Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
உங்கள் பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குகிறதா? இதை படிங்க
ஒவ்வொரு எழுத்திற்கும் அதற்கு ஏற்ற பலன்கள் உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.அந்த எழுத்தை பொறுத்தே உங்கள் வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கணிக்கப்படுகிறது. அதன்படி பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்கள
உங்கள் பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குகிறதா? வேதங்களின் படி உங்கள் பெயர் தொடங்கும் எழுத்தை வைத்து ஒருவருடைய குணநலத்தை கூற முடியும். உங்கள் பெயரில் உச்சரிக்கும் முதல் எழுத்தின் பிரதிபலிப்பு உங்கள் ராசியில் பிரதிபலிக்கும். அதனால்தான் இந்தியாவில் குழந்தைகளின் பெயர்கள் அவர்களின் ராசியின் படி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் அதற்கு ஏற்ற பலன்கள் உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.அந்த எழுத்தை பொறுத்தே உங்கள் வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கணிக்கப்படுகிறது. அதன்படி பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதையும், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைய என்ன வழி என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

எதார்த்தமானவர்கள்
A என்னும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் எதார்த்தமானவர்களாக இருப்பார்கள். முன்பின் தெரியாதவர்கள் கூறுவதையோ, அவர்கள் செய்யும் செயல்களையே அவர்கள் எப்போதும் நம்பமாட்டார்கள். அவர்கள் மூளை சொல்வதை மட்டுமே அவர்கள் நம்புவார்கள். ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை பின்பற்ற மாட்டார்கள், ஏனெனில் அந்த விதிமுறைகளை எப்பொழுதும் உடைக்க வாய்ப்புள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். மற்றவர்களை நம்பும் முன் முதலில் அவர்களை பற்றி அலசி ஆராய்வார்கள்.

தீர்க்கமான முடிவு
ஒருமுறை அவர்கள் தங்கள் இலக்குகளை தீர்மானித்து விட்டால் அதிலிருந்து அவர்கள் மாறவோ, பின்வாங்கவோ மாட்டார்கள். அவர்கள் இலக்குகளை முடித்த பின்னரே ஓய்வெடுப்பார்கள். இதற்கு காரணம் இவர்கள் தங்கள் இலக்கு மேல் கொண்டுள்ள உறுதிதான். இதனால்தான் இவர்களுக்கு தங்கள் மேல் உள்ள தன்னம்பிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் சிலசமயம் அவர்களின் உறுதி அதிக பிடிவாதமாக மாறிவிடும்.

பொறுமைசாலிகள்
இவர்களின் மிகச்சிறந்த குணமே அவர்களுடைய பொறுமைதான். பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்கள் பெரும்பாலும் வழக்கத்தை விட பொறுமைசாலிகளாக இருப்பார்கள். அவர்களின் இலக்குக்காக போதுமான அளவு முயற்சியை வழங்கியபின் அதற்கான முடிவிற்காக பொறுமையாக காத்திருப்பார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் நல்ல முடிவுகள் சிறிது காலம் எடுக்குமென்று. அவர்களிடம் நல்ல உணவு செய்கிறோம் என்று கூறிவிட்டால் அதற்க்காக தாரளமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள். சிலசமயம் இவர்களின் பொறுமை இவர்களுக்கு சோம்பேறி என்ற பெயரை பெற்றுத்தரும்.

அமைதி
நீங்கள் ஒருவரின் அமைதியை பார்த்து மிகவும் ரசித்தீர்கள் எனில் அவர்களின் பெயர் A என்னும் எழுத்தில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. ஆமாம் யாருடைய பெயரெல்லாம் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்கள் மிகவும் அமைதியான குணம் உடையவர்களாக இருப்பார்கள். மிகவும் குறைவாகத்தான் பேசவும் செய்வார்கள். உங்களை பற்றிய அனைத்து கணிப்புகளையும் அவர்கள் தங்கள் மனத்திற்குள்ளேய கணித்துவிடுவார்கள். ஆனால் அதனை வெளியில் கட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏன் தெரியுமா அப்பொழுதுதான் நீங்கள் அவர்களை எளிதில் நம்புவீர்கள்.

திறந்த மனப்பான்மை
இவர்களிடம் இருக்கும் மற்றொரு பாராட்டப்பட வேண்டிய குணம் திறந்த மனப்பான்மை ஆகும். அவர்கள் சமூகத்தை பற்றியோ, மற்றவர்களின் வெளித்தோற்றம் வைத்து அவர்களை கணிக்கமாட்டார்கள். அவர்கள்களுக்கென்று தனி கொள்கைகளும், கருத்துக்களும் இருக்கும். அவர்கள் கருத்துக்களில் மற்றவர்கள் தலையிடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். சிலசமயம் அவர்கள் தங்கள் துணைக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பார்கள், அதேசமயம் எளிதில் புரிந்து கொள்வபர்களாகவும் இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications