Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
மகாசிவராத்திரி 2024: உங்க ராசிப்படி இந்த எளிய மந்திரத்தை சொல்லி சிவபெருமானை வழிபட்டால் அதிர்ஷ்டம் தேடிவருமாம்?
Maha Shivratri 2024: இந்துக்களின் முக்கிய கொண்டாட்டமான மகா சிவராத்திரி திருவிழா, மார்ச் 8, 2024 அன்று கொண்டாடப்பட உள்ளது. ஆன்மீக உலகில் நுழைய விரும்புபவர்களுக்கு இந்த பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த நாளில் சிவபெருமான் முழு ஆற்றலுடன் இருப்பார் என்றும், கேட்கும் வரங்களை அளிப்பார் என்று கூறப்படுகிறது.
விரதம் அனுஷ்டித்தல், மந்திரங்கள் ஓதுதல், புனித நீராடுதல், சிவபெருமானுக்குப் பிடித்த பொருட்களைச் சமர்ப்பித்தல் போன்ற பல்வேறு ஆன்மீகச் செயல்களில் ஈடுபட்டு உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த இது ஒரு சிறந்த நேரம்.

மகா சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படப் போகிறது, சிவபெருமானின் ஆசியைப் பெற உங்கள் ராசிக்கு ஏற்ப சிவபெருமானை எவ்வாறு வழிபடலாம் என்பதற்கான வழிகாட்டியை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மகாசிவராத்திரி அதிர்ஷ்டமான நிகழ்வாக அமையும். இந்த நாளில் சிவபெருமானை மகிழ்விக்க, மேஷ ராசியில் பிறந்தவர்கள் சந்தனத்துடன் பால், தேன் மற்றும் சிவப்பு மலர்களை வைத்து வழிபட வேண்டும். நீங்கள் "நாகேஸ்வராய நம" என்ற மந்திரத்தைக் கூறி ஈசனை வழிபடலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி அன்று மல்லிகைப் பூக்கள் மற்றும் வில்வ இலைகளை வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். செல்வம் மற்றும் தொழில் வளம் பெற ருத்ராஷ்டத்தையும் பாராயணம் செய்ய வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு ஊமத்தை மலர்கள் மற்றும் கரும்புச்சாறை சிவபெருமானுக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும். வாழ்க்கையில் செழிப்பை அடைய "ஓம் நம சிவாய" என்ற பஞ்சாக்ஷரி மந்திரத்தை உச்சரிக்கவும்.
கடகம்
மகாசிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு சந்தனத்தை தடவுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆரோக்கியமாக இருக்க ருத்ராஷ்டாத்யாயீ பாராயணம் செய்யவும். கல்வியில் வெற்றி பெற, மாணவர்கள் இந்த நன்னாளில் மஞ்சள் பூக்களை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சந்தனம், நீர் மற்றும் சிவப்பு பூக்களை வழங்குவதன் மூலம் தங்கள் தொழில் அல்லது அரசியல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் பொருட்டு சிவபெருமான் பக்தி பாடல்களை பாட வேண்டும்.
கன்னி
சிவபெருமானை சாந்தப்படுத்தவும், அவரது ஆசிகளைப் பெறவும், சிவபெருமானை வில்வ இலைகளை வைத்து வழிபடுங்கள். மகா சிவராத்திரி அன்று பஞ்சாக்ஷரி மந்திரத்தை உச்சரிக்கவும். வீட்டில் உள்ள உறவுகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாங்கு கலந்த நீரை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த நாளில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். கல்வியாளர்கள் சிவபெருமானுக்கு நெய்யுடன் பால், இனிப்புகள் மற்றும் குங்குமப்பூ கலந்த இனிப்புகளை வழங்க வேண்டும். சிவலிங்கத்திற்கு வாசனை எண்ணெய் தடவவும். சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற சிவ சஹஸ்ரநாமம் ஸ்தோத்திரத்தை ஜபிக்கவும்.
விருச்சிகம்
பொருளாதாரரீதியாக வெற்றிபெற விரும்பும் விருச்சிக ராசிக்காரர்கள், சர்க்கரை அல்லது தேன், ரோஜா இதழ்கள், வில்வ மரத்தின் வேர் ஆகியவற்றை ஈசனுக்கு அளிக்க வேண்டும். இந்த புனித நாளில் ருத்ராஷ்டக் மந்திரத்தை உச்சரிப்பது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும்.
தனுசு
தொழிலில் வெற்றியை அடையவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறவும் நீங்கள் சிவபெருமானின் சிலைக்கு குங்குமம் கலந்த பால், மஞ்சள் பூக்கள் மற்றும் பாயசத்தை வைத்து வழிபட வேண்டும். நீங்கள் பெற்றோராக விரும்பினால் சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம் மற்றும் சிவாஷ்டகத்தை பாராயணம் செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று, "பார்வதிநாதாய நமஹ்" என்று மந்திரத்தைக் கூற வேண்டும். சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, ஊமத்தைப் பூக்கள், எள் எண்ணெய் மற்றும் வில்வ இலைகளை வைத்து வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புதிய மற்றும் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக சிவஷ்டகம் பாராயணம் செய்ய வேண்டும். உங்களுக்கு குழந்தை வரம் வேண்டுமென்றால் கரும்புச்சாறு, கடுகு எண்ணெய், தேங்காய் தண்ணீர் ஆகியவற்றை இறைவனுக்கு வழங்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சிறந்த சிவபெருமானின் ஆசியைப் பெற சிவலிங்கத்தை சந்தன மாலையால் போர்த்தி சிவபஞ்சாக்ஷரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். குங்குமம், பஞ்சாமிர்தம், தயிர், பால், மஞ்சள் பூக்கள் கலந்த நீரை இறைவனுக்கு வைத்து வழிபடுவது உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும்.



Click it and Unblock the Notifications

