Latest Updates
-
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க!
அபாலா நகைகளில் ஜொலிக்கும் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்!
மும்பையில் நேற்று 2014 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜவல்லரி வீக் என்ற ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இந்த ஃபேஷன் ஷோவின் முதல் நாளில் சுமித் சாஹ்னி வடிவமைத்த அபாலா நகைகளை பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் அணிந்து ராம்ப் வாக் நடந்தார். மேலும் டிசைனர் சுமித் அவர்கள் சன்னி லியோனை ஷோஸ்டாப்பராக அழைத்து வந்திருந்தார். இந்த நகைகளில் சன்னி லியோன் மிகவும் அழகாக இருந்தார். இங்கு அந்த இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக்கில் சன்னி லியோன் அணிந்து வந்த நகை மற்றும் இதர அபாலா கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின ராணி
சன்னி லியோன் பழங்குடியின ராணி உடை போன்று அணிந்து வந்திருந்தார்.

பாஜூ பேண்ட்
சன்னி லியோன் கைகளுக்கு தங்கம் மற்றும் வைரம் கலந்த பாஜூ பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

பராண்டி
சன்னி லியோன் அணிந்து வந்த நெக்லேஸின் பின்புறம் வால் போன்று பச்சை நிற பராண்டியானது இருந்தது. இது இன்னும் அற்புதமாக இருந்தது.

தலையில் வைர நெக்லேஸ்
சன்னி லியோன் தலைக்கு மூன்று வரிசை கொண்ட வைர நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார். இது அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

சில்வர் தட்டுக்கள்
இந்த மாடல் அணிந்து வந்திருப்பது முற்றிலும் பழங்காலத்தினர் அணிவது போன்றதாகும். மேலும் இந்த டிசைனில் பெரும் ஹைலைட் என்னவென்றால் இதில் சில்வர் தட்டுக்கள் கொண்டிருப்பதாகும்.

பின்புற நெக்லேஸ்
பழங்குடியினர் பெரும்பாலும் ஸ்ட்ராப்லெஸ் உடை அணிவதோடு, தற்போது அதுவே மிகவும் பிரபலமானது என்பதால், அந்த உடைக்கு ஏற்றவாறு சுமித் நெக்லேஸின் பின்புறம் டாலர் அணிவது போன்று டிசைன் செய்துள்ளார்.

ஸ்பைக்ஸ் மற்றும் நீல மெட்டல்
பெரும்பாலான பழங்குடியினர் ஸ்பைக்ஸ் கொண்ட ஆபரணங்களைத் தான் அணிவார்கள். எனவே அதற்கேற்றவாறு சுமித் ஸ்பைக்ஸ் மற்றும் நீல நிற மெட்டல் கொண்ட நகையை வடிவமைத்து வெளியிட்டார்.

நீளமான நகை
இது தான் டிசைனர் சுமித் வடிவமைத்த பழங்குடியினர் அணிவது போன்ற நீளமான நெக்லேஸில் நீல நிற யானை மற்றும் தட்டையான டாலர் கொண்ட ஆபரணம்.

காதணி
பழங்குடியின ராஜாக்கள் தங்கள் ஒற்றை காதுகளில் காதணி அணிவது வழக்கம். எனவே அதற்கேற்றாற் போல் சுமித் ஆண்களுக்கான காதணியை வடிவமைத்து வெளியிட்டார்.

சில்வர் மாலை
இந்த மாடல் தங்க நிற நெக்லேஸ் அணிந்திருப்பதுடன், அதற்கு மேல் சில்வர் மாலை அணிந்து வந்திருப்பது, தோற்றத்தை பழங்குடியினர் போன்றே வெளிக்காட்டியது.



Click it and Unblock the Notifications
