Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
மகா சிவராத்திரி நாளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல சிவனின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Maha Shivratri 2024: வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரியானது மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய இந்த மகா சிவராத்திரி நாளில் தான் சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்நாளில் சிவ பக்தர்கள் சிவபெருமானின் ஆசியைப் பெற விரதமிருந்து, சிறப்பு பூஜைகளை செய்து, இரவு முழுவதும் தூங்காமல் சிவனை நினைத்து வழிபாடுகளை செய்வார்கள்.
இப்படிப்பட்ட சிவனுக்குரிய நன்னாளில் ஒருசில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். இப்போது மகா சிவராத்திரி நாளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்
சிவபெருமானுக்கு உரிய மகா சிவராத்திரி நாளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ஜோதிடத்தில் கடவுள் வழிபாட்டின் போது கருப்பு நிற ஆடைகளை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே மகா சிவராத்திரி அன்று கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்கள். இல்லாவிட்டால், சிவனின் ஆசி கிடைக்காது.
இந்த மலர்களை படைக்காதீர்
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு மறந்தும் தாழம்பூவையும், துளசியையும் வாங்கி கொடுத்துவிடாதீர்கள். ஏனெனில் இவை இரண்டுமே சிவபெருமானால் சபிக்கப்பட்டவையாக கூறப்படுகிறது. எனவே இவ்விரண்டையும் மறந்தும் சிவனுக்கு படைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
பிரசாதத்தை சாப்பிடாதீர்
சிவபெருமானுக்கு படைக்கும் எந்த பிரசாதத்தையும் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக சிவனுக்கு உடைத்த தேங்காய் நீரை பிரசாதமாக எடுக்கக்கூடாது. ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தைத் தரும். மேலும் வாழ்க்கையில் வறுமையைக் கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
உடைத்த அரிசியை வழங்காதீர்
பொதுவாக வழிபாடுகளில் உடைத்த அரிசியைப் படைக்கக்கூடாது. அதுவும் சிவபெருமானின் வழிபாட்டில் உடைத்த அரிசியை மறந்தும் பயன்படுத்திவிடாதீர்கள். ஒருவேளை பயன்படுத்தினால், அந்த பூஜை முழுமையடையாது மற்றும் சிவனின் அருளும் கிடைக்காது.
இந்த வில்வ இலைகளை வழங்காதீர்
சிவபெருமானுக்கு வில்வ இலைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மகா சிவராத்திரி நாளில் சிவலிங்க பூஜைக்கு வில்வ இலைகளை கொடுக்கும் போது, பலரும் செய்யக்கூடிய ஒரு தவறு. சேதமடைந்த வில்வ இலைகளை சிவனுக்கு படைப்பது. சிவபெருமானை மகிழ்விக்க மற்றும் அவரது அருளைப் பெற நினைத்தால், மூன்று இலைகளுடனான வில்வ இலைகளையே சிவனுக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும் சிவலிங்கத்தின் மேல் வில்வ இலைகளை வைக்கும் போது, அதன் தண்டுப்பகுதி உங்களை நோக்கி இருக்க வேண்டும்.
மஞ்சள், குங்குமம் பயன்படுத்தாதீர்
சிவபெருமானின் வழிபாட்டில் எப்போதும் மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. என்ன தான் இவ்விரு பொருட்களும் மங்களகரமான பொருட்களாக இருந்தாலும், சிவ வழிபாட்டில் இவை தடை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. வேண்டுமானால் விபூதியை பயன்படுத்தலாம்.
இவற்றை சாப்பிடாதீர்
மகா சிவராத்திரி நாளில் இறைச்சிகளை மட்டுமின்றி, வெங்காயம், பூண்டு போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. அதுவும் விரதம் இருப்பவர்கள், இவற்றை அறவே சேர்க்கக்கூடாது. அப்படி சாப்பிட்டால் சிவனுக்கு கோபம் வரலாம். அதோடு இந்நாளில் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications