இதுவரை 6.3 கோடி பெண்கள் காணவில்லை. ஆனால், இந்தியாவுக்கு ரதயாத்திரை தான் முக்கியம்?!

Posted By: Staff
Subscribe to Boldsky

படுவேகமாக வளர்ச்சிக் கண்டு வரும் நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவில் இதுவரை 6.3 கோடிக்கும் மேலான பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள், எங்கு போனார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. இது கிட்டத்தட்ட தமிழகத்தைப் போன்ற ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை யாகும்.

இந்தாண்டு துவக்கத்தில் தி கார்டியன் என சர்வதேச ஊடகத்தில் வெளியாகியிருந்த கணக்கெடுப்பு ஆய்வில் இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக அறிய முடிந்தது. உண்மையில், அந்த கணக்கெடுப்பின் மூலம் நாம் அறிய வந்த சில தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைப்பேறு!

குழந்தைப்பேறு!

இந்தியாவின் பெரும்பாலான குடும்பங்கள் தங்களுக்கு முதல் குழந்தை ஆணாக பிறந்தால், இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள முயல்வதில்லை என்றும். முதல் குழந்தை பெண்ணாக பிறந்தால் மட்டுமே இரண்டாவது குழந்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்றும் தகவல் அறியப்படுகிறது.

அபார்ஷன்!

அபார்ஷன்!

கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை செய்தது அந்த காலம் எனில், இந்த காலத்தில் டெக்னாலஜி மூலம் பெண் சிசுவை பிறக்கும் முன்னரே அபார்ஷன் செய்துவிடுகிறார்கள். பொதுவாக நடக்கும் அபார்ஷன்களை விட, ஆண் - பெண் பாலினம் அறிந்த பிறகு நடக்கும் அபார்ஷன் தான் அதிகமாக இருக்கிறது என்று இந்த கணக்கெடுப்பு முடிவின் தகவல்கள் கூறுகின்றன.

குறுகிய பார்வை!

குறுகிய பார்வை!

இந்தியாவில் பெண்களின் மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கு காரணம் இந்திய பெற்றோர்களின் குறுகிய மனநிலை தான். இவர்கள் ஆண்களை தங்கள் சொத்தாகவும், பெண்களை தங்கள் கடனாகவும் பார்க்கின்றனர். இது கிராமம், படிக்காதவர்கள் என்றுமட்டுமல்ல, நகர்புறத்தில் வாழும் மக்களும், படித்தவர்களும் கூட இத்தகைய மனநிலையோடு தான் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆரோக்கியம்!

ஆரோக்கியம்!

படிக்க வைப்பதில் மட்டுமின்றி, ஆரோக்கியம் சார்ந்து ஆண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில், பெண் குழந்தைகள் குறைவாக தான் இருக்கிறார்கள். பல படித்த, பணக்கார பெண்களும் கூட மாமியார் கொடுமையானது ஆண் குழந்தை பிறக்காத போதுதான் துவங்குகிறது என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

வேண்டாதவர்கள்!

வேண்டாதவர்கள்!

வருடத்திற்கு இருபது இலட்சம் பெண்கள் சராசரியாக இந்தியாவில் காணாமல் போகிறார்கள். இதுவரை 6.3 கோடிகும் மேலான பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க. இந்தியாவில் தங்கள் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்ட, அல்லது வேண்டாதவர்கள் போல கருதப்படும் பெண்களின் எண்ணிக்கை 2.1 கோடி.

மூடர்கள்!

மூடர்கள்!

முக்கியமாக திருமணமான பிறகு ஆண் குழந்தை பெறாத பெண்ணை தனித்துவிடும் நிலை இந்தியாவில் இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது. ஆனால், இதற்கு காரணம் பெண்ணல்ல, ஆண் தான் என்பதை அறிவியல் ரீதியாக அறியா மூடர்கள் இந்தியார்கள் அதிகமாக உள்ளனர்.

கொண்டாட்டம்!?

கொண்டாட்டம்!?

இந்தியாவின் பல இடங்களில் ஆண்குழந்தை பிறந்தால் அந்த வீடுகளில் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதுவே பெண் குழந்தை என்றால் பெரும் சோகமாகவும், வருத்தமாகவும் காணப்படுகிறார்கள் என்று கணக்கெடுப்பு மூலம் அறியப்பட்டுள்ளது.

டவுரி!

டவுரி!

பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பெண் குழந்தைகளை சுமையாகவும், கடனாகவும் பார்ப்பதற்கு காரணம் டவுரி தான். அவளை திருமணம் செய்து வைக்கும் போது பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டும். திருமணத்திற்கு பிறகும் சீர் செய்ய வேண்டும்... பல செலவுகள் ஆகும் என்று கருதுகிறார்கள். ஆகவே, இந்தியாவில் பெண் குழந்தைகளை வெறுக்க முக்கிய காரணமாக இன்றும் இருப்பது வரதட்சணை தான்.

ஏற்றத்தாழ்வு!

ஏற்றத்தாழ்வு!

ஆண் குழந்தை என்றால் மகிழ்ச்சி, பெண் குழந்தை இகழ்ச்சி என்ற கண்ணோட்டம் ஏழை மக்களிடம் தான் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. மிகவும் பெரும் பணக்கார குடும்பமாக இருந்தாலும் கூட தனது சொத்தை ஆள்வதற்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்றே கருதுகிறார்களே தவிர, தன் சொத்து பெண்ணுக்கு போய் சேர்வதை விரும்புவதில்லை. காரணம் அது திருமணத்திற்கு பிறகு, தங்கள் மறைவுக்கு பிறகு வேறு குடும்பத்திற்கு தான் போகும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

வடகிழக்கு!

வடகிழக்கு!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால், வடகிழக்கு மானிலங்களில் மட்டுமே ஆண் - பெண் சமநிலை பிறப்பு எண்ணிக்கை சிறந்த காணப்படுகிறது. சில இடங்களில் ஆண்களை, காட்டிலும் அதிக பெண்கள் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

காரணங்கள் என்னென்ன?

காரணங்கள் என்னென்ன?

இந்தியாவின் வருடத்திற்கு இருபது இலட்சம் பெண்கள், இதுவரை 6.3 கோடிக்கும் மேலான பெண்கள் காணாமல் போவதன் காரணம் என்ன? என்று பார்த்தால்... பெண் கடத்தல், பாலியல் தொழிலுக்கு விற்கப்படுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக தான் இருக்கிறது.

பிறந்தவுடனே கருக்கொலை, குடும்ப சண்டைகளில் காணாமல் போனவர்கள், ஆண் குழந்தை பெற்றெடுக்கவில்லை என்று தனித்துவிடப்பட்டவர்கள், ஆரோக்கியம் குறித்து அக்கறை எடுத்துக் கொள்ளப்படாதவர்கள் என்ற எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.

பெண்கள் வளர்ந்துவிட்டனர், வெற்றிப்பெற்று விட்டனர் என்று நாம் கூறும், கைக்காட்டும் அந்த எண்ணிக்கை கையளவு என்றால், நம்மால், இந்திய சமூகத்தால் இன்றளவும் பாதிக்கப்பட்டு வரும் பெண்களின் எண்ணிக்கை கடலளவாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

63 Million Plus Girls Are Missing in This So Called Great Nation India!

63 Million Plus Girls Are Missing in This So Called Great Nation India!
Story first published: Monday, March 26, 2018, 11:40 [IST]