Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி அன்று உருவாகும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Lunar Eclipse On Holi 2024: கிரகங்கள் வானியல் நிகழ்வுகளாக இருந்தாலும், ஜோதிடத்தின் படி கிரகணங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சந்திர கிரகணமும், 2 சூரிய கிரகணமும் ஆகும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நாளில் தான் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் சந்திர கிரகணமானது காலை 10.23 முதல் மாலை 3.20 வரை நீடித்திருக்கும். மேலும் இந்த கிரகணமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி பண்டிகை அன்று நிகழ்கிறது.

இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் மிகுந்த பிரச்சனைகளை சந்திப்பார்கள். மேலும் நிதி இழப்பும், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது சந்திர கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
ஹோலி நாளில் நிகழும் சந்திர கிரகணமானது கடக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை கொண்டு வரும். குறிப்பாக ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனையால் அதிகம் அவதிப்பட நேரிடும். சிலருக்கு நிதி இழப்புக்களும் ஏற்படலாம். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். ஏற்கனவே இதய நோயைக் கொண்டவர்கள் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது தீங்கு விளைவிக்கும். இக்காலத்தில் உங்கள் மீது வீண் பழி சுமத்தப்படலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடையலாம். மேலும் உங்கள் ஆரோக்கியத்திலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு புதிய வேலையையும் இக்காலத்தில் தொடங்காதீர்கள். மேலும் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
சந்திர கிரகணமானது மீன ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். ஆரோக்கியம் மோசமடையும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபத்து ஏற்படலாம். சிலருக்கு நிதி இழப்பு ஏற்படலாம். வியாபாரிகளுக்கு சற்று மந்தமாக இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வணிக ஒப்பந்தங்களையும் செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பேசும் போது கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications