Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று வரலாற்று லீலையை பறைசாற்றும் விதத்தில் ரிஷப வாகனத்தில் உலா வந்த மீனாட்சி!
Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை மாநகரின் அடையாளம் என்றால் அது சித்திரை திருவிழா தான். வருடம் முழுவதும் மீனாட்சி அம்மனுக்கு திருவிழா என்றால் கூட சித்திரை திருவிழா தான் மிகவும் புகழ் பெற்றது. ஏனெனில் இந்த நன்னாளில் தான் மதுரை அரசியின் பட்டாபிஷேகமும், திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பன்னிரண்டு மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 274 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் அம்மனையும் அப்பனையும் தரிசிப்பது மிகவும் விசேஷமானது.

மதுரை சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி வலம் வருவர். இந்த ரிஷப வாகனம் என்பது சைவ சமய வரலாற்றை பறைசாற்றும் விதமாக கூறப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழா ஆறாம் நாள்
மதுரை சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளில் மதுரை மீனாட்சி அம்மனும் அப்பன் சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் உலா வருகிறார்கள். சுவாமி புறப்படும் முன்பு திருஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டு சைவ சமயத்தை நிலைநாட்டி வெற்றி பெற்ற வரலாறு பட்டர் ஒருவரால் பாடப்படுகிறது. சைவ உலகில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் என நால்வர் இருந்தனர். இவர்கள் சைவ சமயக் குரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இதில் திருஞானசம்பந்தர் நாயனார் தான் தம்முடைய பதிகங்களின் மூலம் தமிழும் சைவமும் தழைக்க காரணமானவர். திருஞானசம்பந்தர் நாயனார் சைவ சமயக் குரவர்களில் முதன்மையானவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். மதுரையில் சைவத்தை தழைக்கச் செய்தது இவர் தான்.
மதுரையில் சைவ சமயத்தை தழைக்கச் செய்த வரலாறு
திருமறைக்காட்டில் சம்பந்தர் தங்கயிருந்த சமயத்தில் மதுரையை கூன் பாண்டியன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். கூன் பாண்டியனுக்கு சமணத்தின் மேல் பற்று உண்டாக பாண்டிய நாட்டு மக்களில் பெரும்பாலோர் அரசனைப் பின்பற்றி சமணத்தைத் தழுவினர். ஆனால் பாண்டிமாதேவியும் அங்கிருந்த அமைச்சரும் சைவர்களாகவே இருந்தனர். சைவத்தைப் பின்பற்றியதால் மதுரையில் இருந்த அவ்விருவருக்கும் சைவ மக்களுக்கும் சமணர்கள் இடையூறுகள் விளைவித்தனர்.
சைவம் தனது ஒளியை பாண்டிய நாட்டில் இழக்க ஆரம்பித்தது. அப்போது தான் சைவ சமயத்தை மீண்டும் மதுரையில் தழைக்கச் செய்ய திருஞானசம்பந்தர் அழைத்து வரப்பட்டார். அப்போது திருஞானசம்பந்தரின் வருகையை அறிந்த சமணர்கள் அரசனிடம் சூழ்ச்சியாகப் பேசி சம்பந்தரை மதுரையில் இருந்து விரட்ட தங்கியிருந்த மடத்திற்கு தீவைக்கப் போவதாகக் கூறினர்.சமணர்கள் திட்டமிட்டபடி சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர்.
இறையருளால் திருஞானசம்பந்தர் நாயனார் அத்தீயிலிருந்து உயிர் தப்பினார். ஆனால் அந்த பாவம் பாண்டிய மன்னனை விட வில்லை. பாண்டிய மன்னன் செய்த தவறால் அவனை வெப்பு நோய் ஒன்று தாக்கியது. அவனின் வெப்பு நோயை போக்க திருஞானசம்பந்தர் சம்பந்தர் இறைவனை நோக்கி பாடினார். இதனால் பாண்டிய மன்னனும் வெப்பு நோயில் இருந்து மீட்டெழுந்தார்.
பிறகு சமணர்களுடன் திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை அங்கு நிலைநாட்ட வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஆனால் இந்த அனல் வாதம் புனல் வாதத்தில் சமணர்கள் தோற்றனர். திருஞானசம்பந்தர் வெற்றி பெற்று மதுரையில் சைவ சமயத்தை நிலைநாட்டினார் என்கிறது வரலாறு.
ஆறாம் நாள் திருவிழாவின் தத்துவமும் பலனும்
ஆறாம் நாள் திருவிழா காமாதி ஆறும், கலையாதி ஆறும், பதமுத்தி ஆறும், வினைக்குணம் ஆறினையும் ஒழித்தற் பொருட்டு நிகழ்வதாகும். ஆறாம் நாள் இரவு விருஷபவாகன சேவை மிகவும் முக்கியமானது. அடியார்களுக்கு ஆண்டவன் அருள்புரிய விருஷப வாகனத்தில் எழுந்தருளி வருவதை புராணாதிகளால் நன்கு அறியலாம். அருள்பெற்ற ஆன்மா விருஷபமாகும்.
ரிஷப வாகனத்தின் வெள்ளைநிறம் அதனிடத்து எவ்வித மாசும் இல்லை என்பதை உணர்த்துகிறது. தர்மம் என்ற அறத்தையே நான்கு கால்களாக கொண்டுள்ளது. சமம், விசாரம், சந்தோஷம், சாதுங்கம் என்ற நான்கு அறங்களும் ரிஷப வாகனத்தின் நான்கு கால்களாக அமைந்துள்ளன. மாசற்ற அறவடிவமான ஆன்மாக்களிடத்து இறைவன் வந்து அமர்வான் என்பதை இது குறிக்கின்றது. இது அனுக்கிரகக் கோலமாகும்.
திருஞானசம்பந்தர் பாடிய ரிஷப வாகன பாடல்
ரிஷப வாகன உலா குறித்து திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ஒரு அழகான பாடலை பாடியுள்ளார்.
"பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமானடிகளே"
மதுரை மீனாட்சி அம்மன் ரிஷப வாகன அலங்காரம்
இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் தங்க மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரப் போகிறாள். அம்மையும் அப்பனும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண பட்டு உடுத்தி இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார்கள். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் அம்மனையும் அப்பனையும் வரவேற்பார்கள்.
மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள் மற்றும் பூ மாலைகளை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள். இன்றைக்கு ரிஷப வாகன உலாவை கண்டு களித்து ஆண்டவனின் அருளை பெறுங்கள்.
ரிஷப வாகன உலா புறப்படும் நேரம்
காலை எழுந்தருளும் நேரம் : 7.30 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.30 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : தங்க ரிஷபம் - வெள்ளி ரிஷபம்
திருவீதியுலா முடிவுற்று கோயிலுக்கு வரும் நேரம் இரவு 11.00 மணியளவில் இருக்கும்.
மாலை 6 மணிக்கு அருள்மிகு திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாறு தல ஓதுவாரால் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications











