For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது தான் இயக்குனர் ஷங்கரின் உண்மை முகம்!

இது தான் இயக்குனர் ஷங்கரின் உண்மை முகம்!

|

Recommended Video

2.O இயக்குனர் ஷங்கர்-பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்- வீடியோ

Director Shankars Stories and His Vision on Society!

ஷங்கர், தமிழில் பிரம்மாண்டத்திற்கு மற்றுமொரு பொருள் என்று கூறலாம். இவரு சும்மா, சும்மா தயாரிப்பாளர் காச வீணடிக்கிறார். எதுக்கு இவ்வளோ செலவு பண்ணனும். இத இன்னும் கம்மி பட்ஜெட்ல பண்ணி இருக்கலாம்... என்று இவரது ஒவ்வொரு திரைப்படத்தின் ஷூட்டிங் நேரத்திலும் பேசாத ஆளே இல்லை.

நமக்கு தெரிந்த ஷங்கர் எல்லாம் மாபெரும் டைரக்டர். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் என்று தான். ஆனால், ஷங்கருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்தாலும், இதுக்குறித்து பெரிதாக பேச மாட்டார்கள்.

கும்பகோணத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர். தன்னை சுற்றி பலத்தரப்பட்ட மக்களின் சூழலை பார்த்து, உள்வாங்கிக் கொண்டு வளர்ந்தவர் என்பதாலோ என்னவோ, அவரது கதைகளிலும் பல்வேறு தங்களில் வாழும் மக்களின் வலியும், உணர்வும் பங்குப்பெறாமல் இருந்ததில்லை.

இயக்குனர் ஷங்கரும் அவருக்கு சமூகத்தின் மீதிருக்கும் பார்வை மற்றும் எமோஷன், இதுவரை வேறெந்த இயக்குனரும் தங்கள் கதைகளில் வெளிப்படுத்தாது என்றே கூறலாம்.

ஜெண்டில் மேன் முதல் 2.O வரை... தான் வெறும் இயக்குனர் மட்டுமல்ல, தன்னுள் பெரும் மனிதநேயமிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறார் ஷங்கர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெண்டில்மேன்!

ஜெண்டில்மேன்!

இயக்குனர் ஷங்கருக்கு முன் யாராவது தங்கள் முதல் படத்திலேயே அரசியல் கதையம்சத்தை கையில் எடுத்திருக்கிறார்களா? என்று ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும். 80, 90, 2000.. ஏன் இப்போதும் சில கல்லூரிகளில் சீட்டு வாங்க தகுதி இருந்தும், அதிகார வர்க்கத்தினரின் சிபாரிசு வாங்க இயலாத காரணத்தால், விரும்பிய படிப்பை படிக்க முடியாமல், மன வருத்தத்துடன் வேறு வழியின்றி கிடைத்ததை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.

தற்கொலை!

தற்கொலை!

இன்றும், வருடம் தவறாமல், நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய அளவிலான கல்லூரிகளில் இடம்பெற்று மர்மமான முறையில் இறக்கும் மாணவர்களை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். நுழைவு தேர்வில் முதல் இடத்தைப் பிடித்தவன், தான் நேசித்த பாடத்தை படிப்பவன், எதற்கு தற்கொலை செய்துக் கொள்ள போகிறான். அதுவும், அவனுக்கு பிடித்த பாடத்தை படிக்க முடியாமல்?

கல்வி ஊழல்!

கல்வி ஊழல்!

இந்தியாவில் நடக்கும் கல்வி ஊழல்களை குறித்து இன்னும் ஆயிரம் ஜெண்டில்மேன் படங்கள் எடுக்கலாம். ஆனால், அதை முதல் முதலில், அதுவும் தன் முதல் படத்தில் பதிவு செய்தவர் ஷங்கர். முன்பு அரசு கல்லூரிகளில் சீட்டு கிடைக்க பணம் வாங்கினார்கள். இன்று அந்தந்த அரசியல்வாதிகளே கல்லூரி கட்டி பணம்பறித்து கல்வியை கூறுப்போட்டு விற்றுக் கொண்டு வருகிறார்கள்.

MOST READ: முழங்கால் பக்கத்துல இப்படி இருந்தா அது எந்த புற்றுநோயின் அறிகுறி தெரியுமா? கவனமா இருங்க...

இந்தியன்!

இந்தியன்!

மத்த நாட்டுல எல்லாம் கடமைய செய்யாம இருக்க தான் லஞ்சம் வாங்குறான். இங்க மட்டும் தான் தன்னோட கடமைய செய்ய லஞ்சம் வாங்குறான். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்த்தாலும்... இந்த வசனத்திற்கு கனக்கட்சிதமாக பொருந்தும் பெருச்சாலிகள் அரசு அதிகாரிகளாக ஏதேனும் மூலைமுடுக்குகளில் தான் கையொப்பம் இடும் கோப்புகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கும்.

லஞ்சம்!

லஞ்சம்!

அரசியல் வாதிகள் சில நூறு பேரிடம் கோடிகளில் லஞ்சம் வாங்கினால். அரசு இயந்திரத்தின் சக்கரங்களாக கருதப்படும் அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரிடம் நூறு, ஆயிரம், இலட்சம் என லஞ்சம் வாங்குகிறார்கள். ஆக, இங்கே அரசியல்வாதிகளுக்கு இணையாக அரசு அதிகாரிகளும் நெறிகெட்டுக் கிடக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

புற்று!

புற்று!

பிறப்பு சான்றிதழ் பதிவு செய்வதில் இருந்து இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை லஞ்சம் கரைபுரண்டு கிடைக்கிறது. நூறு ரூபாய்க்காக வாக்களர் அட்டையை கொடுப்பதற்கு மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் லஞ்ச பெருச்சாலிகள் பல அரசு அலுவலகங்களில் இருக்கின்றன. கரையான்புற்று போல இவர்கள் அரசை கொல்லும் புற்றுகளாக வளர்ந்திருக்கிறார்கள்.

முதல்வன்!

முதல்வன்!

இருவர், இரு அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை குறித்து பேசிய திரைப்படம் என்றால், முதல்வன் அரசு இயந்திரத்தை அக்குவேறு, ஆணிவேராக ஆட்டிப்பார்த்த திரைப்படம். இனி! ஒரு முதல்வனை ஷங்கரே நினைத்தாலும் இயக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். ஒரு வசனம் பேசினாலே இங்கே மூக்கு வியர்த்துக் கொண்டு, அவர்கள் தங்களை தான் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்கள் என்ற கோபம் முக்கால்வாசி அரசியல்வாதிகளுக்கு வருகிறது.

தலைவர்(லி)கள்

தலைவர்(லி)கள்

பள்ளி நாட்களில் ஹோம்வர்க் முடிக்காதவங்க கைய தூக்குங்க, பெஞ்சு மேல எழுந்து நில்லுங்கன்னு சொன்னா வகுப்பு மொத்தமும் எழுந்து நிக்கிற மாதிரி. இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் ஊழல் செய்தவர்கள், முறைகேடு செய்தவர்கள் யார், யார் என்றால் அனைவரும் பெஞ்சு மீது எழுந்து நிற்க வேண்டிய சூழல் தான் உருவாகும்.

MOST READ: முடியை கருகருனு நீளமாக வளரச் செய்யும் கரும்பு ஜூஸ்... எப்படினு தெரியுமா?

கடமை!

கடமை!

நான் என் வேலைய தானே செஞ்சேன். அதுக்கு ஏன் என்ன அடிக்கிறாங்க...? என்ன மாதிரியே நம்ம நாடும் ஊனமா இருக்கு எழுந்து நிக்க வை தலைவா? இதெல்லாம் வெறும் வசனங்களாக மட்டும் காண இயலாது. தங்கள் கையாளத் தனத்தை, முந்தைய ஆட்சியாளர்கள் மீது சுமத்தும் அரசியல் தலைவர்கள் தான் இங்கே நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

அந்நியன்!

அந்நியன்!

உண்ணும் உணவில் இருந்து, வாங்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அது தரமாக தான் இருக்கிறதா? என்று என்றாவது நாம் சோதித்து பார்த்திருக்கிறோமா? கூறும் விலையில் பேரம் பேசுவதில் பாதியாவது.. இது தரமானதா என்று கேள்வி கேட்டிருந்தால்.. இன்று போலிகள் இத்தனை வளர்ந்திருக்காது. தவறு அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகளிடம் மட்டுமல்ல, மக்களிடமும் இருக்கிறது என்பதை வெளிகாட்டியவன் அந்நியன்.

யோக்கியமா?

யோக்கியமா?

வருடா, வருடம் சில ஆயிரம் வரி ஏய்ப்பு செய்ய, இல்லாத வாடகையை சேர்க்கிறோம், ஐ.டி ரிட்டன்ஸ் பெற இதை படித்துக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் தவறு செய்திருப்போம். நான் சின்ன திருடன்.. அவன் பெரிய திருடன் அதிகமா திருடுறான் என்று எந்த திருடனும்... தன் திருட்டின் அளவினை வைத்து.. வேறொரு திருடன் மீது குற்றம் சுமத்து முடியாது அல்லவா... அந்த நிலையில் தான் நாமும் இருக்கிறோம்.

விளைவுகள்!

விளைவுகள்!

இங்கே ஆளுபவர்கள் யோக்கியமா என்று கேள்வி எழுப்புவதற்கு முன்... நாம் யோக்கியமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக வரி செலுத்துகிறோம்? தப்பு என்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜானு பாக்குறதுக்கு.. அதோட விளைவுகள் எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான் என்று நெத்தியடியாக மண்டையில் உரைக்க கூறியவன் அந்நியன்.

சிவாஜி!

சிவாஜி!

நீ (அரசு) தான் நல்லது பண்ணமாற்ற, என்னையாவது (NGO) நல்லது பண்ணவிடுங்க என்று கெஞ்சினாலும்... நீ யாருடா இவங்களுக்கு நல்லது பண்ண. இலவசமா நீ கல்வி, மருத்துவம் கொடுத்திட்டா.. அப்பறம் நாங்க எப்படி பொழப்பு நடத்துறது...... இன்று வரை அரசு கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக கொண்டுவராமல் இருப்பதற்கு முதன் முதல் காரணம், அதில் பெரும்பங்கு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர்களே அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் தான்.

கருப்புப்பணம்!

கருப்புப்பணம்!

கருப்புப்பணம் என்ற ஒன்று தான், இந்தியாவை பல ஆண்டுகளாக வல்லரசு நாடாக முடியாமல் தடுத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சில நூறு பேர்கள் தான். ஆயிரங்களில் வரி செலுத்த நாமே இப்படி யோசிக்கிறோம் என்றால், சம்பாதிப்பதில் ஒரு பங்கினை கோடிகளில் வரியாக செல்லுத்த அவன் எப்படி எல்லாம் யோசிப்பான்.

MOST READ: பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி?

யார்?

யார்?

இன்றளவிலும் இந்தியாவில் கருப்புப்பணத்தை அழிக்க யாரும் முன்வரவில்லை. எதிர்கட்சியின் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டு, தாங்களே மொத்தமாக சுருட்டிக் கொண்டு போக தான் வழிவகை தேடுகிறார்கள். இதில் மக்கள் கியூவில் நின்று செத்தால் என்ன, சோறு தண்ணி இல்லாமல், பெற்ற மகளின் திருமணம் தடைப்பட்டு செத்தால் எனக்கென்ன கவலை. இது தான் இந்தியாவின் மாற்ற முடியாத தலை எழுத்தாக இருந்து வருகிறது.

வாயை மூடி பேசவும்!

வாயை மூடி பேசவும்!

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சி வாய் திறக்காது. காரணம், அவரவர் ஆட்சியில் இருக்கும் தம்மால் முடிந்த ஊழலை செய்துவிட்டு தான் நகர்கிறார்கள். நீ ஆட்சிக்கு வந்தால் என்னை கேள்விக் கேட்காதே... நான் ஆட்சிக்கு வந்தால் உன்னை கேள்விக் கேட்க மாட்டேன்... என்றே பங்க்சரான டயரோட அரசு இயந்திரத்தை ஓட்டி வருகிறார்கள்.

2.O!

2.O!

அரசு, மக்கள் செய்யும் தவறுகள் ஒரு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றால். தொழில்நுட்ப வளர்ச்சிகளில் நடக்கும் தவறுகள் உலகையே அழிக்கும் அச்சுறுத்தலை அளிக்கிறது. சிட்டுக்குருவி மட்டுமா தொழில்நுட்பத்தால் அழிந்த உயிரினம்.

2 நூற்றாண்டுகளில்!

2 நூற்றாண்டுகளில்!

பல கோடி ஆண்டுகளாக அழகாக சுழன்று வந்த பூமிக்கு இன்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம் யார்? உங்களுக்கு தெரியுமா? கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சி கண்டன. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் செய்த சாதனையின் காரணத்தால் தான், வட துருவம், தென் துருவம் முற்றிலுமாக அழியும் தருவாயில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

அழிவு!

அழிவு!

உலகின் பெரும் சதவித இயற்கையை அழித்துவிட்டோம்., ஓசோன் மண்டலத்த்தில் ஓட்டை போட்டோம், காட்டுக்கு மொட்டை அடித்தோம், கடல் முழுக்க நெகிழி கொட்டி கடல்வாழ் உயிரினங்களை அழித்தோம். உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடை, வாழும் வீடு என நம்மை அலங்காரப்படுத்திக் கொள்ள, நம்மை சுற்றி இருக்கும் இடத்தை, பொருளை அலங்கரிக்க... ஒட்டுமொத்தமாக இயற்கையை அழித்துவிட்டோம்.

அரசு அதிகாரிகள் சீர்கெட்டால் மக்கள் அழிவார்கள், அரசு சீர்கெட்டால் நாடு அழியும், தொழில்நுட்பம் சீர்கெட்டால் இந்த உலகமே அழியும்.

MOST READ: வெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்..! மீறி செய்தால் மரண கூட ஏற்படலாம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Director Shankar's Stories and His Vision on Society!

Yes! Director Shankar is much familiar for his high budget movies. But, His Stories always have some point that revolves and giving solution for some social issue.
Desktop Bottom Promotion