Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குப்பத்துப் பொண்ணுனா இளக்காரமா? உடம்ப திங்கிற மாதிரி பாக்குறாங்க... - My Story #149!
குப்பத்துப் பொண்ணுனா இளக்காரமா? உடம்ப திங்கிற மாதிரி பாக்குறாங்க... - My Story #149!
நான் நேத்து சாயங்காலம் ஃபேக்டரிக்கு வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது கூட என்ன நிறைய பேர் ஒருமாதிரி பார்த்தாங்க. நான் நேர வீட்டுக்கு போகாமா, முகத்தை மூடிக்கிற அங்கி வாங்க தான் போனேன். இந்த அங்கி வாங்க நான் ஒரு வருஷமா காசு சேர்த்து வெச்சுட்டு வரேன்.
ஏன்னா? நான் பாதுகாப்பா இருக்கேனான்னு எனக்கு தெரியல. குறைந்தபட்சம் என் முகம் தெரியாம இருந்தாலாவது என்ன சிலர் பார்க்காம இருப்பாங்க. இல்ல, சிலர் பாக்குறது எனக்கு தெரியாம போகலாம் இல்லையா?
எனக்கு ஒரு சந்தேகம்... நாங்க வாழற இடத்துக்கே ஏன் குப்பம்ன்னு பெயர் வெச்சாங்க? குப்பை கொட்டி கிடக்கிற இடத்துல்ல நாங்க வாழுறதாலயா? இல்ல எங்களை குப்பைன்னு முடிவு பண்ணியா?
இது தான் என் வாழ்க்கை!

உடை!
நான் வேலைக்கு செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் எனது உடையை காணாத நபர்கள் இல்லை எனலாம். நான் ஒன்றும் மாடர்ன் உடைகளை அணிந்துக் கொண்டு பாதி உடலை வெளிச்சமிட்டு காண்பித்துக் கொண்டு நடக்கவில்லை. ஆனாலும், நான் உடம்பில் எதுமே அணியாதிருப்பது போல கண்களை விரித்து சிலர் கொத்தி திண்ண பார்ப்பார்கள்.

மூன்று வருடங்கள்!
கடந்த மூன்று வருடங்களாக நான் எனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்பதற்காக ஒரு ஃபேக்டரியில் வேலை செய்து வருகிறேன். எங்கள் குடும்பம் ஒரு குப்பத்தில் தான் வாழ்ந்து வருகிறது. குப்பத்தில் வாழ்வதை நீங்கள் கடினம் என எண்ணினால். அதைவிட மிகப்பெரிய கடினம் ஒரு இளம்பெண்ணாக குப்பத்தில் வாழ்வது என்பதை நீங்கள் சேர்த்து அறிந்துக் கொள்ள வேண்டும். அதன் வலி, பயம், கொடுமை என்னவென்பதை முழுமையாக அறிந்தவள் நான்.

வன்கொடுமை!
யார், எப்போது, எப்படி என்னை நெருங்குவார்கள் என்ற அச்சம் எனக்குள் எப்போதுமே இருந்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்று திரும்பும் போது சில இளம் ஆண்கள் என்னை பின்தொடர்ந்து வருவார்கள்.சிலர் என்னை தவறான பார்வையில் நெருங்க முயர்ச்சிப்பார்கள். சில சமயங்களில் என்னை தவறான வார்த்தை கூறி அழைப்பார்கள், திட்டுவார்கள். அதற்கான காரணம் நான் குப்பத்தில் இருந்து வருகிறேன் என்பதால்.

எங்களுக்கும் உண்டு!
குப்பத்தில் பிறந்து வளரும் மக்களுக்கு உணர்ச்சியும், மானமும் இருக்கிறது என்பதை ஏனோ இந்த சமூகம் மறந்துவிடுகிறது. நாங்கள் செய்யும் வேலை வேண்டுமானாலும் அழுக்காக இருக்கலாம். ஆனால், நாங்கள் மிகவும் சுத்தமாக தான் இருக்கிறோம். நாங்கள் உடுத்தும் உடை வேண்டுமானால் அசுத்தமாக இருக்கலாம். ஆனால், எங்கள் உடலும், மனதும் மிகவும் சுத்தமாக தான் இருக்கிறது.

