Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
சாணக்கிய நீதியின் படி, இந்த அறிகுறி எல்லாம் ஒருவருக்கு கெட்ட காலம் தொடங்கப் போகிறது என்பதன் அர்த்தமாம்...
ஒருவரது வீட்டிற்கு கெட்ட காலம் வரப்போகிறது என்றால் அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
Chanakya Niti: சாணக்கியர் ஒரு திறமையான அரசியல்வாதி, ராஜதந்திரி, அரச ஆலோசகர் ஆவார். இவர் தான் இந்திய அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தை எழுதினார். இவரை கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைப்பார்கள். இவர் தனது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், மகிழ்ச்சி மற்றும் துக்கத்தால் திசைதிருப்பப்படாமல் இருக்கவும் பல விஷயங்களைக் கூறியுள்ளார். சாணக்கியரின் எண்ணங்கள் அனைத்தும் சாணக்கியர் நீதி என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த சாணக்கியர் நீதி புத்தகத்தில் ஒருவரது வாழ்க்கையை மேம்படுத்த பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. சாணக்கியர் கூறும் அனைத்து விஷயங்களுமே ஒருவரது இலக்கை அடைய பெரிதும் உதவியாக இருக்கும். சாணக்கியரின் வார்த்தைகளை ஒருவர் வாழ்வில் பின்பற்றினால், எப்பேற்பட்ட பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும்.
அந்த வகையில் சாணக்கியர் நீதியில், ஒருவருக்கு வரவிருக்கும் மோசமான காலங்களைப் பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ஒருவரது வீட்டிற்கு கெட்ட காலம் வரப்போகிறது என்றால் அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இப்போது சாணக்கியர் நீதியின் படி, ஒருவருக்கு வரவிருக்கும் மோசமான காலத்தைக் குறிக்கும் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

துளசி செடி காய்ந்து போவது
துளசி செடி மிகவும் புனிதமான செடியாக கருப்படுகிறது. அதுவும் இந்த செடியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஓர் நம்பிக்கையும் உள்ளது. இப்படிப்பட்ட துளசி செடி வீட்டில் காய்ந்து போனால், உங்கள் வீட்டில் பண பிரச்சனை ஏற்படப் போகிறது என்பதன் முதன்மை அறிகுறியாகும். மேலும் இது வீட்டில் ஒரு பெரிய தகராறு ஏற்படப் போவதையும், பிரச்சனை ஒன்று தேடி வந்து கொண்டிருப்பதையும் குறிக்கிறது.

வீட்டில் திடீரென்று சண்டை அதிகரிப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டில் தினமும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்யமாட்டாள். மேலும் அந்த வீட்டின் மீது லட்சுமி தேவி கோபம் கொள்வார். இதன் விளைவாக அந்த வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் குறையும். சண்டை அதிகம் போடும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கும். இதனால் குடும்பத்தின் சந்தோஷம் அழியும் மற்றும் நிதி தட்டுப்பாடும் ஏற்படும்.

வீட்டு பெரியோரை அவமதிப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டில் உள்ள பெரியவர்களை மரியாதையுடன் நடத்தாமல், எப்போதும் திட்டிக் கொண்டு, அவமானப்படுத்திக் கொண்டு இருந்தால், அந்த வீட்டில் எப்போதும் பிரச்சனை நிலைத்திருக்கும். வீட்டு பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லாவிட்டால், அந்த வீட்டில் வறுமை அதிகரிக்கும்.

கண்ணாடி உடைவது
வீட்டில் உள்ள கண்ணாடி உடைவது நல்லதாக கருதப்படுவதில்லை. சாணக்கிய நீதிப்படி, வீட்டில் இருக்கும் கண்ணாடி அடிக்கடி உடைகிறது என்றால், அந்த வீட்டில் பெரிய பண பிரச்சனை ஒன்று வரப்போகிறது என்று அர்த்தம்.

கடவுளை வழிபடாமல் இருப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டில் கடவுளை வழிபடாமல், ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் தவறான பாதையில் செல்ல நிறைய வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அவர்களை நோக்கி பல பிரச்சனைகள் வரக்கூடும்.



Click it and Unblock the Notifications