தாங்கள் செய்த பெரும் குற்றங்கள் குறித்து 8 நபர்கள் கூறும் இரகசியங்கள் - சீக்ரெட் டைரி!

தாங்கள் செய்த பெரும் குற்றங்கள் குறித்து 8 நபர்கள் கூறும் இரகசியங்கள் - சீக்ரெட் டைரி!

ஏதோ ஒரு தருணத்தில் நம் வாழ்வில் நாமும் வெளியே சொல்ல முடியாத ஒரு காரியத்தை செய்திருப்போம், கண்டிருப்போம், பேசி இருப்போம். அதை வெளியே கூறினால் அல்லது பிறர் அதுக்குறித்து அறிந்துவிட்டால். நம் மானம் மரியாதை போய்விடும் என்ற எண்ணம், குற்ற உணர்வு நம்மை ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டே இருக்கும்.

Confession: People Reveals About The Secret That Could Ruin Their Life!

எத்தனை நாள் தான் மறைக்க முடியும்... ஆனால், யாரிடமாவது மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்து, அவர் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணங்கள் நம்மை பாடாய் படுத்தும். அப்படி வேறு யாரும் அறியாத, இரகசியமாக பொத்திக் காக்கும் தங்கள் வாழ்வில் தாங்கள் கண்ட, பேசிய, செய்த சில காரியங்கள் குறித்து சிலர் பகிர்ந்துக் கொண்ட நிஜ வாழ்க்கை சம்பவங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பக்கத்து வீட்டு பெண்...

பக்கத்து வீட்டு பெண்...

அவள் (என் தோழி) எங்கள் பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் குடி இருந்தாள். அவர்கள் வாரம் ஒருமுறை தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த ஒரு நாள் மட்டும் அவர்கள் வீட்டில் பாசமாக வளர்க்கும் பூனையை பார்த்துக் கொள்ள கூறி, வீட்டு சாவியை எங்கள் வீட்டில் தந்து செல்வார்கள். நான் தான் அவர்கள் பூனைக்கு உணவளிப்பேன்.

அப்போது, அவள் எழுதி வந்த டைரியை யாருக்கும் தெரியாமல் நான் படித்து வந்தேன். அதனால், அவளை என்னால் நன்கு புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளுக்கு பிடித்தது போல நானும் நடந்துக் கொள்ள ஆரம்பித்தேன். அதற்கு அந்த டைரி மிகவும் உதவியது. இப்போது அவள் என் மனைவி.

போலி சான்றிதழ்...

போலி சான்றிதழ்...

நான் என் கடைசி இரண்டாண்டு கல்லூரி படிப்பதை போலியாக மாற்றினேன். என் பெற்றோர் என் மீது கொடுத்த அழுத்தம். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்டேன். அதனால், அனைவரிடமும் பொய் கூறி வந்தேன். என் சான்றிதழ்களை போலியாக உருவாக்கினேன். என் நண்பன் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு வேலை தேடிக் கொண்டேன். இந்த கம்பெனியில் கல்லூரி பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலை.

ஆனால், என் பட்டப்படிப்பு போலியானது. ஆனால், என் வேலையில் போலித்தனம் இல்லை. நன்கு வேலை கற்று, சிறப்பான ரிசல்ட்டை அளித்தேன். நான் அளித்த சான்றிதழ்களை யாரும் வெரிஃபிக்கேஷன் செய்யவில்லை என்பதால், ஈன்றும் நான் இதே கம்பெனியில் நீடித்து வேலை செய்ய முடிகிறது. இன்று தொழில் முழுவதுமாக கற்றுத் தேர்ந்துவிட்டேன். நிச்சயம் இந்த வேலையை விட்டு, வேறு வேலை தேட வேண்டும். இல்லையேல், எப்படியும் ஒரு நாள் நான் பட்டதாரி இல்லை என்பது இவர்கள் அறியவரலாம்.

அப்பா தற்கொலை..

அப்பா தற்கொலை..

அப்போது எனக்கு 17 வயது இருக்கும். எனக்கும் என் அப்பாவிற்கும் ஒரு வாக்குவாதம். அந்த வாக்குவாதத்தின் முடிவில் சொல்லக் கூடாத வார்த்தை பிரயோகம் செய்து என் தந்தையை நான் திட்டிவிட்டேன். அன்று மாலையே அவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

நானும் என் அப்பாவும் வாக்குவாதம் செய்ததே, அவர் எங்கள் வீட்டில் பேசிய கடைசி பேச்சு. இது வாழ்நாள் முழுக்க என்னை சாகடிக்கும் தண்டனை. என் வாழ்நாள் முழுக்க என்னை அவமானத்தில் கூனிக்குறுக செய்யும் அளவிற்கு என் தந்தை என்னை தண்டித்துவிட்டார். இந்த தண்டனை எனக்கு தேவை தான்.

விபச்சாரம்...

விபச்சாரம்...

என் வீட்டிலும், ஊரிலும் இருப்பவர்கள் நான் இந்த நகரில் ஒரு நல்ல வேலையில் கைநிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறேன். என்னுடன் தோழிகள் தங்கி இருக்கிறார்கள் என்று நினைத்து வருகிறார்கள். ஆனால், நான் கடந்த ஒரு ஆண்டு காலமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

அப்பாவுடன் சகோதரனின் தோழி..

அப்பாவுடன் சகோதரனின் தோழி..

அப்போது எனக்கு 13 வயது இருக்கும். ஒரு நாள் என் தந்தையும், என் சகோதரனின் தோழியையும் ஒரே படுக்கையில் கண்டேன். அதன் பிறகு அந்த பெண்ணை நான்எங்கேயும் பார்த்ததாக நினைவில்லை. ஆனால், கடந்த 6 வருடங்களாக என் தந்தையை நான் பல சூழ்நிலைகளில் இதை வைத்து பிளாக்மெயில் செய்து வருகிறேன்.

காதலியாக நினைத்து..

காதலியாக நினைத்து..

ஒவ்வொரு இரவலும் நான் படுக்கைக்கு செல்லும் போது ஒரு தலையணை மற்றும் போர்வை கூடுதலாக எடுத்துக் கொள்வேன். அதை என் காதலியாக நினைத்துக் கொள்வேன். அவளுக்கு என்னை பிடிக்காது.

உண்மையிலும் நான் காதலிக்கும் பெண்ணுக்கு என்னை பிடிக்காது. ஆனால், அவற்றை என் காதலியாக நினைத்துக் கொள்கிறேன். இது, ஒரு மோசமான பழக்கம் தான். ஆனால், இது தான் என்னை வலுவிழக்காமல் / அழிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

கருத்து திருட்டு...

கருத்து திருட்டு...

எனக்கு இரண்டு மொழி தெரியும். ஆகையால், எப்போதாவது புதிய கட்டுரை எழுத வேண்டும் வேண்டி தலைப்பு கொடுத்தால். முதலில் என் தாய் மொழியில் அதை இணையத்தில் தேடி. அதை அப்படியே வார்த்தை மாறாமல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து சப்மிட் செய்துவிடுவேன். இதுநாள் வரை இந்த கருத்து திருட்டு சம்பவத்தில் நான் சிக்கியதே இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, August 22, 2018, 15:33 [IST]
Desktop Bottom Promotion