நான் ஏன் கற்பழித்தவனுடன் கலவுறவாடினேன் (செக்ஸ்)? - சொல்லப்படாத கற்பழிப்பு சம்பவங்கள்!

நான் ஏன் கற்பழித்தவனுடன் கலவுறவாடினேன் (செக்ஸ்)? - சொல்லப்படாத கற்பழிப்பு சம்பவங்கள்!

By John

கற்பழிப்புன்னா என்ன? ஒரு பொண்ணோட விருப்பம், சம்மதம், ஒப்புதல் இல்லாம அந்த பொண்ணு கூட உடல் உறவு வெச்சிக்கிறது.

ஊர் பெயர் தெரியாத யாரோ ஒருத்தன் மட்டும் தான் கற்பழிக்கிறான்கிறது நாம எல்லாம் புரிஞ்சுக்க வேண்டிய பெரிய பொய். செய்திகள்ல வர சம்பவங்கள்ல மட்டும் தான் யாரோ ஒருத்தன் ரேப் பண்ணதா வருது. எத்தனையோ உறவுகள்ல, காதலன், புருஷன், ஃபிரெண்டு, உறவுக்காரன், மாமா, சித்தப்பா, பக்கத்து வீட்டுக் கார்ன்னு தெரிஞ்சவனே ரேப் பண்றான்.

The Stories of Rape Victims About Their Rapists!

இதெல்லாம் பெருசா வெளிய வரது இல்ல. சிலர் தன் உறவுக்காரன், காதலன்னு வெளிய சொல்லாம விட்டுடுறாங்க. சிலர் மானம் போயிடும், மரியாதை போயிடும்னு மறைச்சிடுறாங்க.

இப்படியான கற்பழிப்பு சம்பவங்கள நீங்கள் செய்திகள்ல பார்த்திருக்க, படிச்சிருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம்பவம் #1

சம்பவம் #1

'உன்னோட சம்மதம் இல்லாம தான் அவன் செக்ஸ் வெச்சுக்கிட்டானா?', எனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து வந்த சைக்காலஜிஸ்ட் கேட்ட கேள்வி இது. ஏன்னா, நான் கற்பழிக்கப் பட்டிருந்தேன்.

அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில். 'அதுவொரு வீக்கென்ட். நானும் என் ஃபிரெண்டும் டேட்டிங் போயிருந்தோம். நானும் அவனும் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். அவன் ரொம்ப ஸ்மார்ட். அவன் கண்ணு, கண்ணிமை ரொம்ப அழகா இருக்கும். ஜெண்டிலா நடந்துக்கிட்டான். நான் தூங்கி எழுந்த பின்ன தான் தெரிஞ்சுது. நாங்க செக்ஸ் வெச்சுக்கிட்டோம்.'

பொய் சொல்ற...

பொய் சொல்ற...

சைக்காலஜிஸ்ட் என்மேல அக்கறையோட ஒரு பார்வை பார்த்தாரு. 'என்ன யாரும் ரேப் பண்ணல. ஒருவேளை அதுக்கு முன்னாடி ஏதாவது நடந்துச்சான்னு எனக்கு தெரியல'ன்னு சொல்லி தலைய, தலைய ஆட்டுனேன்.

எனக்குள்ள ஒரு குரல், 'நீ பொய் சொல்ற...'ன்னு ரொம்ப சத்தமா கத்துச்சு. ஆனா, அது வெளியில இருக்க யாருக்கும் கேட்கல. கேட்கவும் கேட்காது. எனக்கு ரேப்னா என்னன்னு தெரியும். சின்ன வயசுல இருந்த அதுப்பத்தி நான் நிறையப் படிச்சிருக்கேன். நிறைய கட்டுரைகள் அதுப்பத்தி எழுதி இருக்கேன்.

வெளி வேஷம்!

வெளி வேஷம்!

சைக்காலஜிஸ்ட், 'நீ வெளிவேஷம் போடுற, எதையோ மறைக்கிற. கபடநாடகம் ஆடாத'ன்னு சொன்னாரு. அவர் சொன்னது தான் உண்மை. நான் கற்பழிக்கப்பட்டேன்ங்கிற உண்மைய ஒத்துக்கிட்டா திரும்ப டெஸ்ட்க்கு போகணும், திரும்ப அந்த காயங்கள்ல இருந்து மெல்ல, மெல்ல வெளிவரணும். அதெல்லாம் எனக்கு வேண்டாம். அதனால தான் நான் சைக்காலஜிஸ்ட் கிட்ட உண்மைய சொல்லல.

சம்பவம் #2

சம்பவம் #2

என்ன கற்பழிச்சவனோட மெத்தையில இருந்து எழுந்த மறு நிமிஷமே, தான் என்ன பண்ணேன்ங்கிற தவறு புரிஞ்சிக்கிடான் என்னோட ரேபிஸ்ட். என்ன மன்னிச்சிடுன்னு சொன்னான். என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடுன்னு அழுதான்.

அந்த நிகழ்வு நடந்து நான் கிளம்பின ஒரு மணி நேரம் கழிச்சு என்ன மன்னிச்சிடுன்னு மெசேஜ் பண்ணான். நான் அதுக்கு எந்த பதிலும் கொடுக்கல. உண்மையில என்ன ரெஸ்பாண்ட் பண்றதுன்னு எனக்கு தெரியல. ஒரு வாரம் கழிச்சு திரும்ப மெசேஜ் பண்ணான். 'நான் பண்ண தப்ப எப்படி சரி பண்றதுன்னு தெரியல. ஆனா, எனக்கு வாய்ப்புக் கொடுன்னு', அந்த மெசேஜ்ல எழுதி இருந்தான்.

மன்னிப்பு!

மன்னிப்பு!

என் வீட்டுக்கு வர அனுமதி கேட்டான். சரின்னு சொன்னேன். அவன் வரதுக்குள்ள கூகுள்ல மன்னிப்பு கேட்குற ரேபிஸ்ட்ட எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தேடி பார்த்தேன். எந்த ரிசல்டும் உருப்படியா இல்ல. அவன்கிட்ட என்ன பேசுறது, அவன் ஏதாவது சொன்னா எப்படி பதில் சொல்றதுன்னு எனக்கிட்ட எந்த திட்டமும் இல்ல.

என் ரூம்க்கு வந்தான். சோபால உட்கார்ந்தான். தேம்பி, தேம்பி அழுதான். நிறுத்தாம, எழுத்துட்டே மன்னிப்பு கேட்டுட்டே இருந்தான். இனிமேல் இப்படி ஒரு தப்பு பண்ண மாட்டேன். உண்ண இது ஹர்ட் பண்ணும்னு எனக்கு தெரியல, வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலனு சொல்லி, சொல்லி அழுதுட்டே இருந்தான்.

செக்ஸ்!

செக்ஸ்!

என் நெஞ்சு உடைஞ்சு போச்சு. மன்னிச்சேன். இது சரியா? மன்னிப்பு கேட்டா எல்லாம் சரி ஆகிடுமானு சில எண்ணங்கள். ஆனா, அவனோட அழுகை என்ன மாத்திடுச்சு. அவன, அவனோட அழுகைய கண்ட்ரோல் பண்ண மெல்ல அணைச்சு ஆறுதல் சொன்னேன். அது முத்தமா மாறுச்சு. அது என் வாழ்க்கையில அடுத்த ஒரு செக்ஸ் அனுபவமா முடிஞ்சுது.

அந்த ஆறு மணி நேரம், ஒரு பக்கம் கலவுறவு இன்பம், மறுபக்கம் நான் ஏன் அவன அக்ஸப்ட் பண்ணேன்கிற தயக்கம், என் உடம்புலயும், மனசுலயும் மாறி, மாறி அனலும், காற்றும் அடிச்சுட்டே இருந்த மாதிரி இருந்துச்சு. ஒருக்கட்டதுல நான் உணர்வற்ற ஜடமா தான் கிடந்தேன்.

அது காதலா மாறிடிச்சு!

சம்பவம் #3

சம்பவம் #3

நான் கற்பழிக்கப்பட்ட போது, எனக்கு 12 வயசு இருக்கும். அது எனக்குள்ள பெரிய அதிர்சிய ஏற்படுத்துச்சு. என் உடம்பு முழுக்க ஏதோ காயம் உண்டான மாதிரி உணர்வு.

என்ன நானே அழிச்சுக்க முயற்சி பண்ணேன். நிறைய கோபம், என்ன நானே வெறுத்தேன். என் தொடை பகுதிகள்ல கீச்சி காயங்கள் ஏற்படுத்திக்கிட்டேன்.

நிறைய வலி, ஹாட் வாட்டர் ஷவர்ல எத்தன நேரம் குளிச்சும் அந்த அழுக்கும், அழுகையும், வலியும் என்னைவிட்டு போகவே இல்ல. உடம்பெல்லாம் கீறல் காயம். என்ன நானே வருத்திக்கிட்டேன்.

சம்பவம் #4

சம்பவம் #4

கற்பழிக்கிறவங்கள எல்லாம் நாம ஒரு அரக்கன் மாதிரி தான் பார்க்குறோம். அவங்க கிட்ட மனிதத் தன்மையே இல்ல. அவங்க கட்டாயப்படுத்தி ஒரு உடலை, உயிரை நாசம் பண்றாங்க. மத்தவங்க உணர்ச்சிக்கு அவங்க மதிப்பு கொடுக்குறதே இல்ல. என் நினைவுகள நகர்த்தி பின்னோக்கி போய் பார்த்தப்ப இதெல்லாம் எனக்கு நினைவுக்கு வந்துச்சு.

நானும் அவனும் காதலிச்சிட்டு இருந்தோம். என் நாட்கள், காலம், நொடிகள் எல்லாமே அவனோட கட்டுப்பாட்டுல இருந்துச்சு. அவன் தான் என் வாழ்க்கைன்னு, என் சந்தோசத்தோட சாவிய அவன் கையில கொடுத்து வெச்சிருந்தேன். நான் அவன விரும்புறேன்னு அவன்கிட்டே சொல்லி இருந்தேன்.

