பிறவியிலேயே குரு பகவானின் அருளால் பணக்காரராகும் வாய்ப்புக்களைப் பெற்றுள்ள ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

Lord Guru Bhagavan's Favourite Zodiac Signs: நவகிரகங்களில் பிருகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், மங்களகரமான கிரகமான குரு பகவானும் ஆவார். இந்த குரு பகவான் 4 வகையான வேதங்களையும், 64 கலைகளையும் அறிந்தவர். ஏராளமான யாகங்களை செய்து இவர் தேவர்களின் குருவாக ஆனார்.

இந்த குரு பகவான் தன காரகன், புத்திகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் பணக்காரராகும் வாய்ப்புள்ளது. அதுவே மோசமான நிலையில் இருந்தால், அரசனும் ஆண்டியாவார்.

Lord Guru Bhagavans Favourite Zodiac Signs In Tamil

இந்த குரு பகவான் அறிவு, புகழ், வெற்றி மற்றும் மரியாதை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவரது அருள் இல்லாமல் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியதது.

அந்த அளவில் குரு பகவானின் அருளானது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. இப்படிப்பட்ட குரு பகவான் மீனம் மற்றும் தனுசு ராசிகளின் அதிபதியாவார். இதனால் இவ்விரு ராசிக்காரர்களுக்கு பிறவியில் இருந்து குரு பகவானின் பரிபூர்ண ஆசி உள்ளது மற்றும் இந்த ராசிக்காரர்கள் குரு பகவானின் மிகவும் விருப்பமான ராசிக்காரர்களும் கூட.

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருள் பிறவியில் இருந்தே இருக்கும். இந்த ராசிக்காரர்கள் குருவின் அருளால் தங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவில் முன்னேற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களாக இருந்தால், பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் குருவின் அருளால் வாழ்வில் பல சாதனைகளைப் புரிவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள்.

மீனம்

குரு பகவானின் மிகவும் விருப்பமான ராசிகளின் ஒன்று தான் மீன ராசி. இந்த ராசியின் அதிபதியும் இவரே ஆவார். இந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் ஆசி எப்போதும் இருக்கும். மேலும் இவர்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் செய்து வந்தால், அந்த வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் குருவின் அருளால் சமூகத்தில் ஒரு உயர்வான நிலையில் இருப்பார்கள்.

ஜாதகத்தில் குரு பகவானின் நிலையை வலுப்படுத்துவது எப்படி?

உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமான நிலையில் இருந்தால், அதற்காக அச்சம் கொள்ள வேண்டாம். குரு பகவானின் அருளைப் பெற மற்றும் குருவின் நிலையை வலுப்படுத்த, வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குரு பகவானை வழிபடுங்கள். மேலும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும்.

அதோடு, குரு பகவானின் நிலையை வலுப்படுத்த 'ஓம் பிருஹஸ்பதயே நமஹ' என்னும் மந்திரத்தை வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, மஞ்சள் நிற லட்டு, தேன், மஞ்சள் நிற துணி, மஞ்சள் தூள், புஷ்பராகம் மற்றும் தங்கம் ஆகியவற்றை தானமாக வழங்குவதும் குரு பகவானின் நிலையை வலுப்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion