Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த ராசியினரை குபேரருக்கு மிகவும் பிடிக்குமாம்... இதில் உங்கள் ராசி உள்ளதா?
செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். குபேரன் சிவனின் தோழர் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு சிவனின் நண்பர் என்றும் பொருள் கொள்ளும் படியாக சிவசகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு.
சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்பினை பெற்றார் எனவும், பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார் எனவும் சொலப்படுகிறது..

வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை குபேர காலம்' என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும். ஜோதிடத்தில் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் குறிப்பிட்ட சில ராசிகள் குபேரினின் அருளை முழுவதுமாக பெறுகிறார்கள். அது எந்தெந்த ராசியினர் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....
ரிஷப ராசி
இந்த ரிஷப ராசி சுக்கிரனால் ஆளப்படுகிறது. குபேரனின் அருள் அவர்களுக்கு எப்போதும் உண்டு. பணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. செல்வம் நாளுக்கு நாள் பெருகும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திட்டமிட்ட பணிகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பதோடு, அவற்றால் பெரும் பண பலன்களையும் பெறுவார்கள்.
கடகம் ராசி
கடக ராசிக்கு சந்திரன் அதிபதி. குபேரனின் அருளால் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாக செட்டில் ஆகுவார்கள்.. செல்வத்திற்கு பஞ்சமில்லை. தாம்பத்திய வாழ்வில் கணவன்-மனைவி இடையே உள்ள தொடர்பு வலுப்பெற்று அன்பு வெளிப்படும். செல்வச் செழிப்பால் தன்னம்பிக்கையுடன் பணிகள் முடிவடையும்.
இவர்கள் எந்த வேலையில் கை வைத்தாலும் கண்டிப்பாக வெற்றி அடைகிறார்கள். அவர்களின் வெற்றிக்கு யாரும் தடையாக இருக்க முடியாது. அதிர்ஷ்டம் எப்போதும் இந்த நபர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் வாழ்க்கையில் பணத்திற்கு எந்தப் பற்றாக்குறையும் இருக்காது.
தனுசு ராசி
குபேரனின் அருளால் பல நன்மைகளைப் பெறுவார்கள். செய்த முதலீடுகளால் பெரும் லாபம் வரும். கூடுதல் வருமானம் ஈட்ட வழிகளைக் கண்டறியவும். பணத்துக்கு பஞ்சமில்லை. குபேரனின் ஆசீர்வாதத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். இதன் காரணமாக கடந்த காலங்களில் தொடங்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட நிலுவையில் உள்ள பணிகள் தற்போது முடிவடையும்.
கோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. கோடீஸ்வரர் ஆக குபேரனின் அருள் கிடைக்க வேண்டும். பணக்காரர் ஆகவேண்டும் என்றால் மகாலட்சுமியின் அருளுடன் குபேரன் அருளும் கிடைக்க வேண்டும். குபேரரின் அருளால், இந்த 3 ராசிகளும் வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு பஞ்சமின்றி, செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.. மற்ற ராசியினர் குபேரனின் அருளைப் பெற அவரை வியழகிழமைகளில் வணங்கி வரலாம்..



Click it and Unblock the Notifications