய செயல்களை பெரும்பாலும் விரும்பினாலும், சாகசத்துக்கான அவர்களின் நிலையான தேவை விரக்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் தருணங்களும் வரும்.
கும்பம்
கும்ப ராசி ஆண்கள் தங்கள் விசித்திரத்தன்மை மற்றும் வாழ்க்கையின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வுகள் சொல்வதை அப்படியே பின்பற்றுகிறார்கள், தங்கள் தனித்துவமான வினோத எண்ணங்களை வெளிப்படுத்த அவர்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை.
அவர்களது துணை அவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தைப் பாராட்டினாலும், கும்ப ராசிக்காரர்கள் சில சமயங்களில் அவர்களின் விசித்திரமான நடத்தை மற்றும் வழக்கத்திற்கு மாறான யோசனைகளால் எரிச்சலின் எல்லைகளைத் மீறலாம். இருப்பினும், அவர்களின் புதுமையான சிந்தனை மற்றும் திறந்த மனப்பான்மை பெரும்பாலும் எரிச்சலின் எந்த தருணத்தையும் ஈடுசெய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

