Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
மத்திய சீனா வரை ஆட்சி செய்த அலெக்ஸாண்டருடன் ஒப்பிடப்படும் இந்த இந்திய அரசரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
இந்திய வரலாற்றில் பல மன்னர்கள் தங்களின் அடையாளத்தை அவர்கள் உருவாக்கிய அழிக்க முடியாத நினைவுச்சின்னங்கள் மூலம் விட்டுச் சென்றுள்ளனர். இப்போது நாம் ஆச்சரியமாக பார்க்கும் பல கோவில்கள் இப்படி தங்களின் அடையாளத்தையும், வலிமையையும் உணர்த்த அரசர்களால் உருவாக்கப்பட்டதுதான். அப்படி இப்போதும் அடையாளமாக நிற்கும் ஒட்டு கோவில்தான் மார்டண்ட் சூரியன் கோவில்தான்.

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான மார்டண்ட் சூரியன் கோயில் உள்ளது. இன்று, அது சிதிலமடைந்து இடிபாடுகளுடன் நிற்கிறது, இது அந்த காலக்கட்டத்தின் பிரம்மாண்டத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த கோவிலை விட, அதைக் கட்டிய மன்னர் லலிதாதித்ய முக்தபிதாவின் கதை இன்னும் சுவாரஸ்யமானது.
லலிதாதித்ய முக்தாபிதா (724 CE-760 CE) காஷ்மீரின் கர்கோடா வம்சத்தின் சக்திவாய்ந்த காயஸ்த ஆட்சியாளர். 12 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் கல்ஹானா, அவரை உலகளாவிய மன்னர் அல்லது உலகத்தை வென்றவர் என்று அழைக்கிறார், மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின் ஆர்பியன் கடலின் கரையோரப் பகுதி வரையிலான தொலைதூர வெற்றிகள் மூலம் அவர் பெரும் புகழைப் பெற்றார்.
கல்ஹானாவின் கூற்றுப்படி, லலிதாதித்யா கன்னோஜ் மன்னர் யசோவர்மனை தோற்கடித்தார், பின்னர் இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு அணிவகுத்துச் சென்றார். நவீன ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைகளிலிருந்து அசாம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகள் வரை லலிதாதித்யாவின் சாம்ராஜ்யம் பரவியிருந்தது. லலிதாதித்யா காஸ்பியன் கடலின் கரைக்குச் சென்று பாமிர்ஸைக் கடந்தார். அதையும் கடந்து திபெத்துக்கும் சீனாவுக்கும் அணிவகுத்துச் சென்றார். அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டினார்.
லலிதாதித்யா அவரது வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசராக அறியப்படுகிறார். அசோகருக்குப் பிறகு மிகப்பெரிய பேரரசைக் கட்டினார். அவர் வடமேற்கு இந்தியாவிலிருந்து அரேபியர்களை விரட்டியடித்து, அப்போதைய சக்திவாய்ந்த திபெத்தை மீண்டும் மீண்டும் தோற்கடிப்பதன் மூலம் டோகாரிஸ்தானில் இருந்து சீனாவிற்கு சர்வதேச வர்த்தக பாதைகளை கட்டுப்படுத்த 'டோக்கரிஸ்தானை கைப்பற்றியதாக நம்பப்படுகிறது. அவர் தனது இராஜதந்திரத்தால் சீனாவை கைப்பற்றினார். பரிஹாசபுரத்தில் ஒரு புதிய தலைநகரம் உட்பட பல நகரங்களையும் அவர் நிறுவினார். காலத்தின் மாறுபாடுகளை எதிர்த்து இன்றும் தனித்து நிற்கும் சிறந்த கட்டிடங்களை அவர் கட்டினார்.
மார்டண்ட் சூரியன் கோவில்
லலிதாதித்ய மன்னன் காஷ்மீரில் தெற்கு காஷ்மீரில் உள்ள மட்டன் நகருக்கு அருகில் உள்ள பீடபூமியில் மார்டண்ட் சூரியன் கோவிலைக் கட்டினார். கோவிலின் இருப்பிடம் அந்தக் கால காஷ்மீரி கைவினைஞர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தை நிரூபிக்கிறது. இந்தக் கோவிலில் இருந்து, லிடர் பள்ளத்தாக்கு முழுவதையும், இன்றைய பிஜ்பிஹாரா நகருக்கு அருகில் உள்ள இடிக்கப்பட்ட விஜேஷவரா ஆலயத்தின் சிகரத்தையும் காணலாம் என்று கூறப்படுகிறது. மார்டண்ட் சூரியன் கோவிலில் 84 செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன, அவற்றில் பல உடைந்து கிடக்கின்றன. இந்த பிரம்மாண்டமான சூரியக் கோவிலின் கட்டுமானத்தில் கற்களில் செதுக்கப்பட்ட அழகிய உருவங்கள் பயன்படுத்தப்பட்டன.
மன்னர் லலிதாதித்யா சூரியனை வணங்குபவர் மற்றும் கேஷவ விஷ்ணு வழிபாட்டிற்கு அர்ப்பணித்த வைஷ்ணவ வழிபாட்டைப் பின்பற்றியவர். அதன்படி, இந்த கோவிலின் சுவர்களில் பல மூன்று முகம் கொண்ட விஷ்ணு மற்றும் சில சதுர்புஜ விஷ்ணு உருவங்கள் முக்கியமாக செதுக்கப்பட்டுள்ளன. போதுமான கவனிப்பின்மை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்தப் சிலைகளில் பெரும்பாலானவை சிதைந்துவிட்டன.
இந்தியாவை தாண்டி திபெத், மத்திய சீனா வரை அதிகாரம் செலுத்திய அலெக்சாண்டர் தி கிரேட் உடன் ஒப்பிடப்பட்டார். அவரது ஆட்சியின் கீழ், காஷ்மீர் அபரிமிதமான செல்வத்தையும் வளர்ச்சியையும் கண்டது, இதில் கோவில்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டன. லலிதாதித்யா மன்னரின் அடையாளமாக நிற்கவும் மார்டண்ட் சூரியக் கோவில் ஆட்சியாளர் சிக்கந்தர் ஷா மிரியால் அழிக்கப்பட்டாலும், அதன் இடிபாடுகள் காந்தரன், குப்தா மற்றும் சீன கட்டிடக்கலை பாணிகளின் கலவையை இன்னும் சுமந்து நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் எந்த வரலாற்றுப் புத்தகமும் இந்த மாபெரும் அரசருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நம்மில் பலரும் இந்த அரசரைப் பற்றி கேள்விப்படுவது இதுதான் முதல் முறை என்பது வேதனைக்குரியது.



Click it and Unblock the Notifications
