Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
அரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை!
அரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை!
சலோனி சோப்ரா... பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகை. இவர் ரேஸ் 3 ஸ்க்ரூவ்டு அப் போன்ற படங்களிலும், எம் டிவி நிகழ்ச்சியிலும் பங்கெடுத்திருக்கிறார். இவர் பெண்ணியம் குறித்து நிறைய கருத்துக்கள் வெளியிட்டிருக்கிறார். சலோனி சோப்ரா நிறைய பெண்களுக்கு சாதகமான, உரிமைக்கான நிகழ்வுகளிலும், விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒருமுறை தனது மாதவிடாய் இரத்த கறை உடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பெண்கள் பிரா அணியமால் வாழலாம் என்ற கேம்பைனில் பங்கெடுத்துக் கொண்டார். சில காலம் முன்பு இவர் தனது அனுமதி இன்றி ஒரு நடுவயது ஆண் கோவாவில் தான் பிகினியில் இருக்கும் போது புகைப்படம் எடுத்தார் என்று கூறி, ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.

ஆனால், இவரே, ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு படத்தில், பின்னே ஒரு நடுவயது பெண் நிர்வாணமாக இருப்பதை கிராப் செய்யாமல், அப்படியே பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார். பின்னர், அந்த படம் நீக்கப்பட்டது.
நேற்று சுதந்திர தினத்தன்று இவர், பெண்ணியம் மற்றும் பெண்கள் உடலை அவமானமாக காணும்படியாக இந்த சமூகம் ஏற்படுத்தியிருக்கும் சூழல் குறித்து தனது அரைநிர்வாண படத்துடன் ஒரு பதிவிட்டடிருந்தார்... அதில் அவர் கூறி இருப்பதாவது....

காலையில்...
உள்ளாடை குறித்த பெண்ணியம் ஏன் என்ற கேள்வியுடன் தனது பதிவை துவக்கி இருக்கும் சலோனி சோப்ரா, அடிப்படையிலேயே சிலது தவறாக இருக்கிறது. காலையில் பால் அல்லது காய்கறி வாங்க வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது, நான் டீ-ஷர்ட் அணிந்திருந்தாலுமே கூட, உள்ளே பிரா அல்லது டீ-சர்ட் மீது ஒரு ஸ்கார்ப் அணிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

10 மணிக்கு மேல்...
இரவு பத்து மணிக்கு மேல் வீதியில் என்னால் அச்சமின்றி செல்ல முடியாது. என்னை யாரேனும் கற்பழித்து விடுவார்களோ, என் உடல் பாகங்களை தீண்டி, சீண்டி விடுவார்களோ என்ற மிகுதியான அச்சம் இருக்கிறது. பெண்கள், படித்து முன்னேறி அறிவியல் விஞ்ஞானிகள் ஆகிவிடுவார்கள் என்பதற்காக யாரும் கற்பழிப்பது இல்லை. பெண்களுக்கு மார்பகங்களும், பெண்ணுறுப்பும் இருக்கிறது என்ற காரணத்திற்காக தான் கற்பழிக்கிறார்கள். இந்திய பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் முதன்மை இடத்தில் இருக்கிறது. அதிலும், பெண்கள் தங்கள் உடலால் & தன் உடல் சார்ந்த அச்சம் அதிகம் கொண்டிருக்கிறார்கள்.

கற்பழிப்பு!
கற்பழிப்பு என்றால் என்ன? வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணின் யோனியில் ஆண்குறி செலுத்தி அவளை மானபங்கப்படுத்துவது. சிலசமயம், ஆண்கள் மோகம் தனிய இரும்பு கம்பிகளை நுழைத்தும் கொடுமை படுத்துகிறார்கள். தன் விந்து வெளியேறும் வரை, அவள் மரணிக்கும் வரை அவள் கற்பழிப்புக்கு உரியவளாக தான் காண்கிறார்கள். கற்பழிக்கப்படும் போது அதற்கு முன் அந்த பெண்கள் நிர்வாணமாகவா இருந்தனர்?, இல்லை.

மார்பகங்கள்!
பெண்களை படிப்பினைக்காகவா கற்பழிக்கிறார்கள். பெண்களுக்கு மார்பகங்கள் இருக்கின்றன என்பதற்காக கற்பழிக்கிறார்கள். இங்கே என் உடல் சார்ந்து பெரிய டீல் யாரிடம் காணப்படுகிறது, என்னிடமா? அவர்களிடமா?
பள்ளியில் பெண்கள் ஸ்கர்ட் அணிய கூடாது, ஷார்ட்ஸ் அணியக் கூடாது, ஏனென்றால் ஆண் பிள்ளைகள் கவனம் சிதறிவிடும். ஏன்? பெண்கள் இந்த உடை அணிந்தால் தான் அவர்களால் படிக்க முடியும் என்ற விதி இருக்கிறதா?

மறைத்துக் கொள்
13 முதல் 18 வயது வரை ஒரு பெண் தனது மார்பகங்களை எப்படி மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தான் கற்கிறாள். பதின் வயதில் ஒரு பெண்ணின் மார்பு பெரியதாக இருந்தால் அவள் தவரானவள் என்று கணக்கிடுகிறார்கள். மற்றவர் கண்களை உறுத்தாமல் இருக்க இறுக்கமான பிரா அணிய வேண்டும்.

வீட்டில்!
குடும்பத்துடன் உணவு பரிமாறும் போது சற்றே உடை களைந்துவிட்டால், தவறுதலாக டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் கால்களை அகல விரித்துவிட்டால்...? அனைத்திற்கும் அச்சம் இருக்கிறது இங்கே பெண்களிடம், அதுவும் அவர்கள் உடல் சார்ந்த அச்சம்.

கணக்கு!
எதற்கு எடுத்தாலும் பெண்களை ஆட்சேபனையுடனான பார்வையில் பார்த்தே, கணித்தே இந்த சமூகம் ஒரு வட்டத்தை வரைந்து வைத்துள்ளது. காலையில் எவ்வளவு பால் வாங்க வேண்டும், என்னென்ன காய்கறி எத்தனை முட்டை வாங்க வேண்டும் என்பதை கணக்கிடும் முன்பு, வீட்டில் இருந்து வெளியே இறங்கும் போது, தனது மார்பகங்கள் சரியாக மூடப்பட்டு இருக்கிறதா? என்பதை தான் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், எதிரே வரும் ஆண் சல்லாபம் அடைந்துவிடுவான். இப்படி தங்கள் சொந்த உடல் சார்ந்த பெண்களின் அச்சம் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடக்கிறது நம் சமூகத்தில்.



Click it and Unblock the Notifications
