Latest Updates
-
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்..
இறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்!
இறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்!
காதல் அழிக்க முடியாதது. இறந்த கணவன் / மனைவி ; காதலன் / காதலியை நினைத்துக் கொண்டே உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எத்தனையோ நபர்களை கதை, சினிமா ஏன் நம் நிஜ வாழ்விலும் கூட நாம் பார்த்திருக்கிறோம்.
ஏன், சிலர் சில சமயங்களில் இறந்த நபர்கள் இன்னும் தன்னுடன் தான் இருக்கிறார்கள்.. அவரை வீட்டில் இன்றும் ஆங்காங்கே காண்கிறேன். நாங்கள் உரையாடிக் கொள்கிறோம் என்றெல்லாம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துவார்கள்.
இதுவே உங்களுக்கு அதிர்ச்சி என்றால்.. இறந்த காதலனனின் ஆவியுடன் செக்ஸ் வைத்து வருகிறேன் என்று ஒரு பெண் கூறுவதை கேட்டால் என்ன ஆவீர்கள்...?

நியூசிலாந்து!
சிமோன் நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் பெண். இவரும், இவரது காதலரும் தொலைதூர உறவில் இருந்து வந்தனர் எதிர்பாராத விதமாக சிமோனின் காதலை ஒரு கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தன் காதலர் இறந்த தினத்தில் இருந்து, தினமும் இரவு தன்னை காண வருகிறார் என்று தெரிவிக்கிறார், சிமோன்.

கனவா?
சிமோன் ஒருவேளை கனவு காண்பதை தான் இப்படி கூறுகிறாரா? என்று வினாவிய பொழுது. இல்லை! நிச்சயம் கூறுவேன், அது என் காதலன் தான். என்னால் அவனை உணர முடியும் என்று கூறியதுடன். தானும், தனது காதலனின் ஆவியும் தினமும் கூடி மகிழ்வதாகவும் கூறினார். இது தனக்கு ஒரு ஆச்சரியத்தை, சொல்ல முடியாத உணர்வை அளிப்பதாகவும் சிமோன் தெரிவித்திருக்கிறார்.

தொடர்கதை!
சமீபத்தில் தான் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரை சேர்ந்த அமித்ஸ்ட் ரியல்ம் என்ற பெண்மணி தான் ஆவிகளுடன் கலவி உறவில் ஈடுபட்டு வருவதாகவும். ஆறு மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் கண்ட ஆவியுடன் மூன்றாவதாக காதலித்து வருவதாகவும் கூறினார்.
இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், ஆவிகளுடன் கூடி குழந்தை பெற்று பேய் குடும்பத்தை உருவாக்கவும் தான் விரும்புவதாகவும் கூறி அமித்ஸ்ட் ரியல்ம் பரபரப்பை ஏற்படுத்தினார்.

எங்கே செல்லும் இந்த பாதை...
ஒரு பக்கம் ஆண், பெண் இன்று ஏலியன் போன்ற உருவம் வேண்டும் என்று உருவத்தை மாற்றிக் கொள்ளும் நபர்கள் உலகில் அதிகரித்து வர. இப்போது அமித்ஸ்ட் ரியல்ம் மற்றும் சிமோன் போன்ற பெண்கள் தாங்கள் பேய்களுடன் செக்ஸ் கொண்டு வருகிறோம் என்று கூறி அதிர்ச்சியை அதிகரித்து வருகிறார்கள்.
அமித்ஸ்ட் ரியல்ம் மற்றும் சிமோன் சொல்வதில் எந்தளவு உண்மை என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இதை எல்லாம் கண்டுபிடிக்க அறிவியல் கருவிகள் இல்லை என்பதால் இவர்கள் வாய்க்கு வரும் அளவுக்கு அளந்துவிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

பிரபலம்?
ஒருவேளை இணையத்தில், மக்கள் மத்தியல் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இவர்கள் இப்படி செய்கிறார்களா என்பதும் விளங்கவில்லை. நம் ஊரிலாவது டப்ச்மேஷ் செய்து தான் புகழ் தேடுகிறார்கள்.
ஆனால், இவர்களோ... பேய்களுடன் கலவுகிறோம், குழந்தை பெற்றுக் கொள்ள போகிறோம் என்று வேற லெவலில் புழுகித் தள்ளி வருகிறார்கள். முதலில் பிரபலமாவதற்காக இப்படி பொய்களை தட்டிவிடுவோருக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
