Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ!
என்ன கொடுமை இது, இன்னும் எத்தனை நாட்களுக்கு இது தொடரும்...
பாலஸ்தீன கலைஞர் ராண்ட் ஜெரல்லா மேக்கப் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எடுத்துரைத்து வருகிறார்.
தனது கலை திறமை மூலமாக சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு தனது எதிர்ப்பை வெளிகாட்டி வருகிறார் பாலஸ்தீன பெண்ணான ராண்ட் ஜெரல்லா. முக்கியமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் கொடுமைகளை தனது மேக்கப் கலை திறமை மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

All Image Source: Instagram
சமூகத்தில் பெண்கள் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள், வேதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை இவரது மேக்கப் கலை தோலுரித்துக் காட்டுகிறது.
ராண்ட் ஜெரல்லா பிறந்து வளர்ந்தது எல்லாம் பாலஸ்தீனத்தில் தான். இவர் ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆவார். சமீபத்தில் மேஷபில் எனும் இணையத்திற்கு இவர் அளித்த பேட்டியில், #MeToo ஆன்லைன் பிரச்சாரம் தன்னை மிகவும் ஈர்த்தது என கூறியிருந்தார்.

அமில வீச்சு!
அமில வீச்சு என்பது சர்வதேச அளவில் நடந்து வருகிறது. பெண்களின் முகம் மற்றும் உடல் பாகங்களில் அமிலத்தை வீசி அவர்களது உடல் அமைப்பை சீர்குலைக்க இந்த தாக்குதல் உலகம் எங்கிலும் தொடுக்கப்படுகிறது.
இதனால் உருவ சீர்குலைவு ஏற்படுவது மட்டுமின்றி சிலர் தங்கள் கண்பார்வை மற்றும் ஊனமும் அடைகிறார்கள். உடல் ரீதியான தாக்கத்தை காட்டிலும், அமில வீச்சு தாக்குதலானது மனரீதியாக பெண்களை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

குழந்தை பாலியல் வன்முறை!
தனது குழந்தை பருவத்தில் ஒருவர் எதை கற்கிறார், எந்தவிதமான தாக்கத்திற்கு ஆளாகிறார் என்பது தான் அவரது பின்னாள் வாழ்க்கை மொத்தத்தையும் வடிவமைக்கிறது. அந்த வகையில் சிறு வயதில் பாலியல் தொந்தரவு மற்றும் குழந்தை வன்முறை, துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள் மனதளவில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இது, வருங்காலத்தில் அவர்களால் பல வகையில் சிறந்து செயற்பட முடியாமல் போக வழிவகுக்கிறது.

சமூக தந்தரவுகள்!
ஒரு பெண் தனது இலட்சியங்கள் மற்றும் கனவுகளை அடைய இந்த உலகம் அவளை பல காயங்களுக்கு ஆளாக்குகிறது. எதற்கு எடுத்தாலும் ஒரு செக் பாயின்ட் வைத்து. இதற்கு இணங்கவில்லை எனில் நீ எப்படி அடுத்த நிலைக்கு செல்கிறாய் என்று பார்க்கலாம் என்று அதிகாரவர்க்க ரீதியாக பெண்கள் காயப்படுத்த படுகிறார்கள்.

பிறப்புறுப்பு சிதைப்பு!
உலகின் பல பகுதிகளில் இளம் பெண்களுக்கு பிறப்புறுப்பு சிதைக்கும் நிகழ்வுகள் காணப்படுகிறது. பெண்ணுறுப்பில் இருக்கும் கிளிடோரிஸ் எனும் பகுதிகளை தைத்து, சிதைத்து இந்த கொடுமை நிகழ்ந்து வருகிறது.
ஜெரல்லா இக்கொடுமை 2030'வது ஒரு முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் அளவு பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வர வேண்டும் என்று வருந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மனக் கோளாறு!
இந்த படத்தை கண்டவுடன் ஏதோ அழகை குறித்த விழிப்புணர்வு என்று கருத வேண்டாம். இது அனெக்ஸோரியா பற்றியது. அனெக்ஸோரியா என்பது பசியற்ற நிலையாகும். குறைந்த உடல் எடை, ஒல்லியாக இருப்பது, உடல் எடை கூடிவிடுமோ என்ற அச்சம், உணவை குறைவாக உண்ணும் பழக்கம் போன்றவற்றால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது பல நிலைகளில், பல தாக்கங்களை உண்டாக்கும். ஒரு கட்டத்தில் எழும்பும், தோலுமாக மாறிவிடுவார்கள்.

குழந்தை திருமணம்!
உலகின் பல்வேறு சமூகங்களில் இந்த குழந்தை திருமண கொடுமை இன்றளவும் காணப்படுகிறது. இதை எதிர்த்து இன்றும் பல அமைப்புகள் போராடி வருகின்றன. இதை மோதிர விரலில் இரத்தம் கசிவது போன்ற மேக்கப்புடன் வெளிப்படுத்தியுள்ளார் ஜெரல்லா.

மாதவிடாய்!
மாதவிடாய் பற்றியும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலி பற்றியும் யாரும் பேசுவதே இல்லை. அதை வரு அவமானமாக, பேசத் தகாத விஷயமாக கருதுகிறார்கள். அதை இரத்தக்கறை படிந்த நாப்கின் ஓடு, அதுகுறித்து அனைவரும் பேச வேண்டும் என்பதை இந்த படம் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் ஜெரல்லா.

அந்த 3 நாட்கள்...
மாதவிடாய் குறித்து பேசா விட்டாலும் பரவாயில்லை. அந்த மூன்று நாட்களில் பெண்களை மதிக்கவாவது கற்றுக் கொள்ளலாம். பலரும் அந்த மூன்று நாட்களில் பெண்களை தகாத பொருளாக தான் காண்கின்றனர். அதை தனது கலை மூலம் எடுத்துரைத்துள்ளார் ஜெரல்லா.



Click it and Unblock the Notifications