கனவுகள்!

கனவுகள்!

அவன் என்ன பார்த்த விதம், என் மேல வெச்சிருந்த அக்கறை எல்லாமே அவனும் என்ன லவ் பண்றான்னு தான் நினைக்க வெச்சது. எங்க கல்யாணம், எங்க இல்வாழ்க்கை, தாம்பத்தியம் பத்தி நிறைய கனவுகள் இருந்துச்சு. ஆனா, எல்லாமே தண்ணியில எழுதி வெச்ச மாதிரி கலஞ்சு போச்சு. என்னோட கடந்த கால நினைவுகள்ல இருந்து என்னால வெளிவர முடியல.

எனக்கும், அவனுக்கும் மத்தியில நடந்த உடலுறவ நான் காதலா தான் பார்த்தேன். ஆனா, அவன் என்ன ஏமாத்திட்டு போனப்ப தான், அவன் என்ன, என்னோட ஒப்புதலோட கற்பழிச்சுட்டு போயிட்டான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. எங்களுக்குள்ள அந்த செக்ஸ் சமாச்சாரம் நடந்த அடுத்த வாரமே, அவன் வேற ஒரு பொண்ணு கூட டேட் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

வலி!

வலி!

அந்த நிராகரிப்பு, அத என்னால ஏத்துக்கவும் முடியல. கடந்து வரவும் முடியல. அதுக்கப்பறம் எங்களுக்குள்ள எந்தவொரு உறவும் இல்ல. எனக்குள்ள இருந்த கனவுகள் மட்டுமே பறந்துப் போச்சே தவிர, வலிகள் நிரந்தரமா எனக்குள்ளயே தங்கிடுச்சு.

நினைவுகளுக்கு ஒரு பெரிய சக்தி இருக்கு. அது எந்தவித உணர்ச்சியா இருந்தாலும் இரட்டிப்பா கொடுக்கும். என் வலியும் அப்படி தான் நாளுக்கு, நாள்.. அந்த நாட்களா நெனச்சு பார்க்கும் போதெல்லாம் இரட்டிப்பாகிட்டே போகுது.

மருந்து!

மருந்து!

ஒவ்வொரு பொண்ணும் ஏதோ ஒரு வகையில கற்பழிக்கப்படுறாங்க. ஒருத்தர் அவங்களோட ரேபிஸ்ட வெறுக்குறாங்க, ஒருத்தர் காதலிக்கிறாங்க. ஒருத்தர் ஏதும் செய்ய முடியாத கையறுநிலையில தவிக்கிறாங்க. சிலர் தன்ன ரேப் பண்ண அதே நபரோட குடும்பமும் நடத்துறாங்க.

அந்த கற்பழிப்பு சம்பவத்துல இருந்து வெளிவர நிறையா வழிகள் இருக்கு. ஆனா, பெரும்பாலும் அதையாரும் கையாளுறது இல்ல. நிறையா பேர் கற்பழிக்கப்பட்டுட்டா அவ்வளவு தான் வாழ்க்கை முடிஞ்சதுங்கிற நிலைக்கு போயிடுறாங்க.

காயங்கள்!

காயங்கள்!

இந்த காயங்கள் நம்ம உடம்புல, மனசுல ஏற்பட்டிருக்கு. இதுக்கான மருந்த நாம தான் தேடித் பிடிச்சு காயத்த ஆத்தணும். அதைவிட்டு அந்த காயத்தோட வாழப்போறேன், அந்த காயத்துக்கான மருந்து போட்டுக்க மாட்டேன். அந்த காயம் இன்னும் பெருசாக தான் விடுவேன்னு சொல்றது எல்லாம் தவறு.

கை, கால்ல, பிளேடு வெச்சு அறுத்துக்கிட்டா காயம் சரி ஆயிடுமா, ரேப் பண்ணிட்டு வேற ஒரு பொண்ண தேடி போறவன, அவன் பாட்டுக்கு போகட்டும். நான் இந்த வலியோக வாழ்றேன்னு சொல்லி விட்டுட்டா அந்த காயம் சரி ஆகிடுமா? எல்லா காயத்துக்கும் ஒரு மருந்து இருக்கு. முதல்ல நாம ஒத்துக்கணும். நாம ஏமார்ந்தத, ஏமாத்தப்பட்டத.

தண்டிக்கணும்!

தண்டிக்கணும்!

மறப்போம், மன்னிப்போம்ங்கிறது நம்ம சொந்த உடலுக்கும், மனசுக்கும் நாமலே செய்ற துரோகம்.

சில சமயம் மருந்து நம்மள திருத்திக்கிறதாவும், மாத்திக்கிறதாவும் இருக்கும். சில சமயம் மருந்து காயத்த உண்டாக்குனவனுக்கு தகுந்த தண்டனை வாங்கி தரதா இருக்கும். ஆனா, காயத்துக்கு மருந்து போட்டே ஆகணும். இல்லன்னா அந்த காயம் உங்கள தான் மெல்ல, மெல்ல கொன்னுக்கிட்டே இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion