Manmohan Singh: இந்திய பொருளாதாரத்தின் சிற்பி மன்மோகன் சிங் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய உண்மைகள்...!

இந்திய வரலாற்றின் தலைசிறந்த பிரதமர்களில் ஒருவரான மன் மோகன் சிங் நேற்று இரவு தனது 92 வயதில் உடல்நலக் குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி என்று அறியப்படும் மன் மோகன் சிங், 1990 களின் முற்பகுதியில் இந்தியாவை தாராளமயமாக்கல் பாதையில் கொண்டு சென்றதற்காக புகழ் பெற்றவர்.

உலகமே பொருளாதார சிக்கல்களில் சிக்கித் தவித்த போது இந்தியாவை பொருளாதார சரிவிலிருந்து மீட்ட பெருமைக்குரியவர் மன்மோகன் சிங். இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றியது மட்டுமின்றி, அவர் திட்டக் கமிஷனில் பல பதவிகளில் பதவி வகித்துள்ளார் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பணியாற்றிய மன் மோகனின் சிங் பற்றி பலரும் அறியாத தகவல்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Manmohan Singh Unknown Facts About Former Prime Minister Manmohan Singh in Tamil

இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர்

மன்மோகன் சிங் இந்திய வரலாற்றில் 2004 இல் பிரதமரான முதல் சீக்கியர் ஆவார். ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு இரண்டாவது முறையாக தொடர்ந்து பிரதமரானது மன் மோகன் சிங்தான். 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்ததன் மூலம், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் மன் மோகன் சிங்கும் ஒருவர்.

ரிசர்வ் வங்கி to நிதி அமைச்சர்

மன்மோகன் சிங் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் மட்டுமல்ல, பின்னாளில் இந்தியாவின் நிதி அமைச்சரானார். அவருக்கு முன் சி.டி தேஷ்முக் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், அதைத் தொடர்ந்து நிதி அமைச்சராகவும் நாட்டிற்குப் பணியாற்றினார். 1991 மற்றும் 1996 க்கு இடைப்பட்ட காலத்தில் அவர் நிதியமைச்சராக இருந்த இந்த காலம் அவரது எதிர்கால சாதனைகளுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது.

பிரதமர் ஆன நிதி அமைச்சர்

மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்து பிரதமராக உயர்ந்த முதல் நபர் அல்ல. நிதி அமைச்சராக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த நான்கு நபர்களில் ஒருவர். மொரார்ஜி தேசாய், சரண் சிங் மற்றும் விபி சிங் போன்றவர்கள் நிதி அமைச்சராக இருந்து பிரதமர் ஆனவர்கள்.

ஹிந்தி படிக்க முடியாது

மன்மோகன் சிங்குக்கு ஹிந்தி பேசத் தெரிந்தாலும், அந்த மொழியின் எழுத்தை அவரால் படிக்க முடியாது. அவர் பிரதமராக இருந்த போது, ​​அவரது உரைகள் உருது மொழியில் எழுதப்பட்டன, ஏனெனில் அவர் அதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். தென்னிந்தியாவில் இருந்து பல மாநிலங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக பேசும் நேரத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமருக்கே சரளமாக ஹிந்தி பேச தெரியாத என்பது முக்கியமானது.

மின்சாரம் இல்லாத ஊரில் வளர்ந்தவர்

அவர் தனது வாழ்க்கையின் முதல் பன்னிரண்டு ஆண்டுகளை காஹ் கிராமத்தில் வாழ்ந்தார். அந்த கிராமத்தில் மின்சாரம், குழாய் தண்ணீர் மற்றும் பள்ளி இல்லை. மன்மோகன் சிங் பள்ளிக்குச் செல்ல பல மைல்கள் நடந்து செல்வார். பல நாட்கள் அவர் மண்ணென்னை விளக்கு வெளிச்சத்தில் படித்தார்.

சர்வதேச பாராட்டு

1993 ஆம் ஆண்டில், யூரோமனி மற்றும் ஏசியாமனி ஆகியவற்றால் அவரது சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்களுக்காக "ஆண்டின் சிறந்த நிதி அமைச்சர்" என்று அவர் பாராட்டப்பட்டார். அவர் நிதியமைச்சர் பதவியை வகித்தபோது மற்றும் இந்தியாவின் முக்கியமான பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளில் ஈடுபட்டபோது இரண்டு விருதுகள் பெற்றார்.

விருப்பமில்லாத அரசியல் தொடக்கம்

1962 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மன்மோகன் சிங்கிற்கு அரசாங்கத்தில் ஒரு பதவியை வழங்கினார், ஆனால் மன்மோகன் சிங் தனது கல்வி வாழ்க்கையில் ஆர்வமாக இருந்ததால் அமிர்தசரஸில் உள்ள தனது கல்லூரியில் கற்பிக்க ஆர்வமாக இருந்ததால் அதை நிராகரித்தார். மன்மோகன் சிங்கின் அரசியல் பிரவேசம், பொதுச் சேவையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையால் உந்தப்பட்டது.

Story first published: Friday, December 27, 2024, 10:42 [IST]
Desktop Bottom Promotion