For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

|

உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் தற்போதைய காதல் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?. அதனை தெரிந்து கொள்ள உங்களின் பெயரே உங்களுக்கு போதுமானது. பெயர் ஜோதிடம் உங்களின் வாழ்க்கையைப் பற்றி பல உண்மைகளை கூறக்கூடும்.

what your love life would be like based on the first letter of your name

கைரேகை மற்றும் ஜோதிடம் பற்றி நீங்கள் நிறையகேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எப்போதாவது உங்கள் பெயருக்கு கவனம் செலுத்தியிருக்கிறீர்களா?. உங்கள் பெயர் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி பல ரகசியங்களைக் கூறும். இது உங்களின் வாழ்க்கையையே கூட மாற்ற இயலும், அதனால்தான் பலரும் தங்களின் பெயர்களை மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையில் உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும், நீங்கள் காதலில் என்ன எதிர்பார்ப்பீர்கள் போன்றவற்றையெல்லாம் கூற இயலும். உங்கள் பெயரின் முதல் எழுத்துப்படி உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் எழுத்து A

முதல் எழுத்து A

உங்களின் முதல் எழுத்து A வாக இருந்தால் நீங்கள் காதலில் சிறந்தவராக இருக்க மாட்டார்கள், இவர்கள் சொல்லை விட செயலில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நிதானமாக காதலிக்க உங்களுக்கு பொறுமையில்லை. இவர்கள் துணையின் உடலமைப்பு இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள், பாலியல் ரீதியாக கூடநீங்கள் தோன்றுவதை விட மிகவும் சாகசமாகவும் இருக்கிறீர்கள், இருப்பினும் இந்த குணங்களை விளம்பரப்படுத்த நீங்கள் விரும்புவதில்லை. உடல் தேவைகள் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

முதல் எழுத்து B

முதல் எழுத்து B

சோம்பேறி சிற்றின்பத்தின் அதிர்வுகளை நீங்கள் விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் ரொமான்ஸாகவும், ஒயினாகவும், உணவருந்தவும் ரசிக்கிறீர்கள். உங்கள் காதலரின் பாசத்தின் வெளிப்பாடாக பரிசுகளைப் பெறுவதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள். நீங்கள் ஆடம்பரமாக இருக்க விரும்புகிறீர்கள், உங்கள் துணையை எப்படிக் கொஞ்ச வேண்டும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். உங்கள் அன்பின் வெளிப்பாட்டில் நீங்கள் தனித்துவமானவர்கள். உங்கள் உடலுறவு தேவைகளை இவர்களால் உதர இயலும். உங்களுக்கு புதிய உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் தேவை.

முதல் எழுத்து C

முதல் எழுத்து C

இவர்கள் சமூக அளவில் எப்பொழுதும் தனிமையானவர்களாக இருப்பார்கள், உண்மையில் இவர்களுக்கு காதல் என்பது அவசியமான ஒன்றாகும். உங்களுக்கு நெருக்கம் மற்றும் ஒற்றுமை தேவை, பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னரும், பின்னரும் இவர்கள் தங்கள் துணையுடன் பேசவேண்டும். சமூகத்தால் அங்கீகரிக்கப்படக்கூடிய தோற்றத்தை இவர்கள் விரும்புவார்கள். தங்களின் துணையை தோழனாகவும்/தோழியாகவும் இவர்கள் பார்ப்பார்கள்.

MOST READ: இஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா?

முதல் எழுத்து D

முதல் எழுத்து D

யாரையாவது நீங்கள் விரும்ப வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் இவர்கள் முழுமூச்சில் செயலில் இறங்குவார்கள். காதலில் மிகவும் கவனமாகவும், அக்கறையாகவும் இருக்கும் இவர்கள் சிக்கல்கள் எழுந்தால் அதனை முதல் ஆளாக தீர்க்க முயலுவார்கள். பாலியல் உறவில் அதிக விருப்பம் கொண்ட இவர்களிடம் நேர்மை, விசுவாசம் போன்ற நற்குணங்களும் இருக்கும். இவர்களின் பொருள் மீது இவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு உணர்வு அதிகமிருக்கும் அதற்கு காதலும் விதிவிலக்கல்ல, இதனால் அடிக்கடி இவர்களின் காதலில் பிரச்சினைகள் எழலாம்.

முதல் எழுத்து E

முதல் எழுத்து E

பேசுவதே இவர்களின் முதல் தேவையாகும். மற்றவர்களின் சிந்தனையே இவர்களை ஈர்க்குமே தவிர அவர்களின் தோற்றம் அல்ல. இவர்கள் பாலியல் உறவில் அவ்வளவாக ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்கள் பிரிவு மற்றும் வேறுபாட்டை வெறுப்பார்கள், காதலில் ஆரோக்கியமான வாக்குவாதங்களுக்கு இவர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். தங்கள் துணையை ஈர்க்கும்படி பேசுவதில் இவர்கள் வல்லவர்கள், உடலுறவைக் காட்டிலும் சவாலுக்கே இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

முதல் எழுத்து F

முதல் எழுத்து F

இவர்கள் கருத்தியல் மற்றும் காதலில் மிகவும் வலிமையானவர்கள். இவர்கள் தங்களுக்கான சிறந்த துணையை தேட நீண்ட காலத்தை செலவழிப்பார்கள். அனைவரிடம் நன்கு பேசும் இவர்கள் சரியானவரை தேர்ந்தெடுத்து விட்டால் அவர்களுக்கு நேர்மையாக இருப்பார்கள். புத்திசாலிகளான இவர்கள் தனிப்பட்டரீதியாக பாலியலில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். காதலுக்காகவே பிறந்த இவர்கள் நாடகத்தனமான காதல் காட்சிகளை அரங்கேற்றுவதில் வல்லவர்கள்.

முதல் எழுத்து G

முதல் எழுத்து G

இவர்கள் தங்கள் காதலில் இருவருமே முழுமையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆழமாக சிந்திக்கக் கூடிய, தங்களுக்கு இணையான அல்லது உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களை விரும்புவார்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்கிறீர்கள் மற்றும் சிற்றின்ப தூண்டுதலின் உச்சத்தை எவ்வாறு அடைவது என்று இவர்களுக்குத் தெரியும், இதற்காக அவர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். பாலியல்ரீதியாக இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள், மற்ற அனைத்தையும் காட்டிலும் பாலியல் உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். உணர்வுரீதியாக நெருங்குவதைக் காட்டிலும் உடல்ரீதியாக நெருங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்காது.

MOST READ: உங்கள் கழுத்து வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

முதல் எழுத்து H

முதல் எழுத்து H

உங்கள் நற்பெயரையும் சம்பாதிக்கும் திறனையும் மேம்படுத்தக்கூடிய ஒரு துணையை நீங்கள் நாடுகிறீர்கள். நீங்கள் ஒரு உறுதிப்பாட்டை அடைந்தவுடன் உங்கள் காதலருக்கு நீங்கள் மிகவும் தாராளமாக இருப்பீர்கள். உங்கள் காதல் செலவுகளில் சிக்கனமாக இருப்பார்கள் அதேசமயம் பாலியல் ஈடுபாட்டிலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். பாலியலை விரும்பும் அதேசமயம் சிறந்த காதலராக இவர்கள் இருப்பார்கள்.

முதல் எழுத்து I

முதல் எழுத்து I

காதலும், நேசமும், பாராட்டும் இவர்களுக்கு எப்பொழுதும் தேவையாகும். இவர்கள் ஆடம்பரத்தையும், சிற்றின்பத்தையும் விரும்புபவராக இருப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்து கொள்ளும் ஒரு துணையை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு துணையே இவர்களின் தேவையாகும்.

முதல் எழுத்து J

முதல் எழுத்து J

இவர்கள் அதிக உடல் ஆற்றலால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காதலில் ஏற்படும் சவால்களும், விளையாட்டுகளும் இவர்களுக்கு மிகவும் பிடித்ததாகும். உங்கள் எண்ணங்களின் மூலம் நீங்கள் சிறந்த காதலை கட்டமைக்கலாம். தொலைதூர உறவில் இவர்கள் எளிமையாக காதலை தொடரலாம், பாலியலில் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.

முதல் எழுத்து K

முதல் எழுத்து K

இவர்கள் ரகசியமானவர், தன்னிறைவானவர், வெட்கப்படுபவர். இவர்கள் கவர்ச்சியானவர்களாகவும், கலவியில் அதிக ஆர்வம் உடையவராகவும் இருப்பார்கள். ஆனால் அதனை வெளியே கட்டிக்கொள்ள மாட்டார்கள். இரவு விஷயங்களில் இவர்கள் பெரிய கில்லாடிகளாக இருப்பார்கள். தங்களின் காதல் வாழ்க்கையை பராமரிக்கவும், பாதுகாக்கவும் இவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள். சரியான நபருக்காக இவர்கள் எவ்வளவு காலம் வேண்டுமெனர்லயும் காத்திருப்பார்கள்.

MOST READ: உங்க காதலில் இந்த விஷயங்கள ஒருபோதும் எதிர்பார்க்காதீங்க... ஏனா கண்டிப்பா இதெல்லாம் கிடைக்காது...!

முதல் எழுத்து L

முதல் எழுத்து L

அதீத காதல் உணர்வு நிறைந்த இவர்கள் அன்பும், கவர்ச்சியும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். உங்கள் அன்பின் வெளிப்பாட்டில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள், வாய்ப்புகளை எடுக்க தயாராக இருக்கிறீர்கள். மூளைதான் உங்களை இயக்குகிறது. உங்கள் பங்குதாரர் அறிவார்ந்த தூண்டுதலாக இருப்பதை நீங்கள் உணர வேண்டும், இல்லையெனில் உறவைத் தக்கவைத்துக்கொள்வது கடினம்.

முதல் எழுத்து M

முதல் எழுத்து M

இவர்களின் காதல் உணர்வுகளுக்கு எல்லையே இல்லை. இவர்கள் காதலில் பொய் கூறினாலும் அது காதலை தக்கவைத்து கொள்வதற்காகத்தான் இருக்கும். காதல் இவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு கலவியும் இவர்களுக்கு முக்கியமாகும். காதலிக்க தெரியும் அளவிற்கு இவர்களுக்கு கலவியிலும் எப்படி ஈடுபட வேண்டும் என்று தெரியும்.

முதல் எழுத்து N

முதல் எழுத்து N

நீங்கள் குற்றமற்றவராகவும், அசைக்கமுடியாதவராகவும், வெட்கப்படுபவராகவும் தோன்றலாம்; ஆனால் தோற்றங்கள் பொய் சொல்லக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். காதல் மற்றும் பாலுறவு இரண்டிலுமே இவர்கள் உச்சநிலையை அடைவார்கள். இருவருமே காதலில் முழுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். உங்கள் தரத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும், காதலர்களை நெருங்குவதற்கும் உங்களுக்கு சிரமம் உள்ளது.

முதல் எழுத்து O

முதல் எழுத்து O

இவர்கள் பாலியல் செயல்களில் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள், ஆனால் இவர்கள் விருப்பங்களை இவர்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். இவர்கள் எளிதில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடியும். தங்களின் அளவுக்கு பாலியலில் ஆர்வமுள்ள ஒருவரை இவர்கள் நாடுகிறார்கள். இவர்கள் காதலில் பன்முகத்தன்மையை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் காதலரின் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

MOST READ: ஆண்களின் இந்த சின்ன சின்ன செயல்கள்தான் பெண்களை காதலிக்கத் தூண்டுகிறதாம் தெரியுமா?

முதல் எழுத்து P

முதல் எழுத்து P

இவர்களின் சமூக உரிமைகள் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எதையும் இவர்கள் செய்யமாட்டார்கள். இவர்கள் அழகான துணையை எதிர்பார்ப்பார்கள். அதேசமயம் அவர்கள் புத்திசாலியாகவும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். சிலசமயம் தங்களின் துணையை இவர்கள் எதிரியாக பார்க்கவும் வாய்ப்புள்ளது. ஒரு நல்ல சண்டை இவர்களின் பாலியல் உணர்வை பலமடங்குத் தூண்டும்.

முதல் எழுத்து Q

முதல் எழுத்து Q

இவர்களுக்கு நிலையான செயல்பாடு மற்றும் தூண்டுதல் தேவை. இவர்களிடம் மிகப்பெரிய உடல் ஆற்றல் உள்ளது. ஒரு துணை இவர்களுடன், பாலியல்ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. காதலில் எப்பொழுதும் உற்சாகமாக இருப்பதால் இவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுவார்கள். காதலில் இவர்கள் எப்பொழுதும் ஆச்சரியங்களை ஏற்படுத்துவார்கள், இவர்களின் காதல் உரையாடல் இவர்களின் காதலரை மயக்கும்.

முதல் எழுத்து R

முதல் எழுத்து R

இவர்கள் எப்பொழுதும் தனிநபர் செயல்களை சார்ந்து இருப்பவர்கள். இவர்களின் வேகத்தை தக்க வைத்துக்கொள்ள கூடிய, அறிவில் இவர்களுக்கு சமமான அல்லது இவர்களை விட புத்திசாலியான ஒருவரே இவர்களுக்குத் தேவை. உடல் அழகை விட புத்திசாலித்தனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இவர்கள். அதேசமயம் உடல் அழகும் இவர்களுக்கு முக்கியமானதுதான். தாங்கள் நினைத்து பெருமைப்படும் ஒரு துணையை இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

முதல் எழுத்து S

முதல் எழுத்து S

இவர்களுக்கு காதல் வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையே மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் தொழில், வணிகம் அல்லது பணக் கவலைகளால் எந்த வகையிலும் கவலைப்படுகிறீர்களானால், இதனால் நிதானமாக மனநிலையைப் பெறுவது மிகவும் கடினம். ஒரு இலட்சிய காதலுக்காக காத்திருக்கும் இவர்கள் சிற்றின்பத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் தங்கள் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை இவர்கள் ஒருபோதும் இழக்க மாட்டார்கள். இவர்கள் இதயத்தையும், உடலையும் விட்டுக்கொடுப்பதற்கு முன்பு இவர்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். ஒருமுறை உறுதிசெய்துவிட்டால் இவர்கள் பசை போல ஒட்டிக்கொள்வார்கள்.

MOST READ: உடலுறவுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னாடி இந்த பொருள சாப்பிட்டா உங்க சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்...

முதல் எழுத்து T

முதல் எழுத்து T

நீங்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்கள் மற்றும் பாலியலில் ஆர்வமற்றவர். தங்களை வழிநடத்தும் ஒரு துணையை இவர்கள் விரும்புகிறார்கள். இசை, மென்மையான விளக்குகள் மற்றும் காதல் எண்ணங்கள் உங்களை இயக்குகின்றன. காதலில் இருக்கும்போது இவர்கள் இலட்சியங்களையும், உயர்ந்த எண்ணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளக் கூடியவர்கள். பேசியே மயக்குவதில் இவர்கள் கில்லாடிகள்.

முதல் எழுத்து U

முதல் எழுத்து U

காதலிக்கும்போது நீங்கள் உற்சாகமாகவும். ஆர்வமாகவும் இருக்கிறீராகள். காதலில் இல்லாத போது இவர்கள் காதலையே காதலிப்பார்கள், எப்போதும் காதலிக்க இவர்கள் தயாராக இருப்பார்கள். காதலை இவர்கள் ஒரு சவாலாக பார்க்கிறார்கள், காதலில் இவர்கள் எப்பொழுதும் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். வெற்றி பெறும் காதலில் மட்டுமே இவர்கள் ஈடுபடுவார்கள். பரிசுகளை கொடுப்பது இவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், உங்களை காதலரை அழகாக காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்ததாகும்.

முதல் எழுத்து V

முதல் எழுத்து V

நீங்கள் தனித்துவமானவர், உங்களுக்கு சுதந்திரம் மற்றும் உற்சாகம் தேவை. இவர்களுக்காக அர்ப்பணிக்கும் ஒருவரை அடையும்வரை இவர்கள் பொறுமையாக காத்திருப்பார்கள். விசித்திரமான மனிதர்கள் இவர்களை எப்போதும் ஈர்ப்பார்கள். இவர்களுக்கும், இவர்களின் காதலருக்கும் இடையில் வயது வித்தியாசம் அதிகம் இருக்கும். காதலில் ஆச்சரியங்கள், ஆபத்துகள், சஸ்பென்ஸ்களை இவர்கள் எதிர்பார்ப்பார்கள். பாலியல் உறவிலும் இவர்கள் ஆச்சரியங்களை எதிர்பார்ப்பார்கள்.

MOST READ: இந்த ராசிக்காரங்க விரட்டி விரட்டி உதவி செய்றேன்னு தொல்லை பண்ணுவாங்களாம் தெரியுமா?

முதல் எழுத்து W

முதல் எழுத்து W

இவர்கள் மிகவும் பெருமை வாய்ந்தவர்கள், உறுதியான எண்ணம் கொண்டவர்கள், காதலில் இவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். இவர்கள் காதலுக்கு வில்லனே இவர்களின் ஈகோதான். இவர்களின் காதலர்கள் எப்போதுமே இவர்களுக்கு ஸ்பெஷல்தான். காதலில் ஆழமாக இறங்கும் இவர்கள் எப்போதும் வித்தியாசமாக காதலிக்க தயாராக இருப்பார்கள். காதலர் மீதே இவர்களுக்கு பொறாமை ஏற்படலாம். பாலுறவை பொறுத்தவரை எப்போதும் தாங்களே மேலோங்கி இருக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

முதல் எழுத்து X

முதல் எழுத்து X

இவர்களுக்கு தொடர்ச்சியான தூண்டுதல் தேவை ஏனெனில் இவர்களுக்கு எதுவும் எளிதில் போரடித்துவிடும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை இவர்கள் எளிதாகக் கையாளலாம். காதலில் தங்கள் மனதை இவர்கள் எளிதில் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். பாலுறவில் ஈடுபடும்போது பேசுவதை இவர்கள் விரும்புவார்கள். இவர்களின் தலைக்குள் எப்போதும் அடுத்த காதலைப் பற்றிய நினைவு இருக்கும்.

முதல் எழுத்து Y

முதல் எழுத்து Y

இவர்களுக்கு பாலுறவில் எப்போதும் முழுசுதந்திரம் வேண்டும் ஏனெனில் இவர்கள் அதில் பல விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். தங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையாவிட்டால் இவர்கள் காதலில் இருந்து வெளியேறிவிடுவார்கள். தங்களின் காதல் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதனால் பலசமயம் இவர்களுக்குள் பிரச்சினைகள் எழும். உடல்ரீதியான தூண்டுதல்கள் இவர்களை எப்போதும் விரும்புவார்கள்.

MOST READ: உங்க உடம்புல சூடு அதிகமாகிறதால என்னென்ன ஆபத்துகள் வருது தெரியுமா?

முதல் எழுத்து Z

முதல் எழுத்து Z

காதல் உணர்வு அதிகமிருக்கும் இவர்கள் காதல் எப்போதும் துன்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். தங்கள் காதலருக்கு சேவை செய்வதை இவர்கள் எப்போதும் விரும்புவார்கள். தங்கள் காதலரை பாதுகாப்பதுதான் தங்களின் முதல் கடமை என்று நினைப்பவர்கள். காதலிலும், கலவியிலும் இவர்களுக்கு எப்போதும் அதீத ஆசையும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். தங்களின் பாலியல் வாழ்க்கையை எப்போதும் இவர்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Love Life Would Be Like based On The First Letter Of Your Name

Read to know what your love life would be like based on the first letter of your name.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more