Latest Updates
-
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மே 01-ஆம் தேதி வெள்ளிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள். நிதி பிரச்சனைகள் தீருவதோடு, புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். வணிகர்களுக்கு தொழில் சார்ந்த உறவுகள் வலுவாக இருக்கும்.வேலையில் உள்ளவர்கள் எந்தவொரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வீட்டின் பெரியவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சோதனையான நாளாக இருக்கும். முன்பின் தெரியாத நபரை கண்மூடித்தனமாக நம்புவது இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வதந்திகளை நம்புவதையும், பரப்புவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நிலுவையில் உள்ள ஒரு பணி முடிக்கப்படும். உங்கள் துணையுனான பிரச்சினையை தீர்க்க, அவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை நடத்த வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான காலங்கள் உங்கள் பொறுமையைச் சோதிக்கும், நெருங்கிய உறவினறால் பண இழப்பை ஏற்படலாம். ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது இழப்புகளைத் தடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் சில மோதல்கள் ஏற்படக்கூடும். நீங்கள் விஷயங்களை விவேகத்துடன் கையாளாவிட்டால் மன பதற்றம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கடகம்
இன்று கடக ராசிக்காரர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். இன்று கூடுதல் எச்சரிக்கை தேவை. சர்ச்சைகள் எழலாம், முக்கியப் பணிகளில் தடைகள் ஏற்படக்கூடும். உடல்நலப் பிரச்சினைகளும் தோன்றக்கூடும், எனவே அலட்சியம் கூடாது. வாகனம் ஓட்டும்போது, விபத்துகளைத் தவிர்க்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூதாதையர் சொத்துக்களால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் கூடும், தொழில் முயற்சிகளில் நஷ்டம் ஏற்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
சிம்மம்
இன்று பண விஷயத்தில் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் சிறிய முதலீடுகளைச் செய்யலாம். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றப் பாதைத் திறக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு இன்று திடீரென்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை குலைந்து போகலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை,
கன்னி
இன்று அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் இன்று ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று முதலீடு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், கவனமாக சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
துலாம்
இன்று உங்களின் புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைத் தரும். பிரச்சினைகள் முடிவுக்கு வருவதால் மன அமைதி திரும்பும். வேலை காரணமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சியான பயணத்தைத் திட்டமிடலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைப் புறக்கணிக்காதீர்கள். உங்கள் பெற்றோருக்கு சேவை செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். பழைய கடன் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். நீங்கள் ஏதேனும் கடன் பிரச்சினையில் சிக்கியிருந்தால், அதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி தீர்க்கப்படும். தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் கடின உழைப்புக்கான முழுப்பலன்களை பெறுவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இன்று எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். வியாபாரத்தில் குறைவான லாபம் ஏற்படுவது சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் பணிகளைப் பற்றிய கவலைகள் தொடரும், நீங்கள் சரியான திட்டமிடலுடன் தொடர வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் வேலையில் உங்களுக்கு முழு ஆதரவளிப்பார். குடும்ப உறுப்பினர்களின் திருமணத் திட்டத்தில் இருந்த தடைகள் நீங்கும். வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உங்களின் உத்திகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு .
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஒரு லாபகரமான நாளை அனுபவிக்கப் போகிறார்கள். ஒரு புதிய திட்டத்தை தொடங்குவது பற்றி பரிசீலித்துக்கொண்டிருந்தால், அதைத்தொடங்க இதுவே சிறந்த நேரம். மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். வணிக முயற்சிகள் நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும் மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கை இணக்கமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயரும் மரியாதையும் அதிகரிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம், குடும்ப உறுப்பினரிடமிருந்து சில கெட்ட செய்திகள் வரலாம். வியாபாரம் மந்தமாகி, வேலைக்கு இடையூறுகள் ஏற்படலாம். மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். பயணத்தின் போது சில சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, எனவே உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி, வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications