சக மாணவனால் 4 வயது சிறுமி பலாத்காரம் - கதறி அழும் தாய்!

Subscribe to Boldsky

தினசரி செய்தித்தாளில் தங்க விலை, பெட்ரோல் விலை காண்பது போல, பாலியல் துன்புறுத்தல் குறித்த செய்திகள், "பெயர் மாற்றப்பட்டுள்ளது" என்ற மேற்குறிக்குள் அந்த பெண்களின் வலியுடன் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. மாற்றப்பட வேண்டியது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை அல்ல. சமூகத்தின் சூழலை.

இன்னும் எத்தனை நாளுக்கு. இதோ, பால் குணம் மாறாத நான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. குற்றத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வய்துமட்டுமல்ல, குற்றம் செய்த சிறுவனின் வயதும் நான்கு தான்.

Whats Happening in Our Society? 4 Year Old Girl Molested by Her Classmate!

Cover Image Credit: Yourdost

இப்போது இந்த சிறுவனை இச்சை கொண்டவன் என்றோ, கொடூரன் என்றோ சொல்லப் போகிறோமா? தவறு அந்த சிறுவனின் மீதல்ல. பாலியல் ஈர்ப்பு கொள்ளும் ஹார்மோன் அவனது உடலில் துளிர்விடவில்லை.. இதனால் அவன் எந்த விதத்திலும் பெரும் உணர்வை பெற்றுவிட போவதுமில்லை.

அவன் எங்கோ கண்ட காட்சிகள், அவனது ஆழ்மனதில் பதிந்த நிகழ்வுகள். இவை தான் அச்சிறுவனை இந்த செயலில் ஈடுபட வைத்துள்ளது. தவறு செய்தது யார் தெரியுமா? சிறுவன் மீது அக்கறை காட்டாத பெற்றோரும் மற்றும் அவன் கவனத்தை திசைத்திருப்பிய சமூகமும் தான்.

இன்று தனது மகளுக்கு நடந்த கொடூரத்தை எண்ணி கதறி அழும் தாய்க்கு யார் ஆறுதல் கூறப் போகிறோம்....?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதுவும் டெல்லியில் தான்...

இதுவும் டெல்லியில் தான்...

அந்த சிறுமியின் வயது நான்கு. டெல்லியில் வாழ்ந்து வருகிறாள். சிறுமியின் தாய் தனது பச்சிளம் குழந்தையை, அவளது வகுப்பில் படிக்கும் சிறுவனே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது குறித்து NDTV தொலைக் காட்சிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

அதில், அவர் கூறியிருந்தது...

அதில், அவர் கூறியிருந்தது...

"எனது மகளின் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவன் எனது மகளை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இப்படி ஒரு சம்பவம் நடந்து வருகிறது என்பது அந்த வகுப்பாசிரியருக்கே தெரியவில்லை. அட்டன்டன்ஸ் எடுத்துவிட்டு ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேறிய பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது."

மகள் கூறியது...

மகள் கூறியது...

"அச்சிறுவன் ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேறிய பிறகு எனது மகளின் அந்தரங்க ஆடைகளை தீண்டியுள்ளான். உணவு இடைவேளையின் போது உணவருந்திவிட்டு கைக்கழுவ வாஷ்ரூம் சென்ற போது பின்தொடர்ந்து சென்று கைக்கழுவிய பிறகு அவளது அந்தரங்க உறுப்புகளை தீண்டியுள்ளான். "

கொடுமை!

கொடுமை!

"அங்கே எனது மகளுக்கு உதவ யாரும் இல்லை. அனைத்திற்கும் மேலாக மிகவும் கொடுமையான விஷயம், பென்சிலை கூர்மையாக சீவி, அதை என் மகளின் உறுப்பில் நுழைக்க முயன்றுள்ளான்..." என மன வேதனையுடன் தன் மகள் கூறியதை அந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார் அந்த தாய்.

வலி!

வலி!

வீடு திரும்பிய சிறுமி தனது தாயிடம் மிகுந்த வலிக்குள்ளானதை பற்றி கூறியிருக்கிறாள். நான்கு வருடம் எட்டு மாதங்கள் மட்டுமே ஆன சிறுமிக்கு வேறு என்ன வலி ஏற்பட போகிறது. வயிறு வலி அல்லது எரிச்சல் போன்ற உணர்வு இருக்கும் என சாதாரணமாக எண்ணியுள்ளார் அந்த தாய்.

உறங்கவில்லை

உறங்கவில்லை

கடந்த வெள்ளிக் கிழமை அன்று இரண்டு முறை வலிக்கிறது என வயிறை பிடித்துக் கொண்டு சிறுமி அழுதிருக்கிறாள். சனிக் கிழமை அன்று நிலைமை மிகவும் மோசமானது. உள்ளாடை மாற்றிவிடும் போது மிகவும் வலிக்கிறது என கூறியிருக்கிறாள். இரவு முழுக்க உறங்கவும் இல்லை. மகள் விடாமல் அழுதுக் கொண்டே இருப்பது அந்த தாய்க்கு அச்சத்தை உண்டாக்கியது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

"என்ன ஆயிற்று, எதற்கு அழுகிறாய்..." என தாய் கேள்விக் கேட்ட போது தான். தனக்கு நடந்த கொடுமைகளை மழழை மொழி மாறாத சிறுமி ஒப்பித்துள்ளார். அந்த தாய்க்கு பேரதிர்ச்சி. பிறகு சிறுமியின் பிறப்புறுப்பை பார்த்த போது வீக்கம் அடைந்திருந்தது. மறுநாளே, கணவரிடம் நடந்த அனைத்தையும் கூறி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பள்ளி நிர்வாகம்

பள்ளி நிர்வாகம்

ஞாயிற்றுக்கிழமை வகுப்பாசிரியரிடம் பேசியுள்ளார். (அப்போது அவர் பள்ளியில் இல்லை.) பள்ளியில் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என கோபத்துடன் கேட்டுருக்கிறார்கள் பெற்றோர். இதுகுறித்து புகார் அளிக்க போகிறோம். நாங்கள் உடனே பிரின்சிபால் மற்றும் நிறுவுனரை காண வேண்டும் என கேட்டுள்ளனர். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மட்டும், இதுகுறித்து பிரின்சிபால் மற்றும் ஆசிரியருடன் பேசுவதாக கூறியுள்ளார். ஆனால், பிரின்சிபால் பதில் ஏதும் பேசவில்லை.

குழந்தை மருத்துவர்!

குழந்தை மருத்துவர்!

இதற்கு இடையே சிறுமியின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. பரிசோதனை செய்த குழந்தை மருத்துவர் இது பாலியல் வன்கொடுமை தான் என கூறி, மெடிகோ-லீகல் வழக்கை தொடர்ந்தனர்.

"நாள் முழுக்க பள்ளி நிர்வாகத்தில் இருந்து யாரும் என்னை அழைத்து பேசவில்லை. திங்களன்று கவுன்சிலர் முன்னிலையில் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளித் திறக்க முடியாது" என கூறி தட்டிக்கழித்ததாக சிறுமியின் தாய் கூறியிருக்கிறார்.

போலீஸில் புகார்!

போலீஸில் புகார்!

டெல்லி துவாரக் செக்டார் 9 காவல் நிலையத்தில் FIR (0528/2017) பதிவு செய்துள்ளார். இதற்கு மத்தியில் பள்ளி நிர்வாகத்தில் இருந்து அழைத்து நாளை காலை ஒன்பது மணிக்கு கவுன்சிலரை வைத்து பேசிக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார்கள். பாலியல் கொடுமை என்றால் என்னவென்றே அறியாத சிறுமிக்கு, இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது., இதப் பற்றி நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என கேள்விக்கேட்டுள்ளார் அந்த தாய்.

சிசிடிவி!

சிசிடிவி!

"மறுநாள் காலை பள்ளி நிர்வாகத்திடம், போலீசாரிடம், மெட்ரோபொலிட்டன் நீதிபதியிடம் என அனைவரிடமும் வார்த்தை மாறாமல் தனக்கு நடந்த கொடுமையை என் மகள் அப்படியே கூறுகிறாள். எந்த அளவிற்கு அந்த நிகழ்வு அவளது மனதையும், உடலையும் பாதித்திருந்தால் இப்படி ஆழப் பதிந்திருக்கும்" எனக் கேட்டிருக்கிறார் எந்த சிறுமியின் தாய்.

"சிசிடிவியில் பதிவானவற்றை பரிசோதித்த போது வகுப்பாசிரியர் எந்த கவலையும் இன்றி, வகுப்பை ஒரு ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றிவிடுகிறார். எனது மகள் கூறியது போலவே, வகுப்பில் இருந்து அனைவரும் வெளியேறிய பிறகு அந்த சிறுவன் செய்த காரியங்களும் பதிவாகியுள்ளன. இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும்?" என மேலும் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார் அந்த தாய்.

எச்சரிக்கை மணி!

எச்சரிக்கை மணி!

இந்த மொத்த நிகழ்வின் மூலம் நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கயமான விஷயம். பள்ளி நிர்வாகம் எவ்வளவு கவனமின்றி செயல்பட்டு வந்துள்ளது என்பது. நான்கு வயது சிறுமி படிக்கும் வகுப்பை கூட சரியாக கண்காணிக்க முடியவில்லை எனில், இவர்கள் எப்படி ஒரு பள்ளியை சிறந்த முறையில் நிர்வாகம் செய்வார்கள். இது பெற்றோருக்கு பெரும் அச்சத்தை அளிக்கிறது.

அழைப்பு

அழைப்பு

செவ்வாய்க்கிழமை மதியம் என்னை காண வேண்டும் என பள்ளி நிர்வாகத்தில் இருந்து அழைப்பு வருகிறது. நான் எதற்கு பார்க்க வேண்டும் என கேட்டேன். அவர்கள் எனக்கு உதவக் காத்திருப்பதாக கூறினார்கள். எனது கடமையை நான் சிறப்பாக செய்ததை கண்டு பள்ளி நிர்வாகம் பெருமைப் படுகிறது என்றும் கூறினார்கள். ஆனால், எனது கேள்வி என்னவெனில்...

1. அந்த பிரின்சிபால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் வகுப்பாசிரியரை பணிநீக்கம் செய்வீர்களா?

2. அந்த சிறுவனை டிஸ்மிஸ் செய்வீர்களா?

3. என் மகள் எதிர்கொண்ட கொடுமைக்கு வருத்தம் தெரிவித்து பள்ளியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு செய்வீர்களா?

4. நான் இரண்டு ஆண்டுகள் கட்டணமாக செலுத்திய பணத்தை திருப்பித் தருவீர்களா?

5. எனது மகளுக்கு டி.சி கடுத்து வேறு இடத்தில் அச்சமின்றி படிக்க வைக்க முயற்சிகள் எடுப்பீர்களா?

என்பதே ஆகும்.

எனது கேள்விக்கு, பள்ளி நிர்வாகத்தில் இருந்து கால் செய்தவர் "எங்களுக்கு ஒரு கமிட்டி இருக்கிறது. அவர்கள் கூடி ஒரு முடிவை சொல்வார்கள்" என பதில் கூறினார்.

இது தான் நடவடிக்கையா?

இது தான் நடவடிக்கையா?

மேலும், திங்களன்றே அந்த சிறுவனின் வகுப்பை மாற்றிவிட்டதாகவும், வேறு செக்ஷனில் அவனை சேர்க்க கூறிவிட்டோம் என்றும் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இதுதான் இவர்கள் எடுக்கும் சிறந்த முடிவா? அவர்கள் செய்த தவறுகள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக தெரிந்தும் கூட, அதற்கான சரியான முடிவை எடுக்க அவர்கள் தயங்குகிறார்கள்.

அந்த பள்ளியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்ற மகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சும் வகையில் இவர்கள் பள்ளியை நடத்து வருகிறார்கள். நான் மருத்துவமனைக்கு சென்ற போது பள்ளியில் இருந்து ஒருவரும் உங்கள் மகள் எப்படி இருக்கிறாள் என ஒரு கால் கூட செய்யவில்லை. போலீஸிடம் சென்ற போதும் இதே நிலை தான்.

அச்சம்!

அச்சம்!

எப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகும், என் மகளுக்கு நடந்தது பாலியல் வன்கொடுமை என ஊர்ஜிதம் ஆனபிறகும் தான் பள்ளி நிர்வாகம் என்னை தொடர்புக் கொண்டு பேச வருகிறது. காரணம், எங்கே பள்ளி பெயர் கெட்டுவிடுமோ என.

வாழ்நாள் முழுக்க என் மகளின் மனதில் இந்த காயம் ஆறாதவடுவாக இருக்குமே அதற்கு இந்த பள்ளி நிர்வாகம் என்ன பதில் கூறும். என்னைப் பொறுத்தவரை அவளுக்கு மற்றொரு சிறந்த பள்ளியில் நல்ல கல்வி அளிக்க வேண்டும். அவளை மீண்டும் ஆரோக்கியமணா நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே ஆகும்.

சமூகத்தின் அவலம்!

சமூகத்தின் அவலம்!

இன்னும் முழுதாய் பூக்காத மலரவள். அவளை தளர்ந்து போக செய்துள்ளது அந்த பள்ளியின் கவனக்குறைவு. இதற்கெல்லாம் என்ன தண்டனை கிடைத்துவிடப் போகிறது என்ற அலட்சியம்.

நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என இப்போதாவது உங்களுக்கு புரிகிறதா? என் வேதனையும், என் மகள் அடைந்திருக்கும் வலியும் யாராலும் உணர முடியாது. யாரும் இப்படி ஒரு நிலையை உணரவும் வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  English summary

  Whats Happening in Our Society? 4 Year Old Girl Molested by Her Classmate!

  Whats Happening in Our Society? 4 Year Old Girl Molested by Her Classmate!
  Story first published: Wednesday, November 29, 2017, 14:00 [IST]
  இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more