7 நாட்கள் அடைத்து வைத்து 9 ஆண்களால் தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்ட அப்பாவிப் பெண்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் நாள்தோறும் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. செய்தித்தாள்களைப் பார்த்தால், பக்கத்திற்கு ஒரு கற்பழிப்பு செய்தி இல்லாமல் இருப்பதில்லை. அந்த அளவு நம் நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருப்பது தெரிகிறது.

இருப்பினும் இந்திய அரசால் பெண்கள் சந்திக்கும் இந்த பெரும் பிரச்சனைக்கு ஒரு கடுமையான தீர்வு கொண்டு வர முடியவில்லை என்று நினைக்கும் போது தான் வருத்தமாக உள்ளது.

இக்காலத்தில் பெண்கள் தைரியமானவர்களாக இல்லாவிட்டால், பிழைக்கவே முடியாது என்பதற்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வழக்கு உதாரணம். அது என்னவெனில் ஒரு பெண், 9 ஆண்களால் பல நாட்களாக அடைத்து வைத்து தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்டு வந்தாள்.

அப்பெண் மன தைரியத்தை அதிகரித்துக் கொண்டு அவர்களை எதிர்த்துப் போராட முடிவெடித்த பின்பு தான், இந்த கொடுமையில் இருந்து விடுதலையே கிடைத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த பெண்...

அந்த பெண்...

இந்த உலகில் துணையின்றி தனியாக வாழும் ஒரு பெண், தன் குழந்தையுடன் வாழ்வை நடத்த முடியும் என்றாலும், மனதில் நஞ்சு கலந்து சுற்றித் திரியும் சில ஆண்களின் மத்தியில், தனியாக ஒரு பெண் வாழ்வது என்பது பெரிய சவாலான ஒன்று.

அப்படி தான் இந்த பெண் தன் குழந்தையுடன் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தாள். குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமென்பதற்காக, கஷ்டப்பட்டு ஓர் அலுவலகத்தில் சேர்ந்து கடுமையாக வேலை செய்து வந்தாள்.

வீடு திரும்பும் போது...

வீடு திரும்பும் போது...

ஒரு நாள் ஷிப்ட் முடிந்து வீட்டில் குழந்தை தனியாக இருக்கும் என்று அவசரமாக ஆட்டோவில் செல்ல நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது பார்க்க நல்லவர் போன்று ஒருவர் வந்து லிப்ட் தருவதாக கூறினார். ஆரம்பத்தில் சற்று யோசித்த அந்த பெண், பின் குழந்தை தனியாக இருக்கும் என்றும் அவரது வண்டியில் ஏறிக் கொண்டார்.

வீட்டில் இறக்கி விட்ட பின்...

வீட்டில் இறக்கி விட்ட பின்...

வண்டியில் ஏறிய அந்த பெண்ணிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்த அந்த ஆண், தனது 2 வயது குழந்தையுடன் தனியாக அப்பெண் இருப்பதை அறிந்து கொண்டான். அப்பெண்ணை வீட்டில் இறக்கிவிட்ட அந்த ஆண், பின்பு...

அவளைப் பின் தொடர்ந்தான்...

அவளைப் பின் தொடர்ந்தான்...

அப்பெண்ணை இறக்கிவிட்ட பின், அவன் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று சொல்லி, அப்பெண்ணுடன் வீட்டினுள் நுழைந்தான், அப்போது அவளுக்கு சோதனை ஆரம்பமாகிவிட்டது. அந்த கொடிய மிருகம் அப்பெண்ணின் 2 வயது குழந்தையின் முன்பே கற்பழித்தான்.

நண்பர்களை அழைக்கவே...

நண்பர்களை அழைக்கவே...

அப்பெண்ணை இரவு முழுவதும் பலாத்காரம் செய்த பின், வீட்டை வெளியே பூட்டிவிட்டு, தனது 8 நண்பர்களுடன் அடுத்த நாள் மீண்டும் வீட்டிற்கு வந்து, பல மணிநேரம் பலாத்காரம் செய்யப்பட்டாள். அந்த கொடிய மிருகங்களும் அப்பெண்ணின் வலியை சந்தோஷமாக மகிழ்ந்துள்ளனர்.

7 நாட்கள்...

7 நாட்கள்...

இந்த கொடுமை 7 நாட்களாக தொடர்ந்து நடந்துள்ளது. பின் அப்பெண் வலியுடன் இதற்கு முடிவுகட்ட வேண்டுமென எண்ணி, மனதில் தைரியத்தை அதிகரித்துக் கொண்டு, தான் பலவீனமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல், எதிர்க்க முடிவெடுத்தாள்.

கதவுக்கு பின்னாள் மறைந்து கொண்டாள்...

கதவுக்கு பின்னாள் மறைந்து கொண்டாள்...

அந்த பெண்ணிற்கு அந்த ஆண்கள் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று தெரியும். எனவே அவர்கள் வரும் நேரத்தில் கதவுக்கு பின் மறைந்து கொண்டு, கதவைத் திறந்த பின் அவர்களை தள்ளிவிட்டு வெளியே சென்று தன்னால் முடிந்த அளவு கூக்குரலிட்டு கதறி உதவிக்கு ஆட்களை அழைத்தாள். அப்போது சாலையில் நடந்து கொண்டிருந்த ஒரு ஆண் அப்பெண்ணின் கதறல் குரலைக் கேட்டு, வீட்டிற்குள் வந்து, அப்பெண்ணைக் காப்பாற்றினார்.

சிறை...

சிறை...

தற்போது அப்பெண்ணை பலாத்காரம் செய்த ஆண்களுள் சிலர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர் மற்றும் சிலர் தங்களுக்குள்ள அதிகாரத்தால் ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மீண்டு வர முயற்சி...

மீண்டு வர முயற்சி...

தற்போது அந்த பெண் தான் அனுபவித்த உடல் மற்றும் மன வலியை மறப்பதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளார். மன வலியை மறப்பதற்கு உளவியல் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களே இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபட்டு, பெண்களைத் துன்புறுத்தினால், பெண்கள் வேறு எங்கு செல்வார்கள்? ஒரு ஆண் நல்லவனாக, பெண்களை மதித்து நடப்பது ஒரு பெற்றோரின் வளர்ப்பில் தான் உள்ளது என்பதை ஒரு போதும் மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

She Was Raped By 9 Men Until She Decided To Fight Back

She was raped by 9 different men, but did not have strength to stop this ordeal, until one fine day...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter