Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
தீபாவளி பரிசாக 1.2 கோடி மதிப்புள்ள கார், பைக்குகளை கொடுத்துள்ள சென்னை நகைக்கடை முதலாளி யார் தெரியுமா?
இந்தியாவின் கொண்டாட்டமிக்க பண்டிகையான தீபாவளி அருகில் வந்துவிட்டது. பணியில் இருக்கும் அனைவருமே தங்களின் அலுவலகத்திலிருந்து தீபாவளி போனஸுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் கொண்டாட்டமிக்க பண்டிகையான தீபாவளி அருகில் வந்துவிட்டது. பணியில் இருக்கும் அனைவருமே தங்களின் அலுவலகத்திலிருந்து தீபாவளி போனஸுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் தீபாவளி போனஸ் என்பது பெரும்பாலானவர்களுக்கு கனவாகவே இருக்கிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால் சல்லானி, கோவிட்-19 நெருக்கடி போன்ற கடினமான நேரங்களிலும் நிறுவனத்திற்கு அளித்த ஆதரவைக் கௌரவிக்கும் வகையில் தீபாவளிப் பரிசாக தனது ஊழியர்களுக்கு கார்கள் மற்றும் பைக்குகளை பரிசளித்துள்ளார்.

சல்லானி ஜூவல்லரியின் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் உதவி பொது மேலாளர் எஸ் பாலாஜி கூறுகையில், நகைக்கடை உரிமையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு கார் அல்லது பைக்குகளை பரிசாக வழங்குவது நாட்டிலேயே இதுவே முதல் முறை. எட்டு ஊழியர்களுக்கு கார்களும், 18 பேருக்கு பைக்குகளும் கிடைத்தன என்றார்.

நிறுவன வரலாறு?
2013-ல் சென்னையில் செயல்படத் தொடங்கிய இந்த நகைக்கடைக்கு இப்படியொரு யோசனை வந்தது என்ன என்று கேட்டபோது, "தகுதியான ஊழியர்களைப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். கார்களை பரிசாகப் பெற்ற எட்டு பேரும் கடையின் தொடக்கத்திலிருந்தே எங்களுடன் இருந்துள்ளனர். இந்த சில்லறை வணிகத்திற்கு நாங்கள் முற்றிலும் புதியவர்கள். ஆரம்ப நான்கைந்து மாதங்களுக்கு, நாங்கள் வால்க்-இன் நேர்முகத் தேர்வுகளை நடத்தினோம் ஆனால் இந்த மக்கள் எங்களை நம்பினார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் வளரத் தொடங்கியது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு நல்ல சம்பளத்திற்காக தாவும் இத்துறையில் இவர்கள் பல ஆண்டுகளாக எங்களுடனேயே இருந்தனர். கொரோனாவின் மோசமான காலக்கட்டத்தில் கூட, இவர்கள் எங்களுடன் இருந்தனர். எனவே கொந்தளிப்பான காலங்களில் உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது," என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

ஏன் வாகனங்கள் பரிசாக அளிக்கப்பட்டது?
தீபாவளிக்கு ஊழியர்களுக்கு ரொக்க போனஸ் வழங்க வேண்டாமென்று நிறுவனம்முடிவு செய்ததாகவும், ஓரிரு மாதங்களில் பணத்தை செலவழித்துவிடுவார்கள் என்றும், அவர்களின் பரிசு விரைவில் மறந்துவிடும் என்பதால் வாகனங்களைத் தேர்வுசெய்ததாகவும் பாலாஜி கூறினார்.

பரிசு எப்படி வழங்கப்பட்டது?
"இது குறித்து ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நான் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கிறேன், ஆனால் எனக்கே இதுபற்றி கூறப்படவில்லை. கார்கள் மற்றும் பைக்குகள் பெரிய திரையால் மூடப்பட்டிருந்தன. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் எங்கள் உரிமையாளர் ஜெயந்தி லால் சலானியின் யோசனை இருந்தது. ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நிறுவனத்தின் இந்த செயலால் மிகவும் நெகிழ்ந்தனர், அவர்கள் அனைவரும் கண்ணீருடன் இருந்தனர். மேலும், இவை நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு வழங்குபவை சாதாரண கார்கள் அல்ல. இவை தானியங்கி (டிரான்ஸ்மிஷன்) கார்கள், ஐந்து வருட உத்தரவாதம், இன்சூரன்ஸ் கவரேஜ் மற்றும் முழுமையாக ஏற்றப்பட்ட பெட்ரோலைக் கொண்டது," என்று அவர் மேலும் கூறினார்.

கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மதிப்பு எவ்வளவு?
நகைக்கடையின் முதலாளி ஜெயந்தி லால் சாய்ந்தி கூறுகையில், எட்டு பேருக்கு கார், 18 பேருக்கு பைக்குகள் வாங்க, 1.2 கோடி ரூபாய் செலவு செய்தார். மேலும், தனது ஊழியர்களை தனது குடும்ப உறுப்பினர்களைப் போல நடத்த விரும்புவதாகவும், அவர்களுக்கு இதுபோன்ற ஆச்சரியங்களை வழங்குவதாகவும் கூறினார். கடையின் உரிமையாளர் மேலும் கூறுகையில், தான் முழு மனதுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதிகமான முதலாளிகள் இதைப் பின்பற்றி, தங்கள் ஊழியர்களுக்கு அதிக பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்களை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.



Click it and Unblock the Notifications