Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
மகா சிவராத்திரி நாளில் இந்த 3 பொருட்களை வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும்.. கஷ்டங்கள் பறந்து போகும்...
Maha Shivratri 2024: சிவபெருமானுக்கு உரிய மிகவும் சிறப்பு வாய்ந்த தினம் தான் மகா சிவராத்திரி. இந்நாளில் சிவபெருமானின் ஆசியை பெற பக்தர்கள் விரதமிருந்து, கண்விழித்து சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபாடுகளை செய்வார்கள். பொதுவாக ஒரு நல்ல நாளில் குறிப்பிட்ட பொருட்களை வாங்குவது நல்லது என்று கூறுவார்கள்.
அந்த வகையில் மகா சிவராத்திரி நாளன்றும் ஒருசில பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கும் மற்றும் சிவனின் ஆசியால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். இந்த ஆண்டு மகா சிவராத்திரியானது மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எந்த பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பது நல்லது என்பதைக் காண்போம்.

நந்தி சிலை
சிவபெருமானின் வாகனம் தான் நந்தி. சிவபெருமானின் வழிபாட்டில் நந்தி ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அப்படிப்பட்ட நந்தியின் சிலையை சிவபெருமானுக்கு உரிய நாளான மகா சிவராத்திரி நாளில் வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. இதனால் சிவனின் அருள் கிடைப்பதுடன், கஷ்டங்கள் நீங்கி, வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
பாதரச லிங்கம்
உங்கள் வீட்டில் லிங்கத்தை வைத்து வழிபட நினைக்கிறீர்களா? அப்படியானால் பாதரச லிங்கத்தை வாங்கி வீட்டில் வைத்து வழிபடுங்கள். அதுவும் இந்த பாதரச லிங்கத்தை மகா சிவராத்திரி நாளில் வாங்கி வீட்டில் வைத்து வழிபடத் தொடங்கினால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்குவதாக நம்பப்படுகிறது. அதோடு இந்த லிங்கம் வீட்டில் இருந்தால், பாவங்கள் நீங்கும் மற்றும் ஆசைகள் நிறைவேறும்.
செப்பு பாத்திரங்கள்
மகா சிவராத்திரி நாளில் வீட்டிற்கு செப்பு பாத்திரங்களை வாங்கி வைப்பது நல்லது. இப்படி செப்பு பாத்திரங்களை வாங்கினால் அது வீட்டில் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிவபெருமானுக்கு பூஜைகளை செய்யும் போது, இந்த செப்பு பாத்திரங்களைப் பயன்படுத்தி செய்தால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
இது தவிர, மகா சிவராத்திரி நாளன்று ஒருசில பொருட்களைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்போது அந்த பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
* மகா சிவராத்திரி நாளில் சிவ லிங்கத்திற்கு நெய் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவது, சிவனின் அருளைப் பெற உதவும்.
* அடுத்ததாக பால் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், அது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
* பின் கருப்பு எள்ளு விதைகளை சிவபெருமானுக்கு படைத்து வழிபட்டால், முன்னோர்களைப் போற்றுவதாக நம்பப்படுகிறது.
* இறுதியாக மகா சிவராத்திரி நாளன்று ஏழை எளியோருக்கு ஆடைகளை தானமாக வழங்குவது, நிதி கஷ்டங்களைப் போக்குவதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications