உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்கள் உங்களின் வாழ்வை நரகமாக்குமாம் தெரியுமா?

பாவகாரியங்கள் என்னும் போது குற்ற செயல்களில் ஈடுபடுவது, மற்றவர்களின் உடலையும், மனதையும் காயப்படுத்துவது போன்றவை மட்டுமல்ல.

பாவங்கள்தான் நமது வாழ்க்கையின் விதியை தீர்மானிப்பதாகும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் யாவும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் தண்டனை என்று நமது புராணங்கள் கூறுகிறது. அந்த வகையில் இப்பொழுது நாம் செய்யும் பாவங்கள் நமது அடுத்தடுத்த ஜென்மங்களின் வாழ்க்கையையும் நரகமாக்கும். எனவே முடிந்தளவு வாழும்போது பாவகாரியங்களில் ஈடுபடாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது.

பாவகாரியங்கள் என்னும் போது குற்ற செயல்களில் ஈடுபடுவது, மற்றவர்களின் உடலையும், மனதையும் காயப்படுத்துவது போன்றவை மட்டுமல்ல.

three spiritual sins and their cures

உங்களை நீங்களே சிதைத்து கொள்ளும் சில மோசமான பாவச்செயல்களும் உள்ளது. இவை பெரும்பாலும் பாவகாரியங்கள் என்று உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்பவையாகும். உங்களுக்கே தெரியாமல் செய்தாலும் இதற்கான தண்டனைகள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். இந்த பதவில் நீங்கள் செய்யும் பாவகாரியங்கள் என்ன அதற்கான பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்வம்

கர்வம்

ஆன்மீகரீதியாக நீங்கள் செய்யும் பாவங்களில் முதன்மையானது கர்வம் ஆகும். உங்களின் அனைத்து பாவங்களுக்கும் இதுதான் தொடக்கப் புள்ளியாக இருக்கும். மற்றவர்களின் மீதான வெறுப்பும் இங்கிருந்ததுதான் தொடங்குகிறது. கர்வம் என்பது தன்னுடைய திறமைகள் மீது அதிக நம்பிக்கை ஏற்படும்போது தொடங்குவதாகும். இந்த நிலை வந்துவிட்டால் அவர்கள் கடவுளின் மீதான நம்பிக்கை என்பது குறைந்துவிடும். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவெனில் கடவுளின் கருணை இல்லாமல் அவர்களால் அந்த திறமைகளை பெற்றிருக்க இயலாது.

கர்வம் உங்களை அவமானப்படுத்தும்

கர்வம் உங்களை அவமானப்படுத்தும்

தங்களை பற்றி பெருமையாக நினைப்பவர்கள் எப்பொழுதும் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவராகவே கருதுவார்கள். மற்றவர்களின் குறைகளை கண்டறிவதிலேயே கவனம் செலுத்தி சரியான சமயத்தில் அவர்களை அவமானப்படுத்துவார்கள். தங்களின் குறைகளை மறைத்து கொள்ள மற்றவர்களை விமர்சிப்பதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொள்வார்கள். இவர்கள் எப்பொழுதும் தான் செய்வது சரி என்ற எண்ணத்தில் இருப்பார்கள், இதனாலேயே அனைத்து உறவுகளையும் இழந்து தனிமரமாய் நிற்பார்கள்.

மனநிறைவே இதற்கான பரிகாரம்

மனநிறைவே இதற்கான பரிகாரம்

மற்றவர்களுடைய நல்லொழுக்கங்களையும், திறமையையும் நாம் அடையாளம் கண்டுகொண்டு அதற்கான அங்கீகாரத்தை கொடுக்கும்போது அது நமது கௌரவத்தை அனைவரிடமும் அதிகாரிக்கும். மனநிறைவுள்ள மக்கள் எப்பொழுதும் அறிவின் வரம்புகளை அறிந்து வைத்திருப்பார்கள். மனநிறைவும், பணிவும் வரும்போது அது தானாக உங்கள் கர்வத்தை அழிக்கும். கர்வம் அழியும்போது அது உங்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

பொறாமை

பொறாமை

பொறாமை உங்களின் வாழ்க்கையின் மகிழ்ச்சியை சிதைப்பதோடு உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும். பொறாமை உங்களை நீங்களே அதிகம் காதலிக்கும் போது மற்றவர்கள் உங்களை விட சிறந்தவராக இருக்கும்போது அவர்கள் மீது ஏற்படும் கோபம்தான். பொறாமை வெறுப்பை உண்டாக்கும், நமக்கு கிடைக்காத பொருளை மற்றவர்களுக்கு கிடைக்கும்போது ஏற்படும் கோபம் அவர்கள் ஒருவேளை அதனை இழந்து விட்டால் நமக்குள் ஏற்படும் மகிழ்ச்சி என நம் வாழ்வை நாமே சிதைத்து கொள்ள காரணமாக இருப்பது இந்த பொறாமைதான்.

இரக்க குணம்

இரக்க குணம்

இரக்கமும், கருணையும் உங்களுக்குள் காதலை அதிகரிக்கும். இது மற்றவர்களை விரும்பும் குணத்தையும், உங்களின் உதவும் எண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் பொறாமையை அழிக்கும். பொறாமையால் மூழ்கியிருக்கும் போது மற்றவர்கள் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் நம்மால் உணர முடியாது. கூடி வாழ்வது மட்டும்தான் வாழும்போதே சொர்க்கத்தை அடையும் ஒரே வழியென நமது புராணங்கள் கூறுகிறது. எனவே இரக்க குணத்துடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

சுயமுன்னேற்றம்

சுயமுன்னேற்றம்

மற்றவர்களின் வெற்றி உங்களை பொறாமையை ஏற்படுத்தினால் நீங்கள் அதற்காக கோபப்படுவதை தவிருங்கள் மாறாக அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்ன முயற்சிகளை செய்தார்கள் என்பதை பற்றி சிந்தியுங்கள். உங்களை பற்றி நீங்களே தாழ்வாக எண்னுவதை தவிர்த்து வெற்றியை நோக்கிய உங்களின் முதல் அடியை எடுத்து வையுங்கள். உங்களின் முன்னேற்றம்தான் பொறாமை என்னும் கொடிய விஷத்திற்கு மருந்தாகும்.

கோபம்

கோபம்

கட்டுப்படுத்த முடியாத கோபம் என்பது உங்கள் கையிலிருக்கும் இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி ஆகும். கோபம் ஒருவருடைய அடிப்படை உணர்ச்சிகளில் ஒன்றாகும் ஆனால் எல்லையற்ற கோபம் உங்களை அழிவின் பாதைக்கு அழைத்து செல்லும். கோபத்தை வெளிப்படுத்துவதும் சரி, அதனை உங்களுக்குள்ளே வைத்து கொள்வதும் சரி இரண்டுமே உங்களுக்குதான் ஆபத்தை ஏற்படுத்தும். அளவுக்கதிகமான கோபம் உங்களுக்கு வெறியை ஏற்படுத்தும். இது பேரழிவை உண்டாக்கும்.

பொறுமை

பொறுமை

கோபத்தின் போது வெளிப்படும் கட்டுக்கடங்காத ஆற்றலை கட்டுப்படுத்த பொறுமை மிகவும் அவசியமான ஒன்றாகும். கோபம் உங்கள் மனஅழுத்தம், பொறாமை என உங்களுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் அதிகரிக்கும். ஆத்மீகரீதியாகவும் சரி, அறிவியல்ரீதியாகவும் சரி கோபம் என்பது எப்போதுமே ஒருவருக்கு அழிவை மட்டுமே ஏற்படுத்தும். இப்படி இருக்கும்போது பொறுமை மட்டுமே உங்களை இபிகா ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஒரே பரிகாரம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, February 20, 2019, 16:19 [IST]
Desktop Bottom Promotion