காலையில்...
ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக்கு வெளியே வந்து தான் முகம் கழுவ வேண்டும். முகம் கழுவுவது மட்டுமல்ல, காலைக்கடனில் துவங்கி, குளிப்பது என அனைத்தும் வீட்டுக்கு வெளியே தான். உணவு சாப்பிடவும், இரவு உறங்க மட்டுமே நாங்கள் வீட்டை பயன்படுத்துகிறோம்.

பார்வை!
அப்படியாக நான் தினமும் காலையில் முகம் கழுவ வீட்டுக்கு வெளியே சாலை அருகே வந்து, கை, கால் கழுவிக் கொண்டிருக்கும் போது, அந்த வழியே செல்லும் எனக்கு மிக நெருக்கமாக வந்து செல்வார்கள். சிலர் அவர்கள் கை என் மீது படும்படி நெருங்குவார்கள். என்னை கடந்து போகும் போது ஒருவிதமாக கேவலமாக காண்பார்கள். அவர்களது பார்வையிலேயே ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கும்.

பலம்!
நான் அனுதினமும் எதிர்கொள்ளும் ஆண்கள் அனைவரும் என்னைவிட வலிமையானவர்கள். அவர்கள் என்னை நெருங்கினாலோ, தீண்டினாலோ என்னால் எதுவும் செய்ய முடியாது. இது எனக்குள் அச்சத்தை மிகவும் அதிகரிக்க செய்கிறது. ஒருவேளை அவர்கள் என்னை கொடுமை படுத்தினால் கூட, என்னால் அதை எதிர்த்து போராட இயலாது. போராட்டம் செய்தால், அந்நாள் யார் வேலைக்கு போவார், என் வீட்டுக்கு யார் சோறு போடுவார்கள்?

நிர்வாணமாக?
நான் ஒன்னும் நிர்வாணமாக வாழ்ந்து வரவில்லையே, அப்பறம் எதற்கு என்னை அப்படி ஒரு பார்வையில் பார்க்கிறார்கள். நான் ஆடை அணிந்திருக்கும் போதும் கூட, என் முகத்தை பார்க்க துணிவில்லாத ஆண்கள் என் மார்பை பார்ப்பது எதற்கு?
அப்படி என்ன அங்கே இருக்கிறது? உங்கள் மனைவிக்கும், தங்கைக்கும், மகளுக்கும், அம்மாவுக்கும் அங்கே என்ன இருக்கிறதோ, அதே தான் எனக்கும் இருக்கிறது.

பாதுகாப்பு!
எங்களுக்கான பாதுகாப்பு என எதுவுமே இல்லை. ஆனால், மக்களுக்கு நாங்கள் இங்கே என்ன செய்கிறோம் என்று அறிந்துக் கொள்ள ஆர்வமும், ஆவலும் இருக்கிறது. எங்கள் அறைக்குள் இருந்து நாங்கள் பேசினாலும், அது வீதிக்கு கேட்கும். எவ்வளவு மெதுவாக பேசினாலும் கேட்கும். நாங்கள் இருப்பதே சாலை ஓரத்தில் தானே.
எங்கள் வீட்டுக்கு ஜன்னல்கள் இல்லை. ஆகையால் நாள் முழுக்க கதவை திறந்து தான் வைத்திருக்க வேண்டும். இதை காரணமாக வைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பது அவர்களுக்கு ஏனோ தவறாக கருதவில்லை.

இரவு!
இரவும் எனக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு இரவிலும், யார், எப்போது உள்ள நுழைவார்களோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருக்கும். எதாவது ஆணின் குரல் தொலை தூரத்தில் கேட்டாலும் கூட கண்கள் தானாக விழித்துக் கொள்ளும். என்னுடைய வாழ்க்கை அச்சம் மட்டுமே நிறைந்ததாகிவிட்டது.
- ஜி.எம்.பி ஆகாஷ் எனும் வங்காள தேச புகைப்படக் கலைஞர் தனது முகநூலில் பகிர்ந்திருந்த சுமி எனும் பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவம்.



Click it and Unblock the Notifications