Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)
ஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)
ஒரு உயிர் பலிக்கு ஈடு செய்ய, முன்னூறு முதலைகளை கொன்று குவித்து ஒரு ஈவிரக்கமற்ற படுகொலை செயலை செய்துள்ளனர் இந்தோனேசிய மக்கள். இந்தோனேசியாவில் ஒரு முதலை பண்ணைக்குள் நுழைந்து அங்கிருந்த 292 முதலைகளை கத்தி, சுத்தியல், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த கொலை குவியல் பார்ப்பவர்களை குலைநடுங்க செய்கிறது. முதலை கொடூரமான விலங்காக இருப்பினும், முதலை மீது தான் மக்கள் அனுதாபப்படுகிறார்களே தவிர, அந்த மக்கள் மீதல்ல.
தாக்குதல்!
அடிக்கடி அந்த பக்கமாக வந்து செல்லலும் மக்களை முதலைகள் தாக்கி வந்துள்ளன. சமீபத்தில் ஒரு நபர் பண்ணையில் இருந்த முதலை ஒன்று தாக்கி அவர் இறந்துவிட்டார்.
இதனால் கொடுங்கோபம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த இந்தோனேசிய மக்கள், கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து சென்று, பண்ணையில் இருந்த மொத்த முதலைகளையும் கொடூரமாக தாக்கி கொன்று குவித்துள்ளனர்.
சோகம்!
சமூக தளங்களில் கொன்று குவிக்கப்பட்ட அந்த முதலைகளின் உடல்களை கண்டு மக்கள் வேதனை அடைந்துள்ளனர் இது ஒரு மனித வெறிப்பிடித்த செயல். என்ன இருந்தாலும் விலங்குகளை இப்படியா கொன்று குவிப்பது? என்று பலரும் கருத்துக்கள் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நூற்றாண்டின் ஒரு கொடூரமான மனிதன்மையற்ற செயலாக இது காணப்படுகிறது.
எங்கே?
மேற்கு பப்புவா எனும் இந்தோனேசிய பகுதியில் தான் இந்த கொடுஞ்செயல் நிகழ்ந்துள்ளது. ஒருவரை முதலை தாக்கி கொன்றதால், அருகே இருந்த முதலை பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 292 முதலைகளையும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொடூரமாக தாக்கி கொன்றிருக்கிறார்கள்.

எப்போது?
விலங்குகளுக்கு எதிரான இந்த கொடுஞ்செயல் ஜூலை 16 அன்று இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா எனும் பகுதியில் நடந்துள்ளது. மக்கள் கொன்று குவித்த அந்த 292 முதலைகளையும், இந்தோனேசியா அரசாங்கம் ஒரே இடத்தில் குழி தோண்டி ஒட்டு மொத்தமாக அந்த உடல்களை எரித்துள்ளனர்.
மக்கள் கொந்தளிப்பு!
ஒரு உயிர் பலியானதை காரணமாக கொண்டு, இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கானமுதலைகள் மக்கள் கொடூரமாக கொன்று குவித்துள்ள இந்த நிகழ்வை கண்டு, உலக மக்கள் கொந்தளித்துள்ளனர். உலகின் பல முன்னனி செய்தி சேனல்கள் முதற்கொண்டு, சாமானிய மனிதர்கள் உட்பட பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
அறிவிலித்தனம்!
அறிவிலித்தனமாக முதலை பண்ணை இடத்திற்கு சென்று முதலையால் தாக்கப்பட்டு இறந்த நபருக்காக ஒரு பகுதியை சேர்ந்த அனைவரும் முட்டாள்தனமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக அவர்களின் அறிவிலித்தனத்தை தான் வெளிப்படுத்துகிறது. ஒரு உயிருக்காக முன்னூறு உயிர்களை பலி வாங்குவது என்பது சகித்துக் கொள்ள முடியாத குற்றம். மனிதர்களின் உயிர்களுக்கு மட்டும் தான் மதிப்புண்டா? விலங்குகள் உயிர்கள் எல்லாம் அநாவசியமாக போய்விட்டதா?
கொடூர மிருகம்!
இந்த உலகிலேயே கொடூரமான மிருகம் மனிதர்கள் தான். இதர மிருகங்கள் கூட தங்களுக்கு பசிக்கும்போது மட்டும் தான் வேட்டையாடி உயிர்களை கொல்கிறது. மனிதன் மட்டுமே, தனது ஆசைகளுக்காக, பொழுதுபோக்குக்காக, ஆடம்பரத்திற்காக, கோபத்தை தீர்த்துக் கொள்ள, கேளிக்கையாக என இதர உயிர்களை அநாவசியமாக கொன்றுக் குவிக்கிறான்.



Click it and Unblock the Notifications