Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
நேரலையில் ஆண் நிருபரை முத்தமிட்ட 2 ரஷ்ய இளம் பெண்கள் - (வீடியோ)
என்னங்க சார் உங்க சட்டம்... பொண்ணுங்க கிஸ் பண்ணாலும் பாலியல் துன்புறுத்தல் தான்!
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தற்போது நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரை குறித்து நேரலை செய்தியில் பேசிகொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரை கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் திடீரென நேரலையில் குறிக்கிட்டு முத்தமிட்டு விட்டு சென்றார்.
அந்த பெண்மணி டி.டபிள்யூ (Deutsche Welle - DW) என்ற மாஸ்கோவை சேர்ந்த செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவியது. பலரும் அந்த ஆணை திட்டினார்கள்.

Image Source: DW News and MBN News
சிலர் இது வெறும் கேளிக்கை என்று கூறினாலும், ஒரு பெண்ணிடம் இப்படியா அநாகரீகமாக நடந்துக் கொள்வது என்று கூறி பலதரப்பட்ட கருத்துக்கள் இந்த நிகழ்வை குறித்து சமூக ஊடகங்களில் பரவியது.
ஒட்டுமொத்த குரலாக இந்த நிகழ்வானது பெண்ணுக்கு எதிராக நடந்த பெரும் கொடுமை என்ற பதிவானது. ஆம்! உண்மை தான் நேரலையில் தனது பணியை செய்துக் கொண்டிருக்கும் ஒரு நபரை அவரது விருப்பமின்றி முத்தமிட்டது தவறு தான். இதை கேலி என்று கூறுவது எல்லாம் ஏற்புடைய கருத்து அல்ல.
நிருபர்!
ஜூலியட் கோன்சலஸ் தேரன் என்று அறியப்படும் அந்த பெண் நிருபர்.. அன்றைய தினம், செய்து தொகுப்பாக இரண்டு மணி நேரமாக பணியாற்றிக் கொண்டிருந்தோம். தேவையான வீடியோ பதிவுகளை எல்லாம் சேகரித்துவிட்டு, சரியாக நாங்கள் அப்போது தான் நேரலையில் இணைந்தோம். அது தான் சரியான தருணம் என்று கருதிய அந்த ஆண், அதை பயன்படுத்திக் கொண்டார். நேரலை முடிந்து நாங்கள் தேடிய போது அவர் அந்த இடத்தில் இல்லை என்றும் ஜூலியட் கோன்சலஸ் தேரன் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை பெரும்பாலானோர் ஒரு பெண்ணுக்கு எதிராக நடந்த அநீதியாக தான் பதிவு செய்திருந்தனர்.
நேற்று!
அதே கால்பந்தாட்ட உலகக்கோப்பை குறித்த செய்தி நேரலை தான்... அதே போல நிருபரை இருவர் இம்முறை முத்தமிட்டு செல்கின்றனர். ஆனால், நிருபர் ஒரு ஆண், முத்தமிட்ட இருவரும் பெண்கள். இந்த செய்தியை ஊடகங்கள் எப்படி கையாண்டன... சமூக ஊடகங்களில் மக்கள் இதற்கு எப்படி ரியாக்ட் ஆனார்கள்.. கொடுத்து வெச்ச ஆளு, செம்ம இலக்கு, யோகம்... ஜாலி பண்ணிடாப்புல... ஆங்கிலத்திலோ, கொரியாவிலோ, ரஷ்ய மொழியிலோ.. எந்த மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் வெளியான செய்தி தலைப்புகள், மக்களின் ரியாக்ஷன் இப்படியான வார்த்தைகளில் தான் வெளிப்பட்டது.

தக்காளி, இரத்தம்!
அதெப்படி, ஒரு பெண் நிருபரை ஆண் முத்தமிட்டால் அத்துமீறல், கொடூரமான புத்தி, மனிதன்மையற்ற செயலாக காணப்படுகிறது, அதுவே ஆண் நிருபரை பெண்கள் முத்தமிட்டால்.., அவனுக்கு ஜாலி, யோகம், கொடுத்து வைத்தவர் என்றாகிவிடுகிறது. இது எப்படியான கண்ணோட்டமாக எடுத்துக் கொள்வது. இந்த சமூகம் பெண்கள் பெண்கள் பாலியல் குற்றங்களை செய்தால் கூட... அட அந்த ஆண் என்ஜாய் பண்ணியிருப்பாரு என்று தான் கூறுமா?
பெண்களுக்கு நடந்தால் இரத்தம், ஆண்களுக்கு நடந்தால் தக்காளி சட்னியா? என்னங்க சார் / மேடம் உங்க சட்டம்...??

பாலின வேற்றுமை ஏன்?
தன்னை முத்தமிட்ட பிறகு அந்த பெண் நிருபரும் தொடர்ந்து தனது வேலையை தான் செய்தார்.. இடையூறை கண்டுகொள்ளவில்லை, ஆண் நிருபரும் அதே மாதிரியாக முத்தமிட்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தனது பணியை தான் கவனித்துக் கொண்டிருந்தார். இருவரும் அவரவர் வேலையில் கவனமாக தான் இருந்தனர். ஆனால், எங்கிருந்த வந்தது இதில் பாலின வேறுபட்ட கருத்து?

தவறு, தவறுதான்!
ஆணுக்கு நடந்தாலும் சரி, பெண்ணுக்கு நடந்தாலும் சரி தவறு தவறு தான். ஒரே சூழல், ஒரே துறை, ஒரே மாதிரியான இடையூறு, ஆனால், மக்கள் மத்தியிலான கருத்து மற்றும் செய்திகளில் வெளியான தாக்கம் மட்டும் வெவ்வேறு மாதிரி. அந்த பெண்ணுக்கு நேர்ந்தது தவறு என்றால், இந்த ஆணுக்கு நேர்ந்ததும் தவறு தான். அல்ல இந்த ஆணுக்கு நடந்ததை கேளிக்கையாக தான் காண்போம் என்றால், அந்த பெண்ணுக்கு நேர்ந்ததும் கேளிக்கையானது தான்.

சமநிலை!
கற்பு ஆண்களுக்கும் உண்டு என்பதை மறந்து விட்டதோ என்னவோ இந்த சமூகம்.
இதெல்லாம் யாராச்சும் சீரியஸா எடுத்துக்கலாமா என்று யாரேனும் கருத்து கூறலாம், கூவலாம்... எடுத்துக் கொள்ள தான் வேண்டும். பாலின சமநிலை என்பது அனைத்திலும் இருக்க வேண்டும். பேருந்தில் தனித்தனி இருக்கை, சினிமாவில் தனித்தனி டிக்கெட் என்பதில் மட்டும் இருப்பதல்ல பாலின சமநிலை.



Click it and Unblock the Notifications
