Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மகா சிவராத்திரி நாளில் நீங்க என்ன செய்யணும்-ன்னு சொல்றோம்..
Maha Shivratri 2024: இந்துக்கள் மேற்கொள்ளும் மிகவும் முக்கியமான விரதங்களுள் ஒன்று தான் மகா சிவராத்திரி. சிவபெருமானின் ஆசியைப் பெற பக்தர்கள் இந்த மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து கண் விழித்து சிவனை வழிபடுவார்கள்.
சிவனுக்கு உரிய நாட்களிலேயே மகா சிவராத்திரி மிகவும் முக்கியமான நாளாகும். இந்து மத நம்பிக்கையின்படி, மகாசிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த நாளாகும், எனவே இந்த நாள் சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாக பக்தர்களால் கருதப்படுகிறது.

இந்த மகா சிவராத்திரி அன்று சிவபெருமானைப் போன்ற ஒரு கணவன் வேண்டும் என்ற விருப்பத்துடன் திருமணமாகாத பெண்கள் விரதமிருப்பார்கள் மற்றும் குடும்ப நலனுக்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் சிவனின் அருளைப் பெற செய்ய வேண்டிய தான தர்மங்கள் குறித்தும், சிவனுக்கு படைக்க வேண்டியவைகள் குறித்தும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒருவரது பிறந்த தேதிப்படி மகா சிவராத்திரி அன்று என்ன செய்தால் சிவனின் அருளைப் பெறலாம் என்பதை இப்போது காண்போம்.
எண் 1
எந்த ஒரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் ஓம் ஹ்ரீம் நம சிவாய என்னும் மந்திரத்தை 51 முறை சொல்ல வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை சொல்லும் போது அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அந்த வேலை கிடைக்கும் மற்றும் அரசு தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, அரசாங்கத்தால் நன்மைகளைப் பெறக்கூடும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
எண் 2
எந்த ஒரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மகா சிவராத்திரி நாளன்று ஓம் ஹௌம் ஜூம் சா என்ற சிவ மந்திரத்தை நாள் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் செல்வம் பெருகும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவ பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது நல்லது.
எண் 3
எந்த ஒரு மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் "ஓம் தத் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ர பிரச்சோதயாத்" என்ற மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. இதனால் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, உடலும், மனம் ரிலாக்ஸாக இருக்கும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
எண் 4
எந்த ஒரு மாதத்திலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஓம் நமசிவாய என்ற சிவ மந்திரத்தை நாள் முழுவதும் சொல்ல வேண்டும். இதனால் சிவனின் அருளால் ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பீர்கள். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பால், தயிர், தேன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
எண் 5
எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஓம் நமோ பகவதே ருத்ரே என்னும் மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. இதனால் கையில் பணம் அதிகம் சேரும் மற்றும் பணப் பிரச்சனைகள் நீங்கும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
எண் 6
எந்த மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஓம் நமசிவாய என்னும் சிவ மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சிவனின் ஆசியால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
எண் 7
எந்த மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் தத்புருஷய விக்ம்ஹே மஹாதேவாய தீமஹி" என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம், சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் இவர்கள் சிவபெருமானுக்கு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
எண் 8
எந்த மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஓம் நமச்சிவாய என்ற சிவ மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் தொழிலில் நல்ல அதிர்ஷ்டம் கிடைப்பதோடு, திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு கரும்புச்சாற்றினால் அபிஷேகம் செய்வது நல்லது.
எண் 9
எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் ஓம் ஹ்ரீம் நம சிவாய என்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சிவனின் ஆசியால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications