Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ஹலால் வழியில் பெண்கள் சுகமான பாலியல் உறவு கொள்வது எப்படி என்று புத்தகம் எழுதி வெளியிட்ட பெண்
ஒரு இஸ்லாமியப் பெண் ஹலால் முறையில் இஸ்லாமியப் பெண்கள் எப்படி கணவனுடன் உறவில் ஈடுபடுவது என்ற புத்தகம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அது பற்றிய முழு தகவல்.
இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்திய உறவு கொள்வது எப்படி என்பது பற்றிய விரிவாகக் கூறுகின்ற புத்தகம் ஒன்று சில மாதங்களாக அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்தில் விற்பனைக்காக உலவி வந்தது. இதன் விற்பனையும் படுஜோராக சூடுபிடித்திருக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் உருவாகத் தொடங்கிவிட்டது.

பெண் எழுத்தாளர்
இந்த புத்தகத்தை எழுதியவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் தான் என்று சொல்லப்படுகிறது. இவர் தன்னுடைய இயற்பெயரைக் குறிப்பிடாமல் புனைப்பெயரிலே தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். சர்ச்சைக்குரிய விஷயத்தைப் பற்றி எழுதியதால் இயற்பெயரினைக் குறிப்பிடவில்லை.

என்ன புத்தகம் அது?
ஹலால் வழியில் சுகமான பாலியல் உறவு கொள்ள முஸ்லீம்களுக்கான பாலியல் வழிகாட்டி கையேடு (the muslims guide to sex manual: a halal guide to mind blowing sex) என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது அந்த புத்தகம். அதாவது முஸ்லீம்களுக்காக பாலியல் வழிகாட்டி கையேடு. ஹலால் வழியில் பாலியல் சுகம் காண வழிகாட்டி என்னும் பொருளில் அமைந்தது தான் அந்த புத்தகம்.

ஊடகப் பேட்டி
பிரிட்டன் ஊடகங்கள் சில இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியரைத் தேடிச் சென்று பேட்டி எடுத்திருக்கிறார்கள். The Observer என்னும் நாளிதழின் செய்திப்படி இந்த புத்தகத்தை எழுதியிருப்பது ஒரு இஸ்லாமியப் பெண் என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னைப் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிட வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எதற்காக எழுதினார்?
தன்னைப் பற்றிய விவரங்களை மறைக்கச் சொன்னதோடு தான் எதற்காக இந்த புத்தகத்தை எழுதினேன் என்பது பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது என்னவென்றால், இஸ்லாமியப் பெண்களுக்கு, குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைகள் கொண்ட பெண்களுக்கு தாம்பத்திய உறவு பற்றி தகவல்கள் பெரிதாகத் தெரிவதில்லை. அதனால் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையில் இந்த புத்தகம் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் தான் தான் இந்த புத்தகத்தை எழுதியதாக அற்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்துக்கு ஆதரவு
முஸ்லிம் பெண்களிடையே இருக்கின்ற பாலியல் குறித்த தவறான கருத்துக்கள் மற்றும் புரிதல்களையும் மாற்றுவதோடு, மூட நம்பிக்கைகளையும் உடைத் தெறிவதற்கு இந்த புத்தகம் உதவியாக இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்டதால் இந்த புத்தகத்துக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என இந்த புத்தகம் பற்றிய விமர்சனக் கட்டுரை எழுதிய ஷெலினா ஜன்மோஹமத் பிரிட்டன் நாளிதழான டெலிகிராஃபில் இது பற்றி தெரிவித்திருக்கிறார்.

கடுமையான விமர்சனங்கள்
இந்த புத்தகம் பற்றி கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. பெண்களின் பார்பரிய நம்பிக்கைகள் குறித்து இந்த புத்தகம் எழுதப்பட்டிருப்பதாகவும் பெண்களின் உடலை நுகர்வுப் பொருளாகப் பார்ப்பதாகவும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதை நூலாசிரியர் மறுக்கிறார்.

பாராட்டு இ-மெயில்
இந்த புத்தகங்களை ஆதரித்து தனக்கு ஏராளமான கடிதங்களும் மின்னஞ்சல்களும் வருவதாகவும் அதேபோல், புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு இந்த புத்தகத்தை பரிசாகக் கொடுக்க விரும்புவதாக ஒரு மசூதியின் இமாம் தனக்குகடிதம் எழுதியிருப்பதாகவும் அந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

பெண்கள் தான் மையம்
இந்த புத்தகம் முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்துகிறது. ஆண்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல் புறக்கணித்தது ஏன் என்ற கேள்விகளும் அவரை நோக்கி வருவதாகக் குறிப்பிடுகிறார். தாம்பத்தியத்தில் ஏற்படுகிற அதிருப்தியால் உண்டாகிற கருத்து வேறுபாட்டால், பல திருமண உறவுகள் முறிந்து போவதாகவும் அந்த நிலைக்கு போகாமல் பாதுகாக்கவும் அவர்களின் பாலியல் உரிமையைப் புரிந்து கொள்வதற்கும் இதுபோன்ற புத்தகங்கள் அவசியம் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











