Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
மகாசிவராத்திரி 2024: 300 வருடங்களுக்கு பின் மகாசிவராத்திரியில் உருவாகும் அரிதான யோகம் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது
Mahashivratri 2024: இந்த வருட மகாசிவராத்திரியில் 300 வருடங்களுக்கு பின் பல அரிதான சம்பவங்கள் நிகழப்போகிறது. இந்த அரிதான சம்பவங்களில் சிவ யோகத்துடன் சர்வதா சித்தி யோகம் மற்றும் சுக்ர பிரதோஷம் இணைந்து உருவாகிறது. இந்த அதிர்ஷ்டமான யோகம் வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கபோகிறது. இந்த சிவராத்திரில் வரப்போகும் கூடுதல் சிறப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வருட புனித மகாசிவராத்திரி மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த வருடம் பல அரிதான யோகங்கள் மகாசிவராத்திரி அன்று உருவாகிறது, இதனால் இந்த சிவராத்திரி கூடுதல் ஸ்பெஷலானதாக கருதப்படுகிறது.

ஜோதிடர்களின் கணிப்புகளின் படி, இந்த வருட மகாசிவராத்திரியில் சர்வதா சித்தி யோகத்துடன், சிவ யோகமும் ஒன்றாக வருகிறது. இது மட்டுமின்றி சுக்ர பிரதோஷ விரதமும் இந்த நாளில் வருகிறது. சுக்ர பிரதோஷ விரதம் வியாபாரத்தின் வளர்ச்சிக்கும், வேலையில் முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அரிதான யோகம் என்னென்ன பலன்களை அளிக்கிறது மற்றும் பூஜை செய்ய சிறந்த நேரம் எதுவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
300 வருடத்திற்கு பின் மகாசிவராத்திரியில் உருவாகும் அரிதான யோகம்
ஜோதிடர்களின் கணிப்புகளின் படி, 300 வருடங்களுக்கு பின் மகாசிவராத்திரி அன்று உருவாகும் இந்த யோகத்தில், சர்வதா சித்தி யோகம் நம்முடைய அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் மற்றும் சிவ யோகம் தியானம் செய்யவும், மந்திரங்கள் உச்சரிக்கவும் சிறந்த காலமாகும். சிவ யோகம் மகாசிவராத்தி அன்று நாள் முழுவதும் நீடிக்கிறது. சிவ யோகம் அதிகாலை 12:46-லிருந்து தொடங்குகிறது மற்றும் சர்வதா சித்தி யோகம் மகாசிவராத்திரி அன்று காலை 06:38 லிருந்து 10:41 வரை நீடிக்கிறது.
வேத ஜோதிடத்தின் படி, மகாசிவராத்திரி கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசி பங்குனி மாதத்தில் சர்வதா சித்தி யோகத்துடன் சேர்ந்து வருகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு இந்த நாளில் திருவோண நட்சத்திர நாளில் சிவ யோகத்துடன் சர்வதா சித்தி யோகமும் வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது பக்தர்களுக்கு இருமடங்கு பலன்களை அளிக்கும்.
சிவ யோகம்
சிவ யோக நாளில் சிவபெருமானை வழிபடுவது என்பது ஈசனின் அருளை பெற்றுத்தரும் மற்றும் இதனால் அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறந்த பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சித்த யோகம்
சித்த யோகம் விநாயக பெருமானுடன் தொடர்புடைய நாளாகும். விநாயகர் நம் வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்க கூடியவர். இந்த நாளில் விநாயகரை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் அகற்றும். இந்த நாளில் செய்யப்படும் வேலைகள் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை.
திருவோண நட்சத்திரம்
திருவோண நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவனாவார். இந்த நட்சத்திரத்தில் செய்யப்படும் எந்த வேலையாக இருந்தாலும் அனுகூலமாக முடியும் என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்கு பிடித்த மாதமும் திருவோண நட்சத்திரத்தின் பௌர்ணமி நாளில்தான் தொடங்குகிறது. இந்த நாளில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக முடிவடையும் என்பது நம்பிக்கை.
சுக்ர பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி
இந்த வருடம் சுக்ர பிரதோஷமும், மகாசிவராத்திரியும் ஒரே நாளில் வருகிறது. சுக்ர பிரதோஷத்தில் மகாசிவராத்திரி வருவ்து மிகவும் அரிதான யோகமாகும். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவது உங்களின் அனைத்து சிக்கல்களையும் நீக்கும். சிவபெருமானையும்-பார்வதி தேவையயும் இந்த நாளில் வழிபடுவது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரும்.
2024 ஆம் ஆண்டிற்கான மகாசிவராத்திரி முகூர்த்தம்:
- பால்குன் சதுர்த்தசி திதி ஆரம்பம்: மார்ச் 8, 09:57 PM
- பால்குன் சதுர்த்தசி திதி முடிவடைகிறது: மார்ச் 9, 06:17 PM
- மகாசிவராத்திரி இரவு பூஜை முஹூர்த்தம்: 12:07 AM முதல் 12:56 AM வரை
- மகாசிவராத்திரி காலை பூஜை முஹுரத்: சூரிய உதயத்தில் தொடங்குகிறது



Click it and Unblock the Notifications
