Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு பற்றிய கதை!
கிருஷ்ண பரமாத்மா பற்றிய கதைகள் அனைத்தும் இந்து மதத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அவைகள் நமக்குள் பிரம்மிப்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கும். இந்து கடவுள்களில் புகழ் பெற்ற கடவுளாக அறியப்படும் கிருஷ்ணர், தன் வசீகரம் மற்றும் துடிப்பான குணநலனால் அனைவரையும் கவர்கிறார்.
கிருஷ்ணரை விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரமாக பார்க்கின்றனர். இப்படி போகிறது இந்த கதை...

விஷ்ணுவின் உதவியை நாடிய பூமி மாதா
இந்த பூமியில் மனிதர்களின் பாவ மூட்டைகள் மலை கணக்கில் பெருகி போனதால் (தாவரங்கள், மிருகங்கள், தண்ணீர், காற்று மற்றும் அவர்களையே அழித்து வரும் மனிதர்களின் பாவங்கள் இதில் அடக்கம்), அதனை தாங்க முடியாத பூமா தேவி, நிலைமை மோசமாவதற்குள் விஷ்ணு பகவானின் உதவியை நாடினார். இந்து சமயத்திரு நூல்களின் படி, இதுவே கிருஷ்ண பரமாத்மா அவதரிப்பதற்கு தூண்டுதலாக அமைந்தது. அவர் அவதரித்ததற்கு முக்கிய காரணமாகவும் இது கருதப்படுகிறது.

கம்சனின் சபதம்
கம்சன் என்ற வடிவில் தீய சக்தியாக வாழ்ந்து வந்தவன் மதுராவை ஆண்டு வந்த கொடுங்கோல் மன்னன். தீய சக்தியின் உச்சத்திற்கே சென்றது கம்சன் செய்த பாவங்கள். அப்போது கம்சனின் சகோதரியான தேவகியை வாசுதேவன் திருமணம் செய்யும் நாள் வந்தது. திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு தெய்வீக குரல் இதனை கூறியது "வாசுதேவன் மற்றும் தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ கொல்லப்படுவாய்". இதனை கேட்டு கோபத்தின் உச்சியை அடைந்த கம்சன் உடனடியாக தன் வாளை உருவி தேவகியை கொல்ல முற்பட்டான். இருப்பினும் தன் மனைவியின் உயிரை பறிக்க வேண்டாம் என வாசுதேவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவளை உயிருடன் விட்டு வைத்தான். அதற்கு பிரதிபலனாக தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்து விடுவதாக அவன் வாக்களித்தான். அவர்களை கூர்ந்து கவனிக்க அவர்கள் இருவரையும் சிறை வைத்தான் கம்சன்.

கிருஷ்ணனின் பிறப்பு
அந்த தம்பதிக்கு ஒவ்வொரு குழந்தை பிறந்த போது, ஒவ்வொருவரையாக கொலை செய்தான் கம்சன். 7 ஆவது குழந்தையை கொன்ற பிறகு, இதனை கண்டு பயந்த அவர்கள் தங்கள் எட்டாவது குழந்தையை காக்குமாறு விஷ்ணு பகவானிடம் மன்றாடினார். ஒரு இரவு வாசுதேவனின் கனவில் வந்த விஷ்ணு பகவான், அவரின் தீவிர பக்தனான நந்தா என்ற மாடு மேய்ப்பாளரிடம் குழந்தையை எடுத்துச் செல்லுமாறு கூறினார். தனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை அதே தினத்தில் பிறக்க போகும் நந்தாவின் பெண் குழந்தையுடன் மாற்றிக் கொள்ள வாசுதேவனுக்கு அவர் உத்தரவிட்டார்.

விஷ்ணு பகவானின் திட்டம்
வாசுதேவனுக்கு பிறந்த எட்டாம் குழந்தை வேறு யாரும் அல்ல; விஷ்ணு பகவானின் அவதாரமே அக்குழந்தை. அக்குழந்தை பிறந்ததும் தானாக திறந்த கொண்டது சிறைச்சாலை கதவுகள். மேலும் கட்டிபோட்டு வைக்கப்பட்டிருந்த வாசுதேவனின் கயிறுகள் தானாக விடுவித்துக் கொண்டது. அதனுடன் சேர்ந்து இடியுடன் கூடிய பேய் மழை பெய்தது. தன் குழந்தையை நந்தாவிடம் எடுத்துச் சென்ற போது வாசுதேவனுக்கு நதிகள் பாதையை அளித்தது. வாசுதேவன் தன் ஆண் குழந்தையை நந்தாவிடம் ஒப்படைத்த பின்பு, நந்தாவிற்கு அன்று பிறந்த பெண் குழந்தையுடன் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பினான் வாசுதேவன். நடந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் கம்சனுக்கு தெரியவில்லை.

தேவதையாக மாறிய நந்தாவின் குழந்தை
நந்தாவின் பெண் குழந்தையை கொல்ல கம்சன் சென்ற போது, திடீரென தேவதையாக மாறிய அக்குழந்தை "உன்னை கொல்லப்போகும் குழந்தை ஏற்கனவே இந்த அண்டத்தில் வேறு எங்கோ பிறந்து விட்டது. உன்னை கொள்வதற்கான வயதை அது எட்டும் வரை அது யார் என்பதை உன்னால் கண்டு பிடிக்க முடியாது" என கம்சனிடம் கூறியது.
இது கிருஷ்ணரின் பிறப்பிற்கு பின்னால் இருக்கும் சிறிய கதை. மேலும் இந்த கதையானது இந்து இதிகாசத்தில் உள்ளபடி விளக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











