Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..!
Summer Special Thakkali Rasam In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரசம் ரொம்ப பிடிக்குமா? அடிக்குற வெயிலுக்கு அடிக்கடி உங்கள் வீட்டில் ரசம் தான் செய்வீர்களா? சொல்லப்போனால் கோடையில் பெரும்பாலான நாட்களில் மதிய வேளையில் ரசம் வைத்து சமையலை முடித்துவிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை தக்காளி ரசம் செய்யுங்கள். இந்த தக்காளி ரசமானது கோடையில் உடலுக்கு குளுமையாக இருக்கும்.

முக்கியமாக இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். இந்த தக்காளி ரசத்தை பலவிதங்களில் செய்வார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ரசப்பொடி அரைத்து தக்காளி ரசம் செய்யும் போது, அந்த ரசம் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். இப்படி ரசம் வைத்தால், வீட்டில் உள்ளோர் தட்டு சோறை நொடியில் காலி செய்துவிடுவார்கள்.
இந்த தக்காளி ரசம் குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ரசப் பொடிக்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 15
* மல்லி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காஷ்மீரி வரமிளகாய் - 1
ரச கரைசலுக்கு..
* நன்கு பழுத்த தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு
எடுத்தது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1 1/4 லிட்டர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2 (விதைகளை நீக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ரசப்பொடி
* பூண்டு - 3 பல் (இடிச்சது)
* நெய் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1 சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி,
கறிவேப்பிலை மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து கொரகொரவென்று
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு
சேர்க்க வேண்டும்.
* பின் அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாறு, சிறிது கொத்தமல்லி,
கறிவேப்பிலை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் 1 1/4 லிட்டர் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பில் வைத்து,
அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்
பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கரைத்து வைத்துள்ள ரச கரைசலை சேர்த்து, 3 பூண்டு
பற்களை தட்டிப் போட்டு, 1/2 டீஸ்பூன் நெய் மற்றும் சிறிய துண்டு
வெல்லத்தை சேர்த்து நன்கு நுரைக்கட்டி வரும் வரை கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான தக்காளி ரசம் தயார்.



Click it and Unblock the Notifications