Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மதுரை சித்திரை திருவிழா 2023: கள்ளழகர் மோகினி அவதாரம், புஷ்ப பல்லக்கில் பவனி வருதல்
Madurai Chithirai Thiruvizha 2023: உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி அம்மனின் ஆசியையும் அருளையும் பெற்று வருகிறார்கள்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அமைந்தது.

மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர் தன்னுடைய தசாவதாரக் காட்சிகளை பக்தர்களுக்கு காண்பித்து விட்டு இன்றிரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி மக்களுக்கு ஆசிகளை வழங்குகிறார். அத்துடன் மோகினி அவதாரத்திலும் எழுந்தருளுகிறார். இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் மதுரையில் கூடியுள்ளனர்.
கள்ளழகர் மோகினி அவதார வரலாறு
கள்ளழகரை மோகினி அவதாரத்தில் காணக் கண் கோடி வேண்டும். அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அன்று அவர் ஒரு பெண்ணாக காட்சியளிக்கிறார். மகாயோகீஸ்வரனான சிவபெருமானையே சிறிது கணத்துக்குச் சிந்தை கலங்க வைத்த தெய்வீக பேரழகு மோகினிக்கு மட்டுமே உரித்தானது.
மோகினி என்ற பெயருக்கு மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடையவள் என்று பொருளாகும். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்த தலம் மோகினி ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த காலத்தில் பஸ்மாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் சிவனை நோக்கி கடும் தவம்புரிய ஆரம்பித்தான். அவனின் தவத்தை கண்டு சிவபெருமானே நேரடியாக காட்சி தந்தார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பஸ்மாசுரனிடன் அவர் கேட்டார். அதற்கு அவன் நான் எவர் தலையில் கை வைத்தாலும் அவர்கள் உடனே எரிந்து சாம்பலாகி விட வேண்டும் என்ற வரத்தை பஸ்மாசுரன் கேட்டான்.
சிவபெருமானும் பஸ்மாசுரன் கேட்ட வரத்தை கொடுத்தருளினான். அன்றிலிருந்து பஸ்மாசுரன் ஆணவம் தலைக்கேறியது. வரம் கொடுத்த சிவபெருமான் தலையிலேயே கை வைக்க அவன் முயன்றான். அவனிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் ஓடி மறைந்து கொண்டார். அப்பொழுது சிவனைக் காப்பாற்ற எண்ணிய திருமால் மோகினி அவதாரம் பூண்டார்.
மோகினி என்றாலே அழகுக்கு பாட்சயப்பட்ட பெண். அதனால் பஸ்மாசுரன் அவளது அழகில் மயங்கிப் போனான். பஸ்மாசுரனை திசை திருப்ப அவனுடன் மோகினி நடனம் ஆடி அவன் தலையிலேயே அவன் கை வைக்குமாறு செய்து விட்டாள். இதனால் பஸ்மாசுரன் அவன் கையாலயே எரிந்து சாம்பலானான் என்கிறது புராண வரலாறு.
மோகினி அலங்கார தத்துவம்
கடவுளை தரிசிக்க வருபவர்கள் மம மாயா துரத்யமா எனப்படும் தன்னுடைய மாயையைக் கடப்பது சவாலானது. அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்றிலும் பெண்ணாசையை ஒழிப்பது தான் மிகவும் கடினம். ஏனென்றால் ஒரு ஜீவன் சரீரம் எடுக்க ஆரம்பித்த காலம் முதலே பெண்ணாசை இருந்து வருகிறது. இந்த மோகினி அவதாரம் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பெருமாளுக்கும் சூட்டப்படுகிறது.
பாற்கடலை கடையும் போது அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியதால் அமிர்தத்தை இழக்க நேரிட்டது. ஸ்ரீரங்கம் மட்டுமல்லாது அனைத்து வைணவ திருத்தலங்களிலும் பகல்பத்து பத்தாம் நாள் மோஹினி திருக்கோலம் பூண்டு திருமால் காட்சியளிக்கிறார். அப்படித்தான் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மோகினி அவதாரம் ஏற்கிறார். இது மோகினி அவதாரத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.
பூப்பல்லக்கு அலங்காரம்
மே 7 இன்றைக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் வலம் வருகிறார். பிறகு 8 ஆம் தேதி அனைத்து பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு திரும்புகிறார். பூப்பல்லக்கு என்பது எல்லா வகையான மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. மல்லிகை, முல்லை, ரோஜா, சாமந்தி, மரிக்கொழுந்து என அனைத்து வகையான பூக்களால் பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
அதில் கள்ளழகரை அழகாக அலங்கரித்து வண்ண பட்டு உடுத்தி ஆபரணங்கள் சூட்டி மேள தாளங்கள் சூழ, குழந்தைகளின் கோலாட்டம் முதல் அனைத்து வகையான இசை நிகழ்ச்சிகளுடன் கள்ளழகர் புறப்படுகிறார். தீபாராதனை காண்பித்து மக்கள் அனைவரும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டிக் கொள்வார்கள்.
இன்றைக்கு பூப்பல்லக்கு பக்தர்களுக்கு அழகிய காட்சியாக அமைகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோஷம் போட்டு கள்ளழகரை வணங்குவார்கள். இந்த பூப்பல்லக்கு புறப்பாடானது புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன் பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர் மலைக்கு செல்கிறது.



Click it and Unblock the Notifications











