Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கருப்பு நிற புடவையில் ஹாட்டாக வந்த பிரியங்கா சோப்ரா!
சமீபத்தில் மும்பையில் பழம்பெரும் நடிகரான திலீப் குமார் அவர்களின் சுயசரிதை வெளியீட்டு நிகழ்ச்சியில் எண்ணற்ற நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அதில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா பாரம்பரிய உடையான புடவையில் வந்திருந்தார். மேலும் புடவைக்கு அவர் மேற்கொண்ட ஸ்டைல்கள் அவரை அழகாக வெளிக்காட்டியது.
அதுமட்டுமின்றி, பிரியங்கா சோப்ரா உடுத்தி வந்த புடவையைப் பார்த்தால், கடந்த வருடம் நடந்த கேன்ஸ் விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்தது போன்றே இருக்கும். இங்கு சுயசரிதை நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சப்யசாச்சி புடவையில் பிரியங்கா
பிரியங்கா சோப்ரா பிரபல டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்த கருப்பு நிற புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவையின் கீழே போல்கா டிசைன் கொண்டிருக்கும். மேலும் இந்த புடவையை பிரியங்கா சோப்ரா மிகவும் அழகாக உடுத்தியிருந்தார்.

பிரியங்காவின் மேக்கப்
பிரியங்கா சோப்ரா அளவாக மேக்கப் போட்டிருப்பதுடன், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, நெற்றியில் அழகான மெரூன் நிற வட்ட வடிவ பொட்டு வைத்திருந்தது, அவருக்கு பாரம்பரிய தோற்றத்தை அள்ளிக் கொடுத்தது.

பிரியங்காவின் காதணி
பிரியங்கா சோப்ரா புடவைக்கு பொருத்தமான வளையம் மற்றும் ஜமிக்கி கொண்ட கம்மல் அணிந்து வந்திருந்தார்.

அழகான கொண்டையில் பிரியங்கா
பிரியங்கா புடவைக்கு மிகவும் அழகாக கொண்டை போட்டு வந்திருந்தார். இதனால் இவரது அழகு இன்னும் அதிகரித்து வெளிப்பட்டது.

மாதுரியுடன் பிரியங்கா
இது மாதுரி தீட்சித் மற்றம் பிரியங்கா சோப்ரா அருகில் ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்தது.

அமிதாப் பச்சனுடன் பிரியங்கா
இது நடிகர் அமிதாப் பச்சனுடன் உரையாடும் போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